SBS Tamil

SBS Tamil - SBS தமிழ்

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - ஆஸ்திரேலிய செய்திகள், உலகச் செய்திகள், நேர
SBS Tamil - SBS தமிழ்

Description

Categories

News & Politics

Episodes

Coronavirus updates 03 Apr 2020 - கொரோனா: இன்றைய முக்கிய தகவல்கள்

Apr 3, 2020 0:09:21

Description:

The number of coronavirus cases worldwide has passed one million, with Italy, Spain and the United States still among the worst-hit countries.

-

உலகளவில் கொரோனா வைரஸ் COVID-19 தொற்று ஏற்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்துவிட்டது.  இத்தாலி, ஸ்பெய்ன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

Australian News 03 Apr 2020 - COVID-19 தொற்றுக்குப் பலியானவர்கள் 28 ஆக உயர்வு

Apr 3, 2020 0:10:16

Description:

Australian news bulletin aired on Friday 03 April 2020 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (03/04/2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். 

Australian News 01 Apr 2020 - கொரோனா அச்சம் காரணமாக உல்லாசக் கப்பலை நாட்டிலிருந்து வெளியேற உத்தரவு.

Apr 1, 2020 0:08:38

Description:

The news bulletin broadcasted on 01 April 2020 at 8pm. Read by Praba Maheswaran.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (01 April 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Focus: Tamil Nadu/India - டெல்லி மாநாடு காரணமாக கொரோனா அச்சம்

Apr 1, 2020 0:06:46

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்து உள்ளது! நேற்று ஒரே நாளில் சுமார் 50-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாவதற்கு ஒரு சமுதாயமே காரணம் என்ற ரீதியில் தற்போது செய்தி ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் மறைமுகமாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த செய்திகள் குறித்து ஒரு பார்வை! நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Coronavirus updates - 01 Apr 2020 - கொரோனா: இன்றைய முக்கிய தகவல்கள்

Apr 1, 2020 0:07:03

Description:

An update on Coronavirus pandemic. By Praba Maheswaran.

-

கொரோனாவைரஸ் COVID - 19 நாட்டில் வேகமாக பரவிவரும் பின்னணியில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய இன்றைய(01 Apr 2020) முக்கிய தகவல்களின் தொகுப்பு இது.

தொகுத்தவர்: மகேஸ்வரன்பிரபாகரன்.

Coronavirus in Spain is 'frightening on every level' - ‘மீண்டும் எனது குடும்பத்தை பார்ப்பேனா‘-ஸ்பெயின்வாழ் தமிழரின் அனுபவம்!

Mar 30, 2020 0:09:26

Description:

Spain is on a horrifying upward trajectory, having now surpassed China in the number of cases and fast approaching Italy when it comes to the number of deaths. Medical resources to combat the pandemic are widely reported as running dangerously low in some areas. Jathees Shanmugalingam-a resident of Málaga, Spain shares his experience. 

-

கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் இதுவரை 9300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமன்றி போதிய மருத்துவ வசதிகளின்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப்பின்னணியில்  ஸ்பெயினில் வாழ்ந்துவரும் ஜதீஸ் சண்முகலிங்கம் அவர்கள் அங்குள்ள நிலைமை தொடர்பிலும் தனது அனுபவத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Australian News 30 Mar 2020 - செயற்படமுடியாத நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வாரத்துக்கு 750 டொலர்கள் கொடுப்பனவு!

Mar 30, 2020 0:09:40

Description:

The news bulletin was aired on 30 March 2020 (Monday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (29 மார்ச் 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா

Focus: Sri Lanka - கொரோனா வைரஸ்: இலங்கை நிலவரம்

Mar 30, 2020 0:05:36

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

கொரோனா தொற்றினால் இலங்கையில் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
தொற்றுக்குள்ளாகியவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வசித்த கிராமங்கள் சில தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல
8 பேரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் வடக்கு கிழக்கினை சேர்ந்த இருபதிற்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டனம் வெளியிட்டுள்ளன. இவை குறித்த
செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.

Coronavirus: What is 'flattening the curve' - கொரோனா வைரஸ்: வளைகோட்டை கிடையாக்குவது எப்படி?

Mar 30, 2020 0:08:33

Description:

Experts are telling us that staying home is the one way to "flatten the curve" of the number of COVID-19 cases and prevent an overload of hospitilizations. Dr.Vajna Rafeek explains more.

-

சர்வதேசரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும்  கொரோனா  தொற்று நோய் பரவல் தொடர்பில் Flattening the Curve என்ற சொற்பதம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. Flattening the Curve என்ற நிலை உருவாகும் போது, வைத்திய வசதிகள் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதோடு, வைத்திய உபகரணங்களை, தேவையான நோயாளிகளுக்கு கொடுக்கக் கூடிய வசதிகள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பிலும் கொரோனா அறிகுறி ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பேர்னில் குடும்ப மருத்துவராக பணியாற்றும் வஜ்னா ரஃபீக் அவர்கள். அவரோடு உரையாடுபவர் றேனுகா.

Coronavirus: Are we doing enough, and right? - கொரோனா பரவலை தடுப்பதில் தமிழ் சமூகம் தனது பங்கை சரியாகச் செய்கிறதா?

Mar 29, 2020 0:17:25

Description:

 Is the Tamil community in Australia doing enough and right thing to contain the spread of Coronavirus? The opinion shared by pour listeners. Guest: Dr Jeyamohan, Oncologist and social activist.      

-

கொரோனா வைரஸ் நோய் ஏற்படுத்தும் சமூக தாக்கம் என்ன? நலம் தொடர்பான தகவல் என்ன? வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் ஒலித்த நேயர்களின் கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்: மருத்துவர் ஜெயமோகன் அவர்கள். புற்றுநோய் தொடர்பான மருத்துவரும் , நாடகங்கள் வழி தமிழ் சமூக மேம்பாட்டுக்கு பல நல்ல கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றவரும், இலங்கையில் சமூக மேம்பாட்டுக்கு இங்கிருந்து பணியாற்றுகின்றவருமானவர் மருத்துவர் ஜெயமோகன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல் 

Focus: India & Tamil Nadu - கொரோனா வைரஸ்: இந்திய நிலவரம்

Mar 29, 2020 0:06:08

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் முழுவதும் கடந்த 24 ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்த ஊரடங்கு மக்களுக்கு பல சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. விளக்குகிறார் நமது  தமிழக செய்தியாளர் ராஜ்.   

Australian News 29 Mar 2020 - "இருவருக்குமேல் பொது இடங்களில் யாரும் கூடக்கூடாது" - பிரதமர்

Mar 29, 2020 0:09:39

Description:

The news bulletin was broadcasted on 29 March 2020 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (29 மார்ச் 2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Coronavirus updates - கொரோனா: இன்றைய முக்கிய தகவல்கள்

Mar 29, 2020 0:05:26

Description:

An update on Coronavirus pandemic 

-

கொரோனாவைரஸ் COVID - 19 நாட்டில் வேகமாக பரவி வரும் பின்னணியில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய இன்றைய முக்கிய தகவல்களின் தொகுப்பு இது. தொகுத்தவர்: றைசெல்.

“Coronavirus brought some good changes in our lives” - கொரோனா வைரஸ் நமக்கு நன்மைகளையும் கொண்டுவந்துள்ளது!

Mar 29, 2020 0:08:53

Description:

Coronavirus brought altered our lives; however, it brought some good changes too, argues Mr Raguram, a broadcaster in Sydney. Produced by RaySel.

 

-

கொரோனா வைரஸ் காரணமாக நாம் வீடுகளில் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அச்சத்தில் வாழ்கிறோம். பல கட்டுப்பாடுகளின்படி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். ஆனால்  கொரோனா வைரஸ் நமக்கு சில நன்மைகளையும் கொண்டுவந்துள்ளது என்று கூறுகிறார் வானொலியாளர் ரகுராம் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.   

Panic buying: Should we buy more medicines? - கொரோனா காரணமாக மருந்துக்கு கட்டுப்பாடு வருமா? அதிக மருந்துகள் வாங்கலாமா?

Mar 29, 2020 0:09:08

Description:

As toilet paper and hand sanitiser continue to fly off the supermarket shelves, people start buying medicines. Should one stockpile medicines? Is it legal? Explains Anbu Jaya, B.Pharm., MMedSc (UNSW), Scientific Affairs Director (Retd), Pfizer, Australia. Produced by RaySel. 

-

கொரோனா  அச்சத்தில் பொது மக்கள் தாங்கள் பயன்படுத்தும் மருந்துகளையும் தேவைக்கு அதிகமாக வாங்கி சேமிக்கிறார்கள். இந்த போக்கின் அவசியமின்மையையும், இதில் ஒளிந்திருக்கும் அபாயத்தையும்,  சடட மீறல்களையும் விளக்குகிறார் அன்பு ஜெயா அவர்கள். அவர் B.Pharm., MMedSc (UNSW) எனும் பட்டங்களைப் பெற்றவர். ஆஸ்திரேலியாவில் இயங்கும் Pfizer நிறுவனத்தில் Scientific Affairs Director பதவி வகித்து ஒய்வு பெற்றவர்.

2.4 million temporary visa holders in limbo due to pandemic - கொரோனா வைரஸ் தரும் விசா நெருக்கடி: எப்படி சமாளிப்பது?

Mar 29, 2020 0:06:57

Description:

More than two million temporary visa holders living and working in Australia have been left in limbo, and many are struggling to pick up work as businesses struggle due to the coronavirus pandemic.  Migration advocates are calling on the federal government to provide support in the form of income assistance and rent freezes  to help temporary migrant workers survive in coming months. Explains Dr.Chandrika Subramaniyan who is a solicitor and barrister in the Supreme Court of New south Wales and High Court of Australia. Produced by RaySel. 

-

கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்கள் அல்லது வருவதற்கு திட்டமிட்டுள்ளவர்கள் விசா பெறுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த சிக்கல்களை எப்படி சரிசெய்யலாம் என்று விளக்கமளிக்கிறார் சமூக மேம்பாட்டுக்கு பணியாற்றும் வழக்கறிஞர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள்.   அவரோடு உரையாடியவர்: றைசெல்.       

Coronavirus Virus: Trouble in Transit – Story of a Tamil Girl - கொரோனா வைரஸ்: மலேசிய விமான நிலையத்தில் பரிதவிக்கும் தமிழ்ப்பெண்

Mar 27, 2020 0:09:54

Description:

To contain the spread of coronavirus COVID-19, Sri Lanka has limited the number of flights to Colombo.  Numerous passengers are left in a limbo as a result.  Kulasegaram Sanchayan brings the story of a young Tamil girl stranded at a Malaysian airport.

-

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இலங்கைக்கு வரும் விமானங்களை தடை செய்த காரணத்தால் மலேசிய விமான நிலையத்தில் பரிதவிக்கும் தமிழ்ப் பெண் ஒருவரின் கதையை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Virus spread puts pressure on everyone - கொரோனா: இன்றைய முக்கிய தகவல்கள்

Mar 27, 2020 0:06:50

Description:

The United States now has more confirmed cases of Coronavirus than any other country now.

-

உலகில் வேறெந்த நாட்டையும் விட கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகவுள்ள நாடு அமெரிக்கா என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Australian News - ஆஸ்திரேலியாவிற்கு வருபவர்கள் ஹோட்டல்களில் 14 நாட்கள் தங்க வைக்கப்படுவார்கள்.

Mar 27, 2020 0:11:55

Description:

Australian news bulletin aired on Friday 27 March 2020 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (27/03/2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். 

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Mar 27, 2020 0:06:01

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.

-

இலங்கையில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட இராணுவ வீரருக்கு அதிபர் கோட்டாபய பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளது குறித்து தமிழ்த் தரப்பிலிருந்து கடும் கண்டனம் வெளியாகியுள்ளது. 

Australian News 25 Mar 2020 - அனைத்து வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை

Mar 25, 2020 0:10:18

Description:

The news bulletin broadcasted on 25 March 2020 at 8pm. Read by Praba Maheswaran.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (25 March 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Focus: Tamil Nadu/India - கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை! இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வ

Mar 25, 2020 0:05:18

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்கம் என்ற உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இந்த முடக்கம் வருகின்ற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை நீடிக்கும். அதே சமயம் அத்தியாவசிய கடைகள், சேவைகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Prime Minister declares Stage Two coronavirus restrictions in Australia - கொரோன வைரஸ்: நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் எவை

Mar 25, 2020 0:07:08

Description:

As of midnight tonight ((Wednesday 25 March)), new measures will be implemented across the country to manage the coronavirus pandemic. Described by the Prime Minster as the second stage of restrictions, more businesses will be forced to close. And Australians will be banned from leaving the country.

-

நாட்டுமக்களுக்கு உரையாற்றிய பிரதமர் Scott Morrisson கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்குடன் மேலும் பல கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்தார். அத்துடன் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதுமாக சுமார் பல ஆயிரக்கணக்கானவர்கள் தமது தொழில்களைத் திடீரென இழந்துள்ளார்கள். இதுபற்றி Maani Truu, Naveen Razik மற்றும் Jarni Blakkarly தயாரித்த செய்தி விவரணங்களைத் தொகுத்துத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Tamil researcher on Coronavirus sheds new light - கொரோனாவை ஆராய்ச்சி செய்த தமிழ் நிபுணர் தரும் ஆச்சரியத் தகவல்கள்!

Mar 24, 2020 0:15:10

Description:

Rapidly spreading Coronavirus and COVID-19 infection has crippled the entire world. Rumours and misinformation about this virus is spreading at equal pace in social media.

-

வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் COVID-19 தொற்று உலகின் இயக்கத்தையே முடக்கி வருகிறது.  ஆனால் இது குறித்த வதந்திகளும் புரளிகளும் கட்டுக்கடங்காமல் சமூகவலைகளில் பரவி வருகின்றன.

Australian News - நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகள் தவிர ஏனையவை முடக்கம்!

Mar 23, 2020 0:10:33

Description:

The news bulletin aired on 23 March 2020 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (மார்ச் 23 2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Mar 23, 2020 0:05:40

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கை வடக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுதவிர பல இடங்களில் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட ஊடரங்குச்சட்டம் இன்றும் தொடர்கின்றது. இதுதொடர்பில் செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.    

Effects of Corona: Is Normalcy returning to China? - கொரோனா பாதிப்பு: சீனாவில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறதா?

Mar 23, 2020 0:16:15

Description:

COVID-19 or coronavirus infection is said to have originated from China.  It has now spread to more than 100 countries and has made an enormous impact worldwide.

-

சீனாவில் ஆரம்பித்ததாகச் சொல்லப்படும் கொரோனா வைரஸ், COVID-19 தொற்று, தற்போது நூறுக்கும் அதிகமான நாடுகளில் பரவி, உலகம் முழுவதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Coronavirus: How a Tamil in Italy survived? - ‘COVID-19 என்னையும் தாக்கியது’: இத்தாலிவாழ் தமிழரின் அனுபவம்!

Mar 23, 2020 0:14:03

Description:

Italy has reported 602 new deaths from the coronavirus on Monday, bringing the total to 6,077 with the tally of cases in the country, a major hotspot, rising to 63,928. A resident of Lombardy, Italy shares how he contracted the novel coronavirus and how he recovered from it. 

-

கொரோனா வைரஸின் கோரதாண்டவத்தால் அதிகளவான மரணங்களை எதிர்கொள்ளும் நாடுகளில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. இதுவரை அங்கு 6000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப்பின்னணியில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள Lombardy மாகாணத்தில் வாழ்பவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டவருமான கோபி அவர்கள் தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

Focus: Tamil Nadu - இந்தியாவில் சுய ஊரடங்கு: தமிழக நிலவரம்

Mar 22, 2020 0:05:10

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

இந்திய பிரதமர் மோடியின் வேண்டுகோளையடுத்து இந்தியா முழுவதும் இன்று சுய ஊரடங்கை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.  தமிழகத்திலும் பெரு நகரங்கள் மட்டும் அல்லாமல் சிறிய கிராமங்களில் கூட சுய ஊரடங்கு உத்தரவை அடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன என்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.   

Australian News 22/03/2020 - கோரோனோ அச்சம்! NSW & Victoriaவில் உணவகங்கள், pubs, gyms & திரையரங்குகளை இருநாட்கள் மூடிவிட திட்டம்!

Mar 22, 2020 0:08:48

Description:

The news bulletin was broadcasted on 22 March 2020 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (22 மார்ச் 2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

COVID-19: Geriatric Specialist's advice for the elderly people. - கொரோனா வைரஸ்: முதியவர்களுக்கான மருத்துவரின் விசேட ஆலோசனைகள்.

Mar 22, 2020 0:09:33

Description:

Why those people over the age of 80 years are the most vulnerable? How to protect elderly? What are the precautions they should take? Praba Maheswaran speaks to Dr Peter Kurusumuthu, Consultant Geriatrician (Staff specialist in Geriatric Medicine - Blacktown and Mt Druit Hospitals) and Conjoint Senior Lecturer (School of Medicine, Western Sydney University).  

-

COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவலினால் ஏன் முதியவர்களுக்கு அதிக ஆபத்து? எப்போது அவர்கள் வைத்தியசாலைக்குச் செல்லவேண்டும்? முதியவர்கள் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் முதியவர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்குகிறார், முதியோர் நல மருத்துவரும் (Consultant Geriatrician), Western Sydney பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளருமான Dr பீட்டர் குருசுமுத்து அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Why are older people more at risk of coronavirus? - கொரோனா வைரஸினால் முதியவர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

Mar 22, 2020 0:14:21

Description:

As we learn more about COVID-19, it’s increasingly clear that your risk of severe illness and death increases with age. Dr Peter Kurusumuthu said that people over the age of 80 years and those with chronic diseases are the most vulnerable. Praba Maheswaran spoke to Dr Peter Kurusumuthu (Consultant Geriatrician and Conjoint Senior Lecturer at Western Sydney University), few seniors and produced a feature on how the senior's daily life have changed and the precautions they should take. 

-

COVID -19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்குள்ள முதியவர்கள் தமது அன்றாட வாழ்வினை எவ்வாறு மாற்றியமைத்துள்ளார்கள் என்பதனையும், முதியவர்கள் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகளையும் விவரணமாகப் படைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். முதியவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கியவர், முதியோர் நல மருத்துவரும் Western Sydney பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளருமான Dr பீட்டர் குருசுமுத்து அவர்கள். தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட முதியவர்கள்:
திரு சிவதொண்டன் - சிட்னி, NSW.
கலாநிதி ஆனந்தஜயசேகரம் - மெல்பேர்ன், VIC.
திரு முத்துக்குமார் ஸ்ரீரங்கநாதன் - Sunshine Coast, QLD.

Coronavirus-affected suburbs may be locked down - கோரோனா வைரஸ் என்ன கட்டுப்பாடுகளை கொண்டுவருகிறது? ஏன்?

Mar 22, 2020 0:06:24

Description:

Since it first appeared in Wuhan in late 2019, coronavirus has been caught by more than 250,000 people worldwide, resulting in more than 11,000 deaths. In Australia, seven deaths and over 1000 COVID-19 infections continues to see authorities ramp up measures to reduce its spread. Sydney's favourite tourist attraction, Bondi Beach, has been closed after thousands flouting social distancing advice. A story by Julia Carr-Catzel for SBS News, produced by RaySel for SBS Tamil.

-

கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலிய  மக்கள் புதிய கட்டுப்பாடுகளையும், நெருக்கடிகளையும் எதிர்கொள்கின்றனர்.  SBS News இன் Julia Carr-Catzel எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

தகவலோடு தமிழில் தயாரித்தவர்: றைசெல்.

Namma Thamil: Introducing Siledai Ani - நம்ம தமிழ்: சிலேடை அணி அறிமுகம்

Mar 22, 2020 0:10:39

Description:

“Namma Thamil”, series on Tamil language, is presented by Ms Yasotha Pathmanathan. Part 3. Produced by RaySel.

-

தமிழ் மொழியின் அருமை, பெருமை, சிறப்பு என்று பலவித அம்சங்களை நாம் அறிந்திருப்போம். அப்படியான தமிழ் மொழிக்கு அணி இலக்கணம் சேர்க்கும் சிலேடை அணி குறித்து விளக்குகிறார் யசோதா பத்மநாதன் அவர்கள். பாகம் 3. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.  

Panic buying: Is Australia facing food supply shortage? - கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியா உணவு தட்டுப்பாட்டை சந்திக்கப்போகிறதா?

Mar 22, 2020 0:07:48

Description:

Empty supermarket shelves have become a common sight in the past few weeks, since COVID-19 or Coronavirus sparked widespread panic buying. Would Australia run out of food? Explains R.Sathyanathan, a leading broadcaster. Produced by RaySel.  

-

கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் COVID-19 தொற்று ஆஸ்திரேலியாவை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியிருப்பதால் பயந்துபோன மக்கள் உணவுப் பொருட்களை வாங்கிக் குவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உணவு தட்டுப்பாடு வரும் என்று பலரும் அஞ்சுகின்றனர். இந்த அச்சம் தேவையான ஒன்றுதானா? நாம் பயப்படுவதுபோன்று நாட்டில் உணவு தட்டுப்பாடு வருமா?

அலசுகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.        

Views over controlling of Coronavirus - கொரோனா வைரஸ்: நாம் என்ன செய்யலாம்? அரசு செய்வது திருப்தியா?

Mar 22, 2020 0:16:47

Description:

Yaso Ponnuthurai (Councillor – City of Canning), Dr Raiz, Consultant Psychiatrist in Sydney,    Saraswathi Sekar (Broadcaster at 4EB in Brisbane) and Dr Kumarvelu Ganesan, an educationalist share their views on the measures both the people and the government take for controlling the spread of Coronavirus. Produced by RaySel.

-

ஆஸ்திரேலியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்தில் உறையும் இந்த நேரத்தில் நமது தமிழ் சமூகம் என்ன நினைக்கிறது? ஒரு கலந்துரையாடல். கலந்துகொண்டவர்கள்: பெர்த் நகரிலிருந்து யசோ பொன்னுத்துரை (Councillor – City of Canning), சிட்னி நகரிலிருந்து மருத்துவர் ரெய்ஸ் (Psychiatrist), பிரிஸ்பேன் நகரிலிருந்து சரஸ்வதி சேகர் (4EB தமிழ் ஒலிபரப்பு), முனைவர் குமாரவேலு கணேசன் (கல்வியாளர்). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.         

Corona virus: Shaking the foundation - அத்திவாரத்தை அசைத்துப்பார்க்கும் கொரோனா வைரஸ்

Mar 20, 2020 0:06:45

Description:

Australia's big four banks have unveiled economic stimulus measures supporting small business, as the federal government plots its next package in response to coronavirus.

-

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தை எதிர்கொள்ள, சிறு வணிகத்துறையை ஆதரிக்கும் பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக நாட்டின் நான்கு பெரிய வங்கிகளும் அறிவித்துள்ளன.  அரசும் அதன் அடுத்த நடவடிக்கை என்ன என்று பரிசீலித்துக் கொண்டிருக்கிறது.

Australian News 20 Mar 2020 - கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாட்டினுள் வர தடை

Mar 20, 2020 0:08:58

Description:

Australian news bulletin aired on Friday 20 March 2020 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (20/03/2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.

Four Indian men executed for Delhi bus rape - "நான்குபேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது சரியே"

Mar 20, 2020 0:09:15

Description:

Four Indian men convicted of the gang rape and murder of a student in Delhi in 2012 have been hanged. Ms Banu Gomaz, an independent political analyst analyses the execution. Produced by RaySel.  

-

இந்தியத் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் 2012 டிசம்பர் 16ம் தேதி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு நிர்பயா எனும் இளம் பெண் கொல்லப்பட்டார். அந்த குற்றத்தைப்புரிந்த அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று கடைசி ஆசை கூட நிறைவேற்றப்படாமல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ததாக விமர்ச்சிக்கப்படுகிறது. இது குறித்து தனது கருத்தை முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து சுயாதீனமான அரசியல் விமர்சகர் பானு கோமஸ் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.  

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Mar 20, 2020 0:05:35

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.

-

இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கையேற்கும் பணிகள் நேற்றைய தினத்துடன் நிறைவடைந்திருந்தாலும் ஏப்ரல் 25ல் பாராளுமன்ற தேர்தல் நடாத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.  அத்துடன், கொரேனா வைரஸ் தொற்றினைத் தடுக்க இன்று மாலை முதல் திங்கள் காலை வரை இலங்கை முழுவதிலும் ஊடங்குச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது.  இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Panic caused by Corona: Should Schools Be Closed? - கொரோனா பீதி: பாடசாலைகள் மூடப்பட வேண்டுமா?

Mar 20, 2020 0:16:55

Description:

The impact of the coronavirus has hit schools around the world.  The Government has announced that it will not close schools considering the economic and health impact and the social costs. 

-

கொரோனா வைரஸின் தாக்கம் உலகிலுள்ள பாடசாலைகளிலும் தெரிய ஆரம்பித்துள்ளது.  சுகாதார, பொருளாதார தாக்கங்கள் மற்றும் பாடசாலைகளை மூடுவதால் ஏற்படும் சமூக செலவுகளைக் கருத்தில் கொண்டு, பாடசாலைகளை மூடப்போவதில்லை என்று எமது அரசு அறிவித்துள்ளது.

Australian News 18 Mar 2020 - கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.

Mar 18, 2020 0:08:40

Description:

The news bulletin broadcasted on 18 March 2020 at 8pm. Read by Praba Maheswaran.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (18 March 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

How “Self-Isolation” works? - கோரோனோ வைரஸ் நடைமுறை: தனிமைப்படுத்துதல் (Self-Quarantine) எப்படி உள்ளது?

Mar 18, 2020 0:12:55

Description:

Australians can now be fined or even jailed if they don't comply with self-isolation provisions, designed to try and slow the spread of the coronavirus. How do people follow this? Mr Annamalai & Mrs Shanthi share their “self-quarantine” experience. Produced by RaySel.

-

நாட்டில் COVID-19 கொரோனா வைரஸ் வேகமெடுத்து பரவும் இன்றைய சூழலில் வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா வந்தடையும் அனைவரும் 14 நாட்கள் தங்களை அவர்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் (self-quarantine or self-isolation) என்று அரசு அறிவித்துள்ளது. இப்படியான புதிய நடைமுறையை மக்கள் எப்படி கடைபிடிக்கின்றனர் என்பது குறித்த விவரணம் இது. சிட்னியில் வாழும் அண்ணாமலை - சாந்தி தம்பதியினர் தங்களது அனுபவத்தை பகிர்கின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Focus: Tamil Nadu/India - தமிழகத்தில் கொரோனா பீதி

Mar 18, 2020 0:04:25

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

தமிழகத்தில் 'கொரோனா'  பீதியின் காரணமாக பொதுமக்களின் சகஜ வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் மற்றும் வர்த்தகமும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து பெரிதுமாக குறைந்துள்ளது. ஹோட்டல்களில் சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்த்து வருவதால், விற்பனையில் வரலாறு காணாத அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு மட்டுமே 'கொரோனா' வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும், மொத்த தமிழகமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு பார்வை!

What you need to know about COVID-19 - கொரோனா தொற்றுக்கு என்ன சிகிச்சை தரப்படுகிறது?

Mar 18, 2020 0:06:40

Description:

It’s the only topic of conversation at the moment but the most basic facts about COVID-19, the disease caused by the new coronavirus, are a source of some confusion. SBS news spoke to an expert to get the right information and here's with the facts. That story by Camille Bianchi for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil.

-

COVID-19 தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதனை எவ்வாறு உறுதிப்படுத்துவது? எவ்வளவு காலத்தில் இந்நோய் குணமடையும்? இந்நோய்க்கான அறிகுறிகள் என்ன? இந்நோய்க்கான சோதனை முடிவுகளைப்பெறுவதற்கு எவ்வளவு காலம் காத்திருக்கவேண்டும்? .......

COVID19 எனப்படுகின்ற கொரோனா வைரஸ் பற்றிய சரியான தகவல்களைப் பெறும் நோக்கில், வைத்திய நிபுணரும், ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் நியூ சவுத் வேல்ஸ் மாநில துணைத் தலைவருமான டாக்டர் Danielle McMullen தெரிவித்த கருத்துகளை உள்ளடக்கிய விவரணம். SBS செய்திப்பிரிவின் Camille Bianchi தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

'COVID-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் சாதாரண பரசிட்டமால் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் எவ்வித காரணங்களுக்காகவும் Nurofen உட்கொள்ளக்கூடாது' - WHO.

How coronavirus infected the global economy - கொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள்!

Mar 17, 2020 0:12:06

Description:

Countries globally are facing "a twin crisis of unprecedented proportion" of a public health threat in the form of a new coronavirus and heightened risk of an economic recession. Prof.E.Selvanathan,Department of Accounting, Finance and Economics, Griffith University explains.

-

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் தொடரும் பின்னணியில் நாட்டின் பொருளாதாரத்தில் இதுமிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கிறார் கிரிஃபித் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் இ.செல்வநாதன் அவர்கள். பேராசிரியர் செல்வநாதனுடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

Australian News - செனட்டர் Susan McDonald-க்கு கொரோனா வைரஸ் தொற்று!

Mar 16, 2020 0:09:45

Description:

The news bulletin aired on 16 March 2020 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் ( மார்ச் 16 2020 )  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Mar 16, 2020 0:06:40

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

திட்டமிட்டபடி ஏப்ரல் 25ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அதிபர் கோட்டாபய அறிவித்துள்ளதையடுத்து கட்சிகள் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகளை முன்னெடுத்துள்ள நிலையில் பல இடங்களில் மெதுவாக பிரச்சார பணிகளும் ஆரம்பமாகியுள்ளன. .
இது தவிர இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வடைந்துள்ளது. இவை குறித்த செய்தித்தொகுப்பை முன்வைககிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.

Living close to my community - உங்கள் சமூகத்தவர்களுடன் மட்டும் சேர்ந்து வாழ விரும்புபவரா?

Mar 16, 2020 0:04:39

Description:

After moving to a new country, there's a lot to organise and a lot of new things to learn. Even if you've been in Australia for years, you probably still encounter situations you don't totally understand. It’s no surprise then that many new migrants decide to live close to their community to make things a bit easier. But is living close to your community always the best option for you? Feature by Audrey Bourget

-

ஆஸ்திரேலியாவுக்கு குடிவந்த பலர் தாம் சார்ந்த சமூகத்தினர் அதிகம் இருக்கும் பகுதிகளிலேயே குடியேற விரும்புவது வழக்கம்.
இதிலுள்ள சாதக பாதகங்கள் தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

Focus: Tamil Nadu - கோரோனோ வைரஸ்: தமிழக நிலவரம்

Mar 15, 2020 0:05:45

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் தாக்கம் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. கொரோனாவின் பாதிப்பு தமிழகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? நமது தமிழக செய்தியாளர் ராஜ் தரும் அறிக்கை.

Australian News 15/03/2020 - ஆஸ்திரேலியாவில் கோரோனோ வைரஸ் இறப்பு எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது

Mar 15, 2020 0:08:08

Description:

The news bulletin was broadcasted on 15 March 2020 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (15 மார்ச் 2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Interview with Indian Deputy High Commissioner to Australia - இலங்கை பின்னணிகொண்டவர்களுக்கு விசா கிடைப்பதில் தாமதமா? - பதில் தருகிறா

Mar 15, 2020 0:14:06

Description:

H.E. Mr P.S.Karthigeyan, Deputy High Commissioner of India spoke to RaySel in Canberra.

-

ஆஸ்திரேலியாவுக்கான இந்திய துணைத் தூதராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி வகித்து வருகின்றவர் தமிழ் நாட்டைச் சார்ந்த P.S.கார்த்திகேயன் அவர்கள். கேன்பராவில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பொங்கல்விழாவின்போது நாம் அவரைச் சந்தித்து விரிவாக உரையாடினோம். ஆஸ்திரேலிய - இந்திய உறவு, இந்தியா விசா பெறுவதில் இலங்கை பின்னணி கொண்டவர்கள் எதிர்கொள்வதாக கூறப்படும் சிக்கல், OCI காரர்கள் சந்தித்த பிரச்சனைகள், தனது வாழ்க்கை அனுபவம் என்று பல அம்சங்களை மனம் திறந்து பேசுகிறார் P.S.கார்த்திகேயன் அவர்கள். சந்தித்தவர்: றைசெல்.  

Introducing Australian short story – 3 - ஆஸ்திரேலிய சிறுகதை தமிழில் அறிமுகம்

Mar 15, 2020 0:08:41

Description:

Shankar Jeyapandian of 4EB Tamil presents “Namma Australia”. Produced by RaySel.

-

ஆஸ்திரேலியாவில் பல்வேறு தளங்களில் பரிசு பெற்ற சிறுகதைகளையும், அதன் ஆசிரியர்களையும் பற்றிய தொடர் இது. 

Furious Fiction போட்டியில் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற எழுத்தாளர் Roslyn Keighery அவர்களின் “A small price to pay” என்ற சிறுகதையை அறிமுகம் செய்கிறோம். “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைப்பவர்: 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.  கதை: 3

Australians urged to get flu vaccine amid coronavirus spread - Coronavirusயுடன் வருகிறது Flu (குளிர் காய்ச்சல்)!

Mar 15, 2020 0:04:44

Description:

As the coronavirus continues to spread across the country, Australians are being urged to get their flu vaccinations ahead of winter. Doctors say it's more important than ever to build up herd immunity in order to help protect vulnerable people and lessen the burden on the healthcare system. A story by Cassandra Bain for SBS News, produced by RaySel for SBS Tamil.

-

கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியாவை எந்த அளவு தாக்கப்போகிறது என்ற அச்சத்தில் வாழும் நமக்கு கூடவே இன்னொரு கெட்ட செய்தி: குளிர்காலத்தில் வரும் காய்ச்சல் (flu) வரும் காலம் அண்மித்துள்ளது. என்ன செய்யலாம்? SBS News இன் Cassandra Bain எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

World Kidney Day Special: Importance of Transplanting Organs - உடலுறுப்பு தானம்: 'ஒருவர் ஏழு பேருக்கு வாழ்வு கொடுக்கலாம்'

Mar 15, 2020 0:13:36

Description:

Organ transplantations save lives in patients affected by terminal organ failures and improve quality of life. Professor and Vice Chair of Surgery at University of South Dakota, Dr Thav Thambi-Pillai explains the importance of transplanting organs. Produced by Praba Maheswaran.

-

உறுப்பு செயலிழப்புகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும்   Transplant எனப்படும் 'உடலுறுப்பு மாற்று சத்திரசிகிச்சை' உதவுகிறது. உறுப்புகளை தானம் செய்வதன் முக்கியத்துவத்தை விளக்குகிறார் South Dakota பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், துணைத் தலைவரும், அறுவைச் சிகிச்சை நிபுணருமான டாக்டர் தவம் தம்பிப்பிள்ளை (Professor and Vice Chair of Surgery at University of South Dakota). நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.

Australian News 13 Feb 2020 - உலகநாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனா வைரஸ் ஆபத்து நாட்டில் மிகக்குறைவு

Mar 13, 2020 0:08:57

Description:

Australian news bulletin aired on Friday 13 March 2020 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (13/03/2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.

World Sleep Day Special - தூக்கமும் அதன் பாதிப்புகளும்: விரிவான விளக்கம்

Mar 13, 2020 0:11:23

Description:

Ms.Thanusha Sothiratnam of Denap Sleep Service explains the importance of sleep. Produced by RaySel.  

-

சர்வதேச தூக்கதினம் (World Sleep Day) இன்று கடைபிடிக்கப்படுகிறது. தூக்கம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று என்பது குறித்து உலக மக்கள் விழிப்புணர்வு கொள்ளவேண்டும் என்றுதான் சர்வதேச தூக்கதினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இன்றைய தினத்தில் தூக்கம் குறித்து நாம் அறிந்திராத பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் தனுசா சோதிரத்னம் அவர்கள். அவர் Blacktown நகரில் இயங்கும்  Denap Sleep Service எனும் தூக்கம் குறித்த சிறப்பு சிகிச்சை மையத்தில் பணியாற்றுகிறார். அவரோடு பேசியவர்: றைசெல்.     

Re-balancing superannuation for Women - தமிழ்ப்பெண் உருவாக்கிய பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் Fairvine

Mar 13, 2020 0:11:45

Description:

Many older Australian women are at risk of poverty and homelessness, with inadequate superannuation to fund their retirement.  Sangeeta Venkatesan has founded a Sydney-based superannuation fund particularly aimed at women (but not exclusively), called Fairvine to address that.

-

பல வயதான ஆஸ்திரேலிய பெண்கள் ஓய்வு பெறும் போது, அவர்களுடைய ஓய்வூதிய நிதியில் போதுமான பணம் இருப்பதில்லை.  பலர் வறுமையில் வாழ்கிறார்கள், வேறு சிலர் வீடற்றவர்கள் ஆக்கப்படுகிறார்கள். அவர்களின் நிலையை மனதில் கொண்டு, Superannuation எனப்படும் ஓய்வூதிய நிதி நிறுவனம் ஒன்றை சங்கீதா வெங்கடேசன் ஆரம்பித்துள்ளார்.  சிட்னியைத் தளமாகக் கொண்டு இயங்கும் Fairvine என்ற நிறுவனம், குறிப்பாகப் பெண்களை (ஆனால் பிரத்தியேகமாக அல்ல) இலக்காகக் கொண்ட ஓய்வூதிய நிதி நிறுவனமாகும்.

Focus: Sri Lanka - இலங்கையில் கொரோனா தொற்று

Mar 13, 2020 0:05:20

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.

-

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இரண்டு இலங்கையர்கள் உட்பட்டுள்ளதனை அடுத்து இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா பீதி; மற்றும் கொரோனா பாதிப்பு தொடர்பான பரிசோதனை நிலையம் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ளமைக்கு அம்மக்கள் கடும் எதிர்ப்பு காட்டிவருகிறார்கள் என்பன குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Could daily acts of kindness prevent toilet paper hoarding? - இக்கட்டான இந்த நேரத்தில் கருணை வெளிப்படுகிறதா?

Mar 13, 2020 0:06:26

Description:

A common enemy, be it bushfires or viruses, can bring out the best in people. Or not - toilet paper hoarding springs to mind.

-

ஒரு பொதுவான எதிரி – அண்மையில் நாடு முழுவதும் எதிர்கொண்ட காட்டுத்தீயாக இருக்கலாம் அல்லது தற்போது பரவி வரும் வைரஸாக இருக்கலாம், மக்களின் சிறந்த குணங்களை வெளியே கொண்டு வருவதை நாம் கண்டிருக்கிறோம்.  சில வேளைகளில் அப்படியான பொது எதிரி, எதிர்மறையான நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கக் கூடும் – இப்பொழுது நடக்கும் Toilet Paper பதுக்கல் அதற்கு ஒரு நல்ல உதாரணம்.

Coronavirus: Who is at risk and how do we know? - கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து Flu தடுப்பூசி நம்மைப் பாதுகாக்குமா?

Mar 13, 2020 0:12:37

Description:

The last few days have seen a rapid increase in the number of cases in South Korea, Iran and Italy. Now officially a pandemic, the virus has proven adept at crossing borders, with confirmed cases reported in over 100 countries. In the face of this escalating outbreak, it can be difficult to gauge how concerned we should be. What threat does the coronavirus pose to us as individuals? Dr.Satish Nagarajah explains.

-

ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கோவிட்-19 தொற்றுக்கு பலரும் பலியாகியுள்ள நிலையில் இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப்பின்னணியில் கோவிட்-19 தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் தொடர்பிலும் இதனை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பது பற்றியும் Flu தடுப்பூசி இத்தொற்றிலிருந்து பாதுகாக்குமா என்பது தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பேர்னிலுள்ள மருத்துவர் சதீஷ் நாகராஜா அவர்கள்.

Australian News 11 Mar 2020 - கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்த்துப்போராட $2.4 பில்லியன் திட்டம்.

Mar 11, 2020 0:08:53

Description:

The news bulletin broadcasted on 11 March 2020 at 8pm. Read by Praba Maheswaran.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (11 March 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Focus: Tamil Nadu/India - GK வாசன் பாஜகவுக்கு செல்வாரா?

Mar 11, 2020 0:05:47

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மத்திய பிரதேசத்தில், அக்கட்சியின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து 2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரியணை ஏறியது. மத்திய பிரதேசத்தில் தற்போது கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. உட்கட்சி பூசல்களால் சிக்கி தவித்த வந்த மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில் தற்போது மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா நேற்று காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் அவரின்
ஆதரவாளர்கள் 22 பேர் ராஜினாமா கடிதத்தை அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைய உள்ளதகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் இதனால் மத்திய பிரதேசத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அதிமுக சார்பில் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேமுதிக தரப்பில் அதிமுகவில் சீட் கோரப்பட்ட நிலையில், தீடீர் திருப்பமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான G.K.வாசனுக்கு அதிமுகவில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக மேலிட உத்தரவின் பெயரிலேயே G.K.வாசனுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவின்றன. மேலும் விரைவில் ஜி.கே.வாசன் தமிழக பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்திகள் குறித்து ஒரு பார்வை. நமது தமிழக செய்தியாளர்!

Finding vaccine for COVID-19 (Coronavirus) months away - கைக்கெட்டும் தூரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இல்லை!

Mar 11, 2020 0:09:38

Description:

Many scientists warn that a coronavirus vaccine will take at least 18 months if it works at all. R.Sathyanathan, a popular broadcaster, explains the scientists efforts in finding vaccine for COVID-19 known as coronavirus.

-

கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் COVID-19 தொற்றுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்று உலகமே காத்திருக்கிறது. ஆனால் அப்படியான தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் கடைக்கு வந்துவிடும் என்ற நிலை இல்லை எனப்படுகிறது. இது தொடர்பானசமீபத்திய தகவல்களை தொகுத்தளிக்கிறார்  பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.        

Would you visit “The Tiniest House of Time” ? - தமிழரா? பர்மியரா? மலேசியரா? இந்தியரா? யாதும் ஊரே யாவரும் கேளிர்!

Mar 11, 2020 0:20:00

Description:

“The Tiniest House of Time” is a warm, insightful, compassionate and wise tale that explores the complexities of migration, prejudice, aging, love, and the unbreakable bonds of family. From pre-war Burma to post-colonial Malaysia, Sreedhevi Iyer stitches together a rich, inter-generational story about the lives of far-flung middle-class Indian communities.

-

உலகப் போருக்கு முந்தைய பர்மாவிலும் காலனித்துவ ஆட்சிக்குப் பின்னரான மலேசியாவிலும் வாழ்ந்த, வாழ்கின்ற தமிழர்களின் வாழ்க்கையை ஒரு நடுத்தர வர்க்க தமிழ் குடும்பத்தின் மூன்று தலைமுறையினரின் கதையாக, “The Tiniest House of Time” என்ற நூலில் அழகாக, விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் ஸ்ரீதேவி ஐயர்.

Government lays groundwork to manage coronavirus impact - கொரோனா வைரஸ்: சர்வதேச விமானப்பறப்புகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது!

Mar 11, 2020 0:05:44

Description:

Prime Minister Scott Morrison has laid out the groundwork ahead of a stimulus package to manage COVID-19's impact on Australia's economy. That story by Julia Carr-Catzel for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil.

-

நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் இன் தாக்கத்தை சமாளிக்கும் நோக்குடன் stimulus package ஒன்றினை அரசு தயாரித்துள்ளது. ஆனால் இதேவேளை உலகிலுள்ள பிற விமான நிறுவனங்கள் போன்று Qantas நிறுவனமும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அதன் சர்வதேச விமானப்பறப்புகளின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட கால் பங்காகக் குறைத்துள்ளது.  அத்துடன் ஆசியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான பயணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு சிறிய ரக விமானங்களை இயக்கவுள்ளதாக Jetstar நிறுவனம் அறிவித்துள்ளது.  இதுபற்றி Julia Carr-Catzel தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Mar 9, 2020 0:06:16

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

"காணாமல்போனவர்களின் விடயத்தினை மறந்து செயற்படுங்கள்" என்ற அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவின் கருத்து தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. மேலும் சர்வதேச மகளிர் தினமான நேற்றைய தினத்தில் காணாமல் போனோர் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.     

Australian News - கன்பராவிற்குள் கொரோனா பரவியுள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை!

Mar 9, 2020 0:08:16

Description:

The news bulletin aired on 09 March 2020 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (09 மார்ச் 2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.

Should I lend my children money? - வளர்ந்த பிள்ளைகளுக்கு பெற்றோர் கடனுதவி செய்ய வேண்டுமா?

Mar 9, 2020 0:03:54

Description:

Should you lend money to your grown-up children or not? The answer is often straight-forward for parents who’ve spent a lifetime loving and caring for their children. Experts though, encourage taking measures to protect your own financial future before digging into your retirement savings. Feature by Amy Chien-Yu Wang. 

-

பிள்ளைகள் மீதுள்ள அன்பின் காரணமாக அவர்கள் பெரியவர்களான பின்னரும் பெற்றோர் தொடர்ந்தும் கடனுதவி செய்துகொண்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்வது வயதான காலத்தில் பெற்றோரைப் பாதிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா. 

Focus: Tamil Nadu - பேராசிரியர்: வாழ்வும் சாதனையும்

Mar 9, 2020 0:06:04

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

“இனமான பேராசிரியர்"  என்று அழைக்கப்பட்டவரும் தமிழக அரசியலின் மூத்த திராவிடத் தலைவர்களில் ஒருவரும், திமுக பொதுச்செயலாளராக 43 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி தமிழக அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்திருந்தவருமான அன்பழகன் அவர்கள் நேற்றுமுன்தினம்  விடைபெற்றார். அவருக்கு வயது 97.

அன்பழகன் அவர்கள் குறித்த வாழ்வும் சாதனையும் குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  

Australia News 08 March 2020 - கொரொனோ வைரசைத் தொடர்ந்து காய்ச்சல் தடுப்பூசி அவசியமாகிறது!

Mar 8, 2020 0:06:33

Description:

The news bulletin was broadcasted on 8 March 2020 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (8 மார்ச் 2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Panel discussion on women's issues - நாங்கள் சந்திக்கும் பிரச்சினை என்ன தெரியுமா?

Mar 8, 2020 0:28:24

Description:

Aseesa Fernandez, Runa, Gayathri Dharmagesan and Krishna Bhavani share and discuss the issues faced by Australian Tamil women. Produced by RaySel.

-

நமது ஆஸ்திரேலியத்  தமிழ்பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எவை? சர்வதேச பெண்கள் தினமான இன்று பெண்களே பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் பரிமாற்றம் நிகழ்ச்சி. கலந்துகொண்டவர்கள்: அஸீஸா, ரூனா, காயத்ரி தர்மகேசன், கிருஷ்ணபவானி. தயாரிப்பு: றைசெல்.     

Closing the Gap… but when? - பூர்வீக குடி மக்களுக்கும் மற்றவர்களுக்குமிடையிலான இடைவெளி குறையுமா?

Mar 8, 2020 0:08:05

Description:

The federal government is promising to overhaul its approach on targets to reduce Indigenous disadvantage. Prime Minister Scott Morrison Scott Morrison says the results of the latest Close the Gap report are "stark and sobering", with only two of the seven “Close the Gap” targets on track to be met.  Kulasegaram Sanchayan reviews.

-

பூர்வீக குடி மக்களுக்கும் மற்றவர்களுக்குமிடையிலான இடைவெளியைக் குறைப்பதென்று அப்போதைய அரசு உறுதியளித்திருந்தாலும் அது முற்றாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.  “Close the Gap Day” ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை அவதானிக்கப்படுகிறது.  இது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Did you ever think you could be born male? - நீங்கள் எப்போதாவது ஆணாக பிறந்திருக்கலாம் என்று எண்ணியது உண்டா?

Mar 8, 2020 0:12:30

Description:

 Did you ever think you could be born male?  When we put this question to some women in different profession, they provided some interesting answers.  Our producer Selvi compiles them .

-

நீங்கள் எப்போதாவது ஆணாக பிறந்திருக்கலாம் என்று எண்ணியது உண்டா? என்று சில பெண்களிடம் நாங்கள் கேட்டபோது அவர்கள் வழங்கிய பதில்கள்.  நிகழ்ச்சி ஆக்கம் செல்வி.

Coronavirus: panic-buying Australians are really overreacting? - கொரோனா வைரஸ்: பொருட்களை முன்கூட்டியே வாங்கி சேமிக்க வேண்டுமா?

Mar 8, 2020 0:09:52

Description:

Coronavirus panic shopping means some have months' worth of toilet paper and food while others can't get basic supplies. Praba Maheswaran speaks to our listeners and an Indian supermarket  regarding their preparations and purchasing.

-

கொரோனா வைரஸ் அச்சத்தில் நம்மவரில் பலரும் பல்வேறுவிதமான அத்தியாவசியப் பொருட்களை கடைகளில் முண்டியடித்துக்கொண்டு கொள்வனவு செய்துவருகின்றனர். ஆனால் சிலர் அவாறின்றி சாதாரணமாக வாழ்கின்றனர். இதுபற்றிய நம்மவர்களின் நிலைப்பாட்டினை அறிந்துகொள்ளும் நோக்குடன்  இந்தியப்பல்பொருள் அங்காடியான Udaya Super Mart இன் அறிவழகன் மற்றும் சில நேயர்களின் கருத்துகளுடன் விவரணம் ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Australian News 06 Mar 2020 - நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 100 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு

Mar 6, 2020 0:07:30

Description:

Australian news bulletin aired on Friday 06 March 2020 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (06/03/2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.

Is Malaysian Government stable? - மலேசிய புதிய அரசு நிலைக்குமா? - ஒரு பார்வை

Mar 6, 2020 0:05:06

Description:

International analysts see the current Malaysia’s new government may be even more unstable than old one. How do the Malaysians see it? Analyses P.Rajendran, an independent journalist and President of Tamil Writers Association in Malaysia.  

-

மலேசியாவில் புதிய பிரதமராக மொகிதின் யாசின் அவர்கள் கடந்த ஞாயிறு பதவியேற்றபின்னர் அரசியலில் பல மாற்றங்கள் நடந்துவருகின்றன. இன்றைய மலேசிய அரசியல் களத்தை அலசுகிறார் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், சுயேட்சை ஊடகவியலாளருமான பெ.இராஜேந்திரன் அவர்கள்.  அவரோடு உரையாடியவர்: றைசெல்.

A report from UNHRC meeting in Geneva - ஐ.நா. மனித உரிமை பேரவையில் தமிழர்கள் பற்றி என்ன பேசப்படுகிறது?

Mar 6, 2020 0:07:01

Description:

The UN Human Right Council meeting is going on in Geneva. It is seen important in the context of Sri Lanka formally notified the UN Human Right Council that it was withdrawing from the UN resolution on post-war accountability and reconciliation. M.K.Thamil a journalist from “Parai” an online magazine from Canada reports from Geneva.

-

ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை பேரவையின் கூட்டம் தற்போது ஜெனீவா நகரில் நடந்துகொண்டுள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானத்திலிருந்து தாம் வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்த பின்னணியில் நடைபெறும் கூட்டம் இது என்பதால் இலங்கை தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த கூட்டம் தொடர்பான தகவல்களை நமக்கு வழங்குகிறார் ஜெனீவா நகரிலிருந்து கனடா நாட்டின் “பறை” இணைய இதழின் செய்தியாளர் மு.க.தமிழ் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Mar 6, 2020 0:06:06

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.

-

இலங்கையில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது.  கூட்டணிகள் அமைக்கும் முயற்சிகளில் பிரதான கட்சிகள் ஈடுபட்டுள்ளன.  அதே நேரம் வேட்பாளர்களின் பட்டியிலினைத் தயாரிக்கும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.  இது குறித்த செய்திகளையும் "சகோதரப்படுகொலைகள் மூலமாகவே புலிகள் தனி இயக்கமாக உருவெடுத்தார்கள்" என்று சுமந்திரன் கூறிய கருத்து தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு விமர்சனங்களையும் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Impact of Coronavirus - கொரோனா வைரஸின் நகர்வுகள்

Mar 6, 2020 0:07:15

Description:

Four Australians on board the Grand Princess Cruise ship are facing COVID-19 testing after a previous passenger from the same ocean liner died after contracting the coronavirus.

-

Grand Princess Cruise என்ற உல்லாசக் கப்பலில் பயணித்த ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி மரணித்ததைத் தொடர்ந்து, அதில் பயணித்த நான்கு ஆஸ்திரேலியர்களுக்கு COVID-19 தொற்று இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படுகிறார்கள்.

Traditional Tamil drumming at the Sydney Opera House - உலகப் புகழ் பெற்ற சிட்னி Opera Houseயில் பறை முழக்கம்!

Mar 6, 2020 0:19:39

Description:

After years of planning and careful execution, artists from six states are gathering at the courtyard of an Australian icon, Sydney Opera House to delight the audience to a Traditional Tamil drumming session.  Kulasegaram Sanchayan talks to the representatives from the six states about the event on Saturday, March 14 and their efforts in getting their teams ready for the performance of "Parai."

-

ஆஸ்திரேலிய சின்னங்களின் ஒன்றான Sydney Opera House முன் திடலில், தமிழர் ஆதி இசைக் கருவியான பறை இசை முழங்க பல மாநிலங்களிலிருந்தும் பறை இசையை சில வருடங்களாகப் பழகிவரும் தமிழர்கள் சிட்னி வருகிறார்கள்.  மார்ச் 14 சனிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சி குறித்தும், அதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் குறித்தும் ஆறு மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

"Living with Reality" - யதார்த்தத்துடன் வாழ்

Mar 5, 2020 0:05:36

Description:

"Living with Reality" is a short film which will be screening in Sydney on 21st March.  The director Honston and Sujan who acted in this short film share about the short film and it's screening details with Selvi 

-

"Living with Reality" குறும்படம் இம்மாதம் 21ஆம் தேதி சிட்னியில் திரையிடப்படுகிறது. இந்த குறும்படம் பற்றியும்  திரையரங்கில் ஏன் இக்குறும்படம் வெளியிடப்படுகிறது என்பது பற்றியும் இக்குறும்படத்தின் இயக்குனர் ஹோன்ஸ்டன் மற்றும் இதில் நடித்துள்ள சுஜன் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார் செல்வி. 

Australian News 04 Mar 2020 - சிட்னி முதியோர் இல்லத்தில் கொரோனா வைரஸ் தொற்று.

Mar 4, 2020 0:07:04

Description:

The news bulletin broadcasted on 04 March 2020 at 8pm. Read by Praba Maheswaran.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (04 March 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

UN Commissioner for Human Rights files application with Indian Supreme Court - இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக இந்திய நீதிமன்

Mar 4, 2020 0:10:11

Description:

India has defended its controversial Citizenship Amendment Act (CAA) as an internal issue after the UN Commissioner for Human Rights approached Indian Supreme Court challenging the legislation. What are the implications of UNHCR’s petition?  Analyses R K Radhakrishnan, Associate Editor of Frontline magazine in India.

-

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் (UN Commissioner for Human Rights) இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது ஏற்படுத்தும் தாக்கமென்ன? அலசுகிறார் இந்தியாவின் Frontline பத்திரிகையின் Associate Editor மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் இந்திய அரசியலை அலசுகின்றவருமான R.K.ராதாகிருஷ்ணன் அவர்கள்.

Story of a Domestic Violence survivor who made her daughter a skating champion - குடும்ப வன்முறையை எதிர்கொண்டவர் தன் மகளை 'சம்பியன்' ஆக்கிய கதை !

Mar 4, 2020 0:14:35

Description:

"Kamali" – a documentary film, portrays the life of a 7-Year-old from Mamallapuram India, has changed her life through Skateboarding.  Her mother Suganthy - A single mother fights for her daughter Kamali's empowerment in India through skateboarding. 

-

"கமலி" - மாமல்லபுரத்தில் வாழும் 7 வயது சிறுமியின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஒரு ஆவணப்படம்.  அவரது வாழ்க்கையை, ஸ்கேட்போர்டிங் எப்படி  மாற்றியுள்ளது என்பதை அழகாக சித்தரிக்கிறது.  அவரது தாயார் சுகந்தி, சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை, பெண்கள் ஒதுக்கப்படுவதை, எப்படி எதிர்கொள்கிறார் என்று அழகாக காட்டுகிறது இந்தப் படம்.

Focus: Sri Lanka - இலங்கைத் தேர்தலில் தமிழ்க்கட்சிகளின் நிலைப்பாடு

Mar 4, 2020 0:06:19

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
வடக்கு கிழக்கில் முக்கிய தமிழ் கட்சிகளின் தேர்தல் நிலைப்பாடுகள் எவ்வாறு உள்ளது. இன்றைய பார்வைகள் நிகழ்ச்சி இது தொடர்பில் அமைகின்றது. முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

 

 

Investigation reveals mutli-million dollar cyber-scams based in India - எச்சரிக்கை: இந்தியாவிலுள்ள போலி Call Centreகளினால் பல மில்லியன் டாலர் மோச

Mar 4, 2020 0:05:38

Description:

Hundreds of thousands of people in Australia, the UK, the US, and Canada are being scammed by fake call centres in India, which are making millions of dollars.

The call centres operate across India - but the authorities are unable to stay on top of the problem, despite some recent raids and arrests.

Now the BBC's Panorama program has obtained the recordings of 70,000 calls from one of the criminal call centres that target Britain. That story by the BBC’s Rajini Vaidyanathan for SBS News, produced by பிரபா Maheswaran for SBS Tamil.  

-

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இலட்சக்கணக்கான மக்கள், இந்தியாவிலுள்ள போலி அழைப்பு மையங்களினால் மோசடி செய்யப்படுகிறார்கள். இதுபற்றி BBCயின் ரஜினி வைத்தியநாதன் தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இப்படியான மோசடிகளில் இருந்து எவ்வாறு நம்மைப் பாதுகாத்துக்கொள்வது போன்ற விவரங்கள் மற்றும் ஆலோசனைகளுடன் ACCC ஓர் இணையத்தை அமைத்துள்ளது. அதன் விவரம்:

scamwatch.gov.au

 

 

Australian News 02.03.20 - ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து மற்றுமொரு நபருக்கு முதல் முறையாக பர

Mar 2, 2020 0:08:26

Description:

The news bulletin aired on 2nd March 2020 at 8pm

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (02 மார்ச் 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: செல்வி.

Focus : Srilanka - இலங்கைப் பார்வை

Mar 2, 2020 0:05:40

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.

-

"ஆட்சி மாற்றத்தின் பின்னரான தமிழர்களின் அரசியல் செல் நெறி" என்ற தொனிப்பொருளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் பல்துறைகளையும் சேர்ந்த  அறிஞர்களின் கருத்தாடல் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.  இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன். 

LGBTIQ Rights in Australia - ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள் என்ன?

Mar 2, 2020 0:05:33

Description:

Australia is one of the world’s most tolerant countries according to a 2013 Pew Research poll which found that nearly eight in ten Australians thought homosexuality should be accepted by society. However, LGBTI activists continue to advocate for wider rights despite the legalisation of same-sex marriage in December 2017.

In English : Amy Chien-Yu Wang ; In Tamil : Selvi

-

ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள் குறித்து மேலும் முன்னேற்றம் தேவை என அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றன.  இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu-Wang எழுதிய விவரணம் ; தமிழில் செல்வி.

Our Australia: Aboriginal Instruments - பூர்வகுடி இசைக்கருவிகள்!

Mar 2, 2020 0:09:49

Description:

Different tribes used various instruments including boomerangs, clubs, sticks, hollow logs, drums, seed rattles and of course the didgeridoo. Geetha Mathivanan explains about  Aboriginal Instruments in “Namma Australia”.

-

ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் கலாச்சார அடையாளங்களுள் முக்கியமானவை இசையும் நடனமும். இசை என்றதுமே நம்மில் பலருக்கும் டிஜிரிடூ (Didgeridoo) நினைவுக்கு வரும். ஆம். ஆஸ்திரேலியாவின் அதிமுக்கிய அடையாளங்களுள் ஒன்று பூர்வகுடி மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளுள் ஒன்றான டிஜிரிடூ எனப்படும் காற்றூது இசைக்கருவி. கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ஆண்டுக்கால தொன்மை உள்ளதாக கருதப்படும் இவ்விசைக்கருவி இன்று உலகின் பல நாடுகளிலும் அறிமுகமாகி இசைக்கப்படுகிறது. பூர்வகுடி இசைக்கருவிகள் பற்றிய பல அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.

 

 

Interview with G. Balachandran - Part 2 - “இலக்கியமும் கல்வெட்டுகளும் தமிழர் வரலாறு குறித்து பொய்கூறும்”

Mar 1, 2020 0:10:42

Description:

A retired IAS officer Mr.G. Balachandran is a well-read Tamil scholar and also had  donated  25 lakh Indian rupees for the Tamil Chair. Mr.G. Balachandran who is known for his uncompromising criticism on the Tamils’ attitude over their pride, history and literary works spoke to RaySel.  Part 2.   

-

இந்தியாவின் மிக உயர்ந்த பதவியும் பட்டமும் என்று பார்க்கப்படும் IAS பதவியில் மிக சிறப்பாக செயல்பட்டவர் G.பாலச்சந்திரன் அவர்கள். தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுகொண்டவர் அவர். Howard University யில் தமிழ் இருக்கை அமைய அதிக நிதி உதவி செய்தவர்களில் ஒருவர். ஆனால் தமிழ் மொழி, தமிழ் இனம், சாதி, தமிழரின் வணிகம், விமர்சனம், திறனாய்வு இல்லாத தமிழிலக்கியம் என்று பல அம்சங்கள் குறித்து மேடைகளில் கடுமையான விமரசனங்களை முன்வைத்து வருகிறார். அவரோடு ஒரு மனம் திறந்த உரையாடல். நடத்தியவர்: றைசெல். பாகம்: 2.

Interview with G. Balachandran - Part 3 - “கல்தோன்றா மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய... என்று எத்தனை நாளைக்கு சொல்ல

Mar 1, 2020 0:16:19

Description:

A retired IAS officer Mr.G. Balachandran is a well-read Tamil scholar and also had  donated  25 lakh Indian rupees for the Tamil Chair. Mr.G. Balachandran who is known for his uncompromising criticism on the Tamils’ attitude over their pride, history and literary works spoke to RaySel. Part 3.    

-

இந்தியாவின் மிக உயர்ந்த பதவியும் பட்டமும் என்று பார்க்கப்படும் IAS பதவியில் மிக சிறப்பாக செயல்பட்டவர் G.பாலச்சந்திரன் அவர்கள். தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுகொண்டவர் அவர். Howard University யில் தமிழ் இருக்கை அமைய அதிக நிதி உதவி செய்தவர்களில் ஒருவர். ஆனால் தமிழ் மொழி, தமிழ் இனம், சாதி, தமிழரின் வணிகம், விமர்சனம், திறனாய்வு இல்லாத தமிழிலக்கியம் என்று பல அம்சங்கள் குறித்து மேடைகளில் கடுமையான விமரசனங்களை முன்வைத்து வருகிறார். அவரோடு ஒரு மனம் திறந்த உரையாடல். நடத்தியவர்: றைசெல். பாகம்: 3

Australian News 1 March 2020 - கொரொனோ வைரஸ் பரவுகிறது: ஆஸ்திரேலியர்கள் ஈரான் செல்ல தடை!

Mar 1, 2020 0:06:27

Description:

The news bulletin was broadcasted on 1 March 2020 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (1 மார்ச் 2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Interview with G. Balachandran - Part 1 - “வேலை வழங்கிய தமிழ் இனம் இன்று பிறருக்கு சேவகம் செய்யும் நிலைக்கு வந்துள்ளது”

Mar 1, 2020 0:14:14

Description:

A retired IAS officer Mr.G. Balachandran is a well-read Tamil scholar and also had  donated  25 lakh Indian rupees for the Tamil Chair. Mr.G. Balachandran who is known for his uncompromising criticism on the Tamils’ attitude over their pride, history and literary works spoke to RaySel.     Part 1

-

இந்தியாவின் மிக உயர்ந்த பதவியும் பட்டமும் என்று பார்க்கப்படும் IAS பதவியில் மிக சிறப்பாக செயல்பட்டவர் G.பாலச்சந்திரன் அவர்கள். தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுகொண்டவர் அவர். Howard University யில் தமிழ் இருக்கை அமைய அதிக நிதி உதவி செய்தவர்களில் ஒருவர். ஆனால் தமிழ் மொழி, தமிழ் இனம், சாதி, தமிழரின் வணிகம், விமர்சனம், திறனாய்வு இல்லாத தமிழிலக்கியம் என்று பல அம்சங்கள் குறித்து மேடைகளில் கடுமையான விமரசனங்களை முன்வைத்து வருகிறார். அவரோடு ஒரு மனம் திறந்த உரையாடல். நடத்தியவர்: றைசெல். பாகம்: 1.

Focus: Tamil Nadu - தமிழ்நாட்டில் கேன் குடிநீர் விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடு

Mar 1, 2020 0:05:18

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

தமிழ்நாட்டில் குடிநீரை புட்டிகளில் அடைத்து விற்கும் தனியார் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாகவும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைகிறது என்று  தொடரப்பட்ட ஒரு வழக்கில் நிலத்தடி நீரை எடுப்பதற்கு அரசிடமிருந்து அனுமதி பெறாத குடிநீர் ஆலைகளை மூடி ‘சீல்’ வைக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.  

குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்படுவதால் பாட்டில் அல்லது கேன் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த செய்தி குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.    

Travel industry braces for 'significant headwinds' due to virus - கொரோனா: சிக்கலுக்கு முகம் கொடுக்கும் பயண நிறுவனங்கள்

Mar 1, 2020 0:05:13

Description:

As the coronavirus outbreak hovers on the edge of gaining 'pandemic status', thousands across the globe are cancelling their holidays. That story by Julia Carr-Catzel for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil.

-

கொரோனா வைரஸ் பரவலானது Pandemic - 'ஒரு மாபெரும் தொற்று' என அறிவிக்கப்படுமென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள இவ்வேளையில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் விடுமுறைகளை  இரத்து செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பற்றி Julia Carr-Catzel தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Implications of Sri Lanka’s withdrawal from UNHRC resolution - ஐ.நா. தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதால் என்ன நடக்கும்?

Feb 28, 2020 0:11:37

Description:

Sri Lanka formally notified the UN Human Right Council that it was withdrawing from the UN resolution on post-war accountability and reconciliation.Mathuri Thamilmaran, a human rights researcher and lawyer in Sri Lanka, analyses the implications of Sri Lanka’s decision. Produced by RaySel.  

-

ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்திலிருந்து தாம் வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த தீர்மானம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அலசுகிறார் இலங்கையிலிருந்து மதுரி தமிழ்மாறன் அவர்கள். அவர் ஒரு மனித உரிமை ஆய்வாளர் மற்றும் வழக்குரைஞராவார். அவரோடு பேசியவர்: றைசெல்.      

Australian News Feb 28 2020 - "கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தேவையானவற்றை செய்துள்ளோம்" ஆஸ்திரேலிய

Feb 28, 2020 0:09:56

Description:

Australian news bulletin aired on Friday 28 February 2020 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (28/02/2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். 

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Feb 28, 2020 0:05:47

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.

-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக ஜெனிவாவில் இலங்கை அரசு அறிவித்துள்ளது.  இலங்கை அரசின் மாற்று யோசனைகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நிராகரித்துள்ளார்.

"Private health insurance - is it essential" - "விலை உயரும் தனியார் நலக் காப்பீடு தேவையா?"

Feb 28, 2020 0:14:22

Description:

This feature explains about what is Private Health Insurance and why should we have it 

-

தனியார் நலக் காப்பீடு என்றால் என்ன?  அதற்கான அவசியம் என்ன ? தனியார் நலக் காப்பீடு குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் என்ன?  போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது இந்த விவரணம்.  தயாரித்து வழங்குகிறார் செல்வி.

What is Australia doing to prepare for an outbreak? - Coronavirus பெரும் தொற்று என்று ஆஸ்திரேலியா அறிவித்தால் என்ன நடக்கும் ?

Feb 28, 2020 0:06:25

Description:

The crisis surrounding the spread of Coronavirus is worsening, with Austria, Switzerland, mainland Spain, Brazil and Algeria all reporting their first cases of the disease. The vast majority of infections still remain in China -- but numbers are rising elsewhere, causing the Australian government to activate its emergency response plan for dealing with a potential pandemic. A story by Cassandra Bain and Jennifer Scherer for SBS News, produced by RaySel for SBS Tamil.

-

Coronavirus  பெரும் தொற்று என்று அறிவித்தால் அரசு பல அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அவை எவை என்று விளக்குகிறது இந்த விவரணம்.

SBS News இன் Cassandra Bain & Jennifer Scherer எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

Australian News 26 Feb 2020 - மூன்று குழந்தைகள் படுகொலை தொடர்பில் தகவல் தருவோருக்கு 1 மில்லியன் dollar வெகுமதி

Feb 26, 2020 0:08:21

Description:

The news bulletin broadcasted on 26 February 2020 at 8pm. Read by Praba Maheswaran.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (26 February 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

The Holden Australia retires! - Holden கார் நிறுவனம் ஏன் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறுகிறது?

Feb 26, 2020 0:09:17

Description:

Holden Australia announced that it is closing down by 2021. The brand will be retired by Holden's global parent company General Motors as the American car giant decides to retreat from right-hand drive vehicles internationally.

R.Sathyanathan, a popular broadcaster, explains the history and the reasons of exiting Australia. Produced by RaySel.  

-

ஆஸ்திரேலியாவில் சுமார் ஒரு நூற்றாண்டு வரலாறு கொண்ட Holden கார் நிறுவனம் ஏன் நாட்டிலிருந்து முற்றாக வெளியேறுகிறது?  விளக்குகிறார்பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.        

Focus: Tamil Nadu/India - வடகிழக்கு டெல்லியில் வன்முறை!

Feb 26, 2020 0:05:28

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த போராட்டங்கள் தற்போது பெரும் வன்முறையாக மாறியுள்ளது. நேற்றுவரை நடந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் இது வரை 20-பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு டெல்லியின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி வன்முறை குறித்து ஒரு பார்வை! வழங்குகிறார் நமது இந்திய செய்தியாளர் ராஜ்.

 

 

NAPLAN report reveals success for students from non-English speaking backgrounds - ஆங்கிலம் அல்லாத பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் NAPLAN பரீட்சையில் அ

Feb 26, 2020 0:05:05

Description:

School students from a language background other than English are outperforming their native English-speaking peers in NAPLAN, according to the latest data.

-

அண்மைய NAPLAN தேர்வு முடிவுகளில், ஆங்கில மொழியை முதல் மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்களை விட, ஆங்கிலம் தவிர வேறு மொழியை பின்னணியாகக் கொண்ட பாடசாலை மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்றுள்ளார்கள்.

"Beauty is not enough to compete in this Pageant" - "இந்த அழகுராணி போட்டியில் பங்கேற்க அழகு மட்டும் போதாது"

Feb 26, 2020 0:14:19

Description:

Sindu Varathan is a finalist at this year's Australia International Pageant – The organisers say that it is not just a beauty pageant but a competition to recognise gifted women across the continent and focuses on their talents, accomplishments, personalities, as well as their contributions to the society.

-

ஆஸ்திரேலிய சர்வதேச அழகி போட்டியில் கலந்து கொண்டுள்ள சிந்து வரதன் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வாகியுள்ளார்.  "இது ஒரு அழகுப் போட்டி மட்டுமல்ல, இந்தக் கண்டம் முழுவதும் உள்ள திறமையான பெண்களை அங்கீகரிப்பதற்கான ஒரு போட்டி," என்றும், "அவர்களின் திறமைகள், சாதனைகள், ஆளுமைகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை வெளிக் கொண்டுவரும் நிகழ்வு" என்றும் அதன் அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

Why was Casey Council dismissed? - தமிழர்கள் அதிகமாக வாழும் Casey Council ஏன் கலைக்கப்பட்டது?

Feb 24, 2020 0:14:35

Description:

The Local Government Council of the City of Casey has been dismissed and administrators are appointed.  Why was it dismissed? What is the impact from the dismissal?  Kulasegaram Sanchayan explores.

-

விக்டோரிய மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி ஒன்றான “City of Casey” உள்ளூர் ஆட்சி சபை கலைக்கப்பட்டுள்ளது.  ஏன் கலைக்கப்பட்டது?  அதன் பின்னணி என்ன ? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?  என்பன குறித்த ஒரு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Australian News 24.02.20 - குடும்ப வன்முறைக்கான சட்டங்களில் மாற்றங்கள் தேவை என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள

Feb 24, 2020 0:06:46

Description:

The news bulletin aired on 24th February 2020 at 8pm

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (24 பிப்ரவரி 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: செல்வி.

Viva: Coming out at 60 - ஓரினச்சேர்க்கையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் !!

Feb 24, 2020 0:06:02

Description:

Understanding your sexuality is a personal journey which can often be painful.

For some who are attracted to the same sex, it can be a lifetime of confusion and struggle. 

In English : Amy Chien Yu-Wang ; In Tamil : Selvi

-

ஒருவர் தனது பாலினம் குறித்து சரியாக புரிந்து கொண்டாலும் அதனை வெளிப்படுத்துவது என்பது சவாலான விடயமே.  இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien Yu - Wang எழுதிய விவரணம் - தமிழில் செல்வி 

Focus : SriLanka - ஐ.நா தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும், தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்த

Feb 24, 2020 0:05:23

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறியுள்ள நிலையில், பேரவையின் 43வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது. ஐ.நா தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும், தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.  இதேவேளை இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரையில் வெளிவரும் என்று அமைச்சர்கள் தெரிவித்து வரும் நிலையில், கிழக்கில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உதயமாகியுள்ளது.  இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக தருகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Thillaiyadi Valliammai - “புனிதமகள்” வள்ளியம்மை

Feb 23, 2020 0:04:41

Description:

Thillaiyadi Valliammai was a South African Tamil woman who worked with Mahatma Gandhi in her early years when she developed her nonviolent methods in South Africa fighting its apartheid colonial power. Produced by RaySel.  

-

காந்தியடிகளின் தென் ஆப்ரிக்கா போராட்டங்கள் வெற்றி பெற முக்கிய காரணம் அவர் பின்னே அணிவகுத்து நின்ற தமிழர்கள். அந்த தமிழர்களில் குரிப்பிடத்தகுந்தவர்களில் ஒருவர் - போராட்டத்தில் கலந்து உயிர் விட்டவர் 16 வயது வள்ளியம்மை. அவர் குறித்த பதிவை முன்வைக்கிறார் றைசெல்.

Why Tamil associations not coming together to celebrate Pongal? - ஏன் பொங்கலுக்குக் கூட தமிழ் அமைப்புகள் ஒன்றுபடுவதில்லை?

Feb 23, 2020 0:15:27

Description:

These are the opinions shared by our guests Sivasuthan of Casey Tamil manram in Melbourne and Venkatesh Mahadevan in Sydney in Vangapesalam program. Produced by RaySel.

-

பொங்கல் விழா மதம் கடந்து, சாதி கடந்து, பிரதேசம் கடந்து அனைவரும் தமிழர்கள் என்ற மொழி இன அடையாளத்துடன் நடத்தப்படவேண்டிய விழா. ஆனால் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் பல தமிழ் அமைப்புகள் இணைந்து கொண்டாடினாலும் மெல்பன், சிட்னி போன்ற பெரும் நகரங்களில் மட்டும்  தமிழ் அமைப்புகள் அனைத்தும் இணைந்து கொண்டாடுவதில்லை. குறிப்பாக சிட்னியில் ஒவ்வொரு அமைப்பும் அவர்களுக்கு வசதியாக பொங்கல் விழாக்களை ஆங்காங்கே நடத்திக்கொண்டுள்ளன. ஏன் இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து மாபெரும் பொங்கல் விழா என்று ஒரேயொரு விழாவாக பொங்கலை நடத்துவதில்லை? வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்.

சிறப்பு விருந்தினர்கள்: மெல்பன் பெருநகரின் கேசி தமிழ் மன்றத்தின் சிவசுதன் மற்றும் சிட்னியில் வாழும் சமூக ஆர்வலர் வெங்கடேஷ் மகாதேவன் ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.      

Australian News 23 February 2020 - பிரிஸ்பேன் நகரில் கத்தியுடன் அச்சுறுத்திய நபரை போலீசார் சுட்டுகொன்றனர்

Feb 23, 2020 0:08:01

Description:

The news bulletin was broadcasted on 23 February 2020 (Sunday) at 8pm.

-

பிரிஸ்பேன் நகரில் கத்தியுடன் அச்சுறுத்திய நபரை போலீசார் சுட்டுகொன்றனர்

Focus: Tamil Nadu - துப்பாக்கிச்சூடு விசாரணையில் கலந்துகொள்ள விலக்கு கோருகிறார் ரஜினிகாந்த்

Feb 23, 2020 0:05:03

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

Sterlite ஆலையை மூடவேண்டும் என்று கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு இந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்துவரும் அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இதில் ரஜினிகாந்த் எதிர்வரும் செவ்வாய்கிழமை பிப்ரவரி 25-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் விசாரணை ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, நடிகர் ரஜினி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

World Radio Day - SBS Radio is celebrating 45 years. - ""தமிழ் தெரிந்தவரெல்லாம் வானொலி அறிவிப்பாளராகும் நிலைமை""

Feb 23, 2020 0:14:30

Description:

13th of February is World Radio Day - a day to celebrate radio and how it shapes our lives. Praba Maheswaran is producing a special segment in Tamil to mark this special day.

And also this year SBS Radio is celebrating 45 years. 

-

பெப்ரவரி 13ம் திகதி உலக வானொலி தினமாகும். ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கானா பிரபா, "இன்பத்தமிழ் ஒலி" பாலசிங்கம் பிரபாகரன், தாயகம் ஒலிபரப்பின் மகேந்திரன் சத்தியபாலன், மெல்பேர்ன் - வானிசை ஒலிபரப்பின் குமார் சின்னத்துரை மற்றும் பிறிஸ்பேர்ன் - தமிழ் ஒலியின் சிவா கைலாசம் ஆகியோரின் கருத்துகளுடன் உலக வானொலி தின சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினைப் படைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.    

Caring your Ears - காதுகளைப் பராமரிப்பது எப்படி?

Feb 23, 2020 0:12:48

Description:

ENT Surgeon Dr Raguram Sivasubramaniam speaking to Praba Maheswaran about caring of your ears and hearing health.
Dr Raguram Sivasubramaniam is an Australian trained ENT surgeon with fellowship experience and training working in Sydney. Dr Siva manages general adult & paediatric ENT conditions with special interest and training in the management of nasal and skull base disorders including allergy, sinusitis, nasal obstruction, nasal tumours, and rhinoplasty. He also has an interest in the assessment and treatment of snoring and sleep apnoea.

-

மார்ச் மாதம் 3 ம் திகதி காது பராமரிப்பு நாள் அதாவது Ear Care Day ஆகும். காதின் முக்கியத்துவம், காது தொடர்பிலான நோய்கள் மற்றும் அதன் பராமரிப்புகள் பற்றி சிட்னியிலுள்ள ENT சிகிச்சை நிபுணர் (Ear Nose and Throat Surgeon) Dr ரகுராம் சிவசுப்பிரமணியம் அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். 

 

 

Two Pongal festival celebration in N.S.W Parliament is essential? - நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் இரு பொங்கல் விழாக்கள் அவசியமா?

Feb 21, 2020 0:15:25

Description:

In N.S.W parliament this year two separate Pongal festival were celebrated.  Is this dividing our Tamil community ? This feature explains more.

-

நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு இரு வெவ்வேறு பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டன.  பொங்கல் விழா ஏன் இரண்டு முறை கொண்டாடப்பட்டது? இது அவசியமா? இது நமது சமூகத்தின் ஒற்றுமையின்மையை காட்டுகிறதா?  அலசுகிறது இந்த விவரணம் -  தயாரித்து வழங்குகிறார் செல்வி.  

International Mother Language Day 2020 - "கலப்பின திருமணம் செய்த பெற்றோர் பேசுவது ஆங்கிலமே" !

Feb 21, 2020 0:14:20

Description:

International Mother Language Day is an observance held annually on 21 February worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism.

-

இன்று உலக தாய்மொழி தினம்.  கலப்பின  திருமணம் செய்த பெற்றோரின் குழந்தைகள் தாய்மொழி என்று எதைக் கருதுகிறார்கள் என்ற கருத்துகளுடன், புதிய முறைகளில் தமிழ் கற்பிப்பவர்களின் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Advocates for Domestic Violence victims call for greater action after Baxter family tragedy - “குடும்ப வன்முறையை ஒழிப்போம்”

Feb 21, 2020 0:03:04

Description:

The family of Hannah Clarke,  the woman who died in a car fire that also claimed the lives of her three children, labelled her estranged husband a heartless monster.

-

அவரது மூன்று குழந்தைகளின் உயிரையும் அவரையும் கொன்ற - வாகனம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதில் இறந்த - ஹனா கிளார்க் (Hannah Clarke), தனது முன்னாள் கணவரை ‘இரக்கமற்ற அசுரன்’ என்று முத்திரை குத்தியிருந்தார்.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Feb 21, 2020 0:05:49

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.

-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கும் செயற்பாட்டிலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Australian News 21 Feb 2020 - Diamond Princess கப்பலிலிருந்து இங்கு வந்த 164 பயணிகளில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Feb 21, 2020 0:09:25

Description:

Australian news bulletin aired on Friday 21 February 2020 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (21/02/2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.

Namma Thamil: Introducing Ani - நம்ம தமிழ்: அணிகள் அறிமுகம்

Feb 21, 2020 0:10:17

Description:

“Namma Thamil”, series on Tamil language, is presented by Ms Yasotha Pathmanathan. Part 2. Produced by RaySel.

-

தமிழ் மொழியின் அருமை, பெருமை, சிறப்பு என்று பலவித அம்சங்களை நாம் அறிந்திருப்போம். அப்படியான தமிழ் மொழிக்கு அணி இலக்கணம் சேர்க்கும் அழகை  “முன்வைக்கிறார் யசோதா பத்மநாதன் அவர்கள். இலக்கியத்தின் அணிகளை அவர் இன்று அறிமுகம் செய்கிறார்.  பாகம் 2. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.  

Australian News 19 Feb 2020 - கொரோனா தொற்று ஏற்பட்ட கப்பலிலுள்ள ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்புகின்றனர்

Feb 19, 2020 0:08:00

Description:

The news bulletin broadcasted on 19 February 2020 at 8pm. Read by Maheswaran Prabaharan.

 

  -

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (19 February 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Interview with Indian High Commissioner to Australia - இந்திய –ஆஸ்திரேலிய உறவு எப்படியுள்ளது? – விளக்குகிறார் இந்தியத் தூதர்

Feb 19, 2020 0:10:15

Description:

H.E. Mr A.  Gitesh Sarma, High Commissioner of India spoke to RaySel in Canberra.

-

ஆஸ்திரேலியாவுக்கான புதிய இந்தியத் தூதராக பதவியேற்றிருப்பவர் மதிப்புக்குரிய A. Gitesh Sarma அவர்கள். கடந்தவாரம் கேன்பராவில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பொங்கல்விழாவின்போது நாம் அவரைச் சந்தித்து உரையாடினோம். சந்தித்தவர்: றைசெல்.   

Focus: Tamil Nadu/India - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Feb 19, 2020 0:05:45

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

 

  -

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கண்டன பேரணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் சென்னை கலைவாணர் அரங்கில் இருந்து பேரணியாக சென்று  சட்டமன்றத்தை  முற்றுகையிடப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் அறிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து தலைமைச்செயலகம் முழுவதும் 5 காவல் துணை ஆணையர்கள் தலைமையில், 550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னை முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது இந்திய நிருபர் ராஜ். 

Deadly bush-fire season impacting more than three quarters of all Australians - காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தெரியுமா?

Feb 19, 2020 0:04:27

Description:

The impact of the deadly bushfire season could be even worse than first thought, with new data suggesting more than three quarters of Australians have been affected by the crisis. That story by Rachel Cary, produced by Praba Maheswaran for SBS Tamil.

-

இப்பருவகாலத்திலேற்பட்ட காட்டுத்தீ நெருக்கடிகளினால்  முக்கால்வாசிக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புதிய தரவுகள் கூறுகின்றன. இதுபற்றி Rachel Cary தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

“We have to create our own form of Cinema” - "எங்கள் சொந்த சினிமா வடிவத்தை நாம் உருவாக்க வேண்டும்"

Feb 19, 2020 0:20:01

Description:

Ranjith Joseph has directed a film titled, “Sinamkol.”  The movie was filmed in the war-torn Tamil regions of Sri Lanka. The movie addresses the post-war issues faced by the Tamil people - both culturally and economically.

-

“சினம்கொள்”என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார் ரஞ்சித் ஜோசஃப்.  இந்தத் திரைப்படம், இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.  போருக்குப் பிந்தைய காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் கலாச்சார பிரச்சினைகளை “சினம்கொள்”திரையில் எடுத்து வருகிறது.

"It’s Sathir not Bharathanatyam" - "நான் ஆடுவது பரத நாட்டியம் அல்ல - சதிர்"

Feb 17, 2020 0:18:20

Description:

Swarnamalya is an Indian actress, TV anchor, renowned Bharathanatyam dancer who has done immense research about that art.

-

ஸ்வர்ணமால்யா ஒரு திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் மட்டுமல்லாமல், பரதநாட்டியம் குறித்து ஆழமாக ஆராய்ச்சி செய்துள்ளார்.

"Not concerned about controversies" - "சர்ச்சைகள் பற்றி நான் கவலைப்படவில்லை"

Feb 17, 2020 0:11:50

Description:

Swarnamalya is an Indian actress, TV anchor, renowned Bharathanatyam dancer who has done immense research about that art.

-

ஸ்வர்ணமால்யா ஒரு திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் மட்டுமல்லாமல், பரதநாட்டியம் குறித்து ஆழமாக ஆராய்ச்சி செய்துள்ளார்.

Australian News 17.02.20 - ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் உள்ள ஆஸ்திரேலியர்கள் விமானம் மூல

Feb 17, 2020 0:07:32

Description:

The news bulletin aired on 17th February 2020 at 8pm

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (17 பிப்ரவரி 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: செல்வி.

Focus : SriLanka - இலங்கையின் இராணுவத்தளபதிக்கு அமெரிக்கா விடுத்துள்ள பயணத்தடை !!

Feb 17, 2020 0:05:29

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்கா விடுத்துள்ள பயணத்தடையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதனை வரவேற்றுள்ளது.   

இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

How to prepare for a job interview? - நேர்முகத்தேர்வுக்கு தயாராவது எப்படி?

Feb 17, 2020 0:05:53

Description:

Finding work for the first time or looking for a new job can take a long time in Australia. So when you finally get called up for a job interview, it's exciting at first, but it can also become quite stressful.

The only way to do well during a job interview is to be prepared and have an idea of what to expect.

In English : Audrey Bourget  : In Tamil : Selvi

-

புதிய வேலை ஒன்றை தேடுவது என்பது சவாலான காரியம். அது எந்த துறையாக இருந்தாலும் அதில் போட்டிகள் நிறைந்திருக்கக்கூடும். ஆகவே அவ்வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்வதற்கு முன் எப்படி தயாராக வேண்டும் என இத்துறையில் உள்ள நிபுணர்களின் ஆலோசனைகளை எடுத்து வருகிறது இந்த விவரணம்.

ஆங்கிலத்தில் : Audrey Bourget ; தமிழில் : செல்வி

Introducing Australian short story – 2 - ஆஸ்திரேலிய சிறுகதை: The Lucky Couple

Feb 16, 2020 0:11:25

Description:

Shankar Jeyapandian of 4EB Tamil presents “Namma Australia”. Produced by RaySel.

-

ஆஸ்திரேலியாவில் பல்வேறு தளங்களில் பரிசு பெற்ற சிறுகதைகளையும், அதன் ஆசிரியர்களையும் பற்றிய தொடர் இது. 

Elyne Mitchell Writing Award என்ற அமைப்பு நடத்திய போட்டியில் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற எழுத்தாளர் Dixie Coutts அவர்களின் “The Lucky Couple” என்ற சிறுகதையை அறிமுகம் செய்கிறோம். “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைப்பவர்: 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.   

Australian News - ஜப்பானில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கப்பலில் ஆஸ்திரேலியர் உட்பட மேலும் பலருக்கு க

Feb 16, 2020 0:06:03

Description:

The news bulletin was broadcasted on 16 February 2020 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (16 பெப்ரவரி 2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Focus: Tamil Nadu - தமிழக நிதிநிலை அறிக்கை: நல்ல திட்டங்களா? தேர்தல் முன்னோட்டமா?

Feb 16, 2020 0:03:26

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

தமிழக அரசின் 2020-21ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் சமர்பித்தார். தமிழக டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக தமிழக் அரசு அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கோயில் நிலங்கள் மீட்பு, கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம், சிறப்பு போக்ஸோ நீதிமன்றக் கட்டடம், அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்று பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் இருந்தாலும், இது 'தேர்தல் பீதியில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்' என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. தமிழகத்திலிருந்து நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் பார்வை இது.    

Focus: Tamil Nadu - இந்திய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம்

Feb 16, 2020 0:03:36

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து, சென்னை வண்ணாரப்பேட்டை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  சென்னை வண்ணா‌ரப்பேட்டையில் கடந்த வெள்ளியன்று மாலை போராட்டத்தில் காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த செய்தி குறித்து தமிழகத்திலிருந்து நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் பார்வை இது.     

“I continue working with people” - நீங்கள் தேசதுரோகியா? – பதிலளிக்கிறார் பதவி விலகிய IAS அதிகாரி சசிகாந்த் செந்தில்

Feb 16, 2020 0:15:10

Description:

Former IAS officer Sasikanth Senthil who resigned from IAS position protesting over Indian government policies spoke to RaySel.

-

இந்தியாவின் மிக உயர்ந்த பதவி என்று பார்க்கப்படும் IAS (இந்திய ஆட்சிப் பணி) பதவியிலிருந்து விலகியவர் சசிகாந்த் செந்தில் அவர்கள். IAS  பணியிலிருந்து விலகிய காரணம், தேச துரோகி என்று அவர் மீது முன்வைக்கப்படும் விமர்சனம், அவரின் எதிர்கால திட்டம் என்று பல்வேறு அம்சங்கள் குறித்து மனம்திறந்து பேசுகிறார். சந்தித்து உரையாடியவர்: றைசெல்.

Meet Mr & Mrs Senthil - 'வேறு சாதி என்பதால் பெற்றோர் மறுத்தனர்'

Feb 14, 2020 0:07:44

Description:

Valentines Day, which is annually held on February 14, is one of the most romantic days in the year for many people in countries such as Australia.  Praba Maheswaran brings you the romantic love story of Senthil Jayaraman and Ponnu Senthil on this day.  

-

உலகக்காதலர்களின் தேசிய நாள் பெப்ரவரி 14. இந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடுபவர்களில் செந்தில் ஜெயராமன், பொன்னு செந்தில் தம்பதியும் அடங்குவர். இந்தக் காதல் தம்பதியின் கதையுடன் பொன்னுவின் தாயார் புஷ்பம் ஆறுமுகம் அவர்கள் கூறியனவற்றையும், காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக எடுத்து வருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். 

Meet Mr & Mrs Beadle - 'யாழ்ப்பாணத்தில் காதலித்தது மிகவும் சவாலாக இருந்தது'

Feb 14, 2020 0:08:21

Description:

Valentines Day, which is annually held on February 14, is one of the most romantic days in the year for many people in countries such as Australia. Praba Maheswaran brings you Mr & Mrs Beadle's romantic love story on this day.

-

உலகக்காதலர்களின் தேசிய நாள் பெப்ரவரி 14. இந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடுபவர்களில் ராஜகுமாரன் மீனா Beadle தம்பதியும் அடங்குவர். இந்தக் காதல் தம்பதியின் கதையை, காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக எடுத்து வருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Private car sales - Tips for buyers and sellers - பயன்படுத்திய காரை தனிப்பட்ட முறையில் விற்பது எப்படி? அதை வாங்குவது எப்படி?

Feb 14, 2020 0:12:31

Description:

Tips for both buyers and sellers in private car sale

-

நாம் பயன்படுத்திய காரை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய நினைக்கும் போது அதில் உள்ள சிக்கல்கள் என்ன?  எவ்வாறு அவதானமாக விற்பனை செய்ய வேண்டும்? தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யப்படும் காரை வாங்குபவர்கள் எவ்வாறு பரிசோதித்து அவதானமாக வாங்க வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த விவரணம்.  தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.  

"Government has not been able to improve the welfare of Indigenous people as planned" - Prime Minister - "அரசு திட்டமிட்டபடி பூர்வீக மக்களின் நலனை மேம்படுத்த ம

Feb 14, 2020 0:07:15

Description:

It's been 12 years since Kevin Rudd's national apology to Indigenous Australians for the forced removal of children.  The survivors are hoping to bring their story to a new audience. 

-

திருடப்பட்ட தலைமுறையினரிடம் அப்போதைய பிரதமர் Kevin Rudd மன்னிப்புக் கேட்டு 12 ஆண்டுகள் முடிந்து விட்டன.  ஆகின்றன. அப்படி திருடப்பட்ட தலைமுறையை சேர்ந்த சிலர் தமது கதைகளை மற்றவர்களும் அறியச் செய்ய ஒரு பேரூந்தில் புறப்பட்டிருக்கிறார்கள்.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Feb 14, 2020 0:06:46

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.

-

இலங்கையின் யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதை செய்த இரு மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.  இது தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் நடைபெறுகின்றன.  மற்றும், முன்னாள் வடமாகாண முதல்வர் தலைமையிலான கூட்டணியை மகிந்த ராஜபக்க்ஷே அணி வரவேற்றிருந்தாலும் தமிழ்த்தரப்பிலிருந்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன.  இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Australian News 14/02/2020 - Jetstar பணியாளர்கள் அடுத்த வாரம் வேலைநிறுத்தம் செய்வார்கள்

Feb 14, 2020 0:09:25

Description:

Australian news bulletin aired on Friday 14 February 2020 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (14/02/2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். 

12/02/2020 Australian News - கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி பரிசோதனைகளை விஞ்ஞானிகள் குழுவொன்று விலங்குகள் மீது ஆ

Feb 12, 2020 0:09:47

Description:

The news bulletin broadcasted on 12 February 2020 at 8pm. Read by Maheswaran Prabaharan.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (12 February 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Focus: Tamil Nadu/India - டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி

Feb 12, 2020 0:05:29

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களில் அமோக வெற்றி பெற்று அங்கு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. பாஜகவால் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியோ தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வியை சந்தித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனின் தொடர் வெற்றிகளுக்கு  காரணம் என்ன? எங்கு சறுக்குகின்றன தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ்? கூடுதல் விவரங்களுடன் நமது செய்தியாளர் ராஜ் ! 

 

 

A eulogy for Sisu.Nagendran - பல்துறைக் கலைஞர் சிசு.நாகேந்திரன்

Feb 12, 2020 0:06:47

Description:

SBS Tamil presents a eulogy for a well-known writer and artist Sisu.Nagendran. Produced by RaySel.     

-

சிசு. நாகேந்திரன் அவர்கள் ஓய்வின்றி உழைத்த எழுத்தாளர். 99 வயதை நெருங்கும் தருணத்தில் சிட்னியில் கடந்த திங்கள் (10 Feb 2020) அவர் நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார். அவர் குறித்த ஒரு நினைவுப் பகிர்வு. முன்வைப்பவர்: றைசெல்.

“Tamils make Australia a great Multi-cultural country” - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மற்றுமொரு பொங்கல் விழா!

Feb 12, 2020 0:05:29

Description:

Tamil Arts and Culture Association Inc. (TACA) has organised a Pongal festival at the Australian Parliament yesterday (11 Feb 2020). Kulasegaram Sanchayan reports from the festival venue.

-

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக்கு கழகத்தினால் ஒழுங்கமைக்கப்படும் பொங்கல் விழா, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Condemn discrimination against Chinese Australians - கொரோனா: ஆஸ்திரேலியாவில் சீனருக்கு எதிரான பாகுபாடு

Feb 12, 2020 0:06:13

Description:

Coronavirus is 'Public Enemy Number One', says WHO chief. The World Health Organisation has issued its most severe warning yet about the potential impacts of the deadly coronavirus. As fears around the Coronavirus continue to grow, Chinese Australians have warned of increasing discrimination and xenophobia. That story by Naveen Razik and Abbie O’Brien for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil.

-

கொரோனா தொற்றுநோயானது பயங்கரவாதத்தை விட மோசமான உலகளாவிய அச்சுறுத்தலை முன்வைத்துள்ளதென ஐ.நா. சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளமை, கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவது தொடர்பிலான முதலாவது உச்சிமாநாடு மற்றும் சீனர்களுக்கெதிராக ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பாகுபாடுகள் தொடர்பிலான விவரணம். Naveen Razik மற்றும் Abbie O’Brien தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

Controversies created by National Anthems - தேசிய கீதங்கள் உருவாக்கிய சர்ச்சைகள்

Feb 10, 2020 0:14:15

Description:

National Anthems have caused some controversies in recent times.  Some have arisen for political reasons.  Some controversies have been politicised because of National Anthems.  Kulasegaram Sanchayan reviews.

-

அண்மைக் காலங்களில் தேசிய கீதங்கள் சில சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.  அரசியல் காரணங்களுக்காக சில சர்ச்சைகள் உருவாகியுள்ளன.  உருவான சில சர்ச்சைகள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன.  இவை குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Australian News 10.02.20 - கொரோனா வைரஸ் குறித்த புதிய கண்டுபிடிப்பு : தடுப்பு மருந்து தயாரிக்க உதவும்

Feb 10, 2020 0:09:53

Description:

The news bulletin aired on 10th February 2020 at 8pm

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (10 பிப்ரவரி 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: செல்வி.

Focus : SriLanka - தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி உருவாகியது !!

Feb 10, 2020 0:05:50

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை எதிர்கொள்ளும் வகையில், வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ்மக்கள் தேசியக் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.  இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன். 

Check your eyes before it’s too late - உங்களின் கண் பார்வையை பாதுகாப்பது எப்படி?

Feb 10, 2020 0:05:19

Description:

Not everyone has the time to get their eyes checked regularly. With the eyes responsible for so much of our daily activities, and 93 per cent of people aged over 55 affected by long-term vision disorders, specialists say it is essential that you don’t leave it until it’s too late.

English : Amy Chien-Yu Wang ; Tamil : Selvi

-

நாம் அனைவரும் நமது கண்களை தவறாமல் பரிசோதித்து பார்த்துக்கொள்வது அவசியம். இதனால் வயதான காலத்தில் வரக்கூடிய பல கண் நோய்களை தடுக்கமுடியும் எனக் கூறப்படுகிறது.

ஆங்கிலத்தில் : Amy Chien-Yu Wang ; தமிழில் : செல்வி

How to stop elder financial abuse at the hands of loved ones? - முதியோர் எதிர்கொள்ளும் வருமான சுரண்டல் : தடுப்பது எப்படி?

Feb 10, 2020 0:12:30

Description:

Elder financial abuse is a type of elder abuse in which misappropriation of financial resources or abusive use of financial control, in the context of a relationship where there is an expectation of trust, causes harm to an older person.

-

Elders Financial Abuse - முதியோர் வருமான சுரண்டல் என்றால் என்ன?  இதற்கான சட்ட உதவிகளை எங்கு பெற்றுக்கொள்ளலாம்?  இது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த விவரணம்.  தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.

National Apology to Stolen Generations - திருடப்பட்ட தலைமுறையினரிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்பு கோரியது

Feb 9, 2020 0:09:59

Description:

On 13 February 2008, the Parliament of Australia issued a formal apology to Indigenous Australians for forced removals of Australian Indigenous children from their families by Australian federal and state government agencies.  Kulasegaram Sanchayan reflects on the event.

-

2008ம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 13ம் நாள் பூர்வீக மக்களிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்புக் கோரியது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Australian News - தொடர்ந்து பெய்யும் கனமழை பல விபத்துகளை ஏற்படுத்திவருகிறது

Feb 9, 2020 0:07:33

Description:

The news bulletin was broadcasted on 9 February 2020 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (9 பெப்ரவரி 2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Focus: Tamil Nadu - நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரிசோதனை அரசியலா?

Feb 9, 2020 0:05:14

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

தமிழ்நாட்டின் பிரபல நடிகர் விஜய் வீட்டில் கடந்த வாரம் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை எத்தகைய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தும்? தமிழகத்திலிருந்து நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் பார்வைகள் இது.     

Coronavirus takes its toll on suburban businesses - Coronavirus நமது நகரங்களில் ஏற்படுத்தும் பொருளாதார தாக்கம் என்ன?

Feb 9, 2020 0:04:51

Description:

Business owners are feeling the financial impact of the coronavirus in a number of suburbs across the country. A story by Gloria Kalache for SBS News, produced by RaySel for SBS Tamil.

-

Coronavirus  அச்சத்தில் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சீனாவிலிருந்து பயணிகள் விமானம் வந்திறங்க அரசு அனுமதி மறுக்கிறது. இவை வர்த்தகத்தின்மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பான செய்தியின் விரிவாக்கம்.

SBS News இன் Gloria Kalache எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

Interview with S Rajeswari IPS - “தாத்தா வழியில் நேர்மையான அதிகாரியாக தொடர்வேன்”- கக்கன் பேத்தி ராஜேஸ்வரி IPS

Feb 9, 2020 0:16:02

Description:

S Rajeswari IPS is receiving a prestigious award from the Indian President for a dedicated police service. RaySel spoke to S Rajeswari IPS.

-

தமிழக காவல்துறை அதிகாரியான S.ராஜேஸ்வரி IPS அவர்களுக்கு சிறந்த காவல் பணிக்கான இந்திய குடியரசுத் தலைவரின் விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நேர்மைக்கும், எளிமைக்கும் இலக்கணமாக இறுதிவரை வாழ்ந்து மறைந்த அமைச்சர் கக்கன் அவர்களின் பேத்தி ராஜேஸ்வரி அவர்கள். அவரை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.    

Pugazhendhi - a live theatre play in Tamil - புகழேந்தி - ஆஸ்திரேலிய தமிழ் இளைஞர்களின் புதுமை

Feb 8, 2020 0:12:23

Description:

Pugazhendhi is a spectacular live theatre play in Tamil, staged by aspiring Tamils who have a strong passion for arts. Praba Maheswaran is speaking to Athithan Thirunanthakumar, Avinash Thanabalan and Nishitha Sritharan about the play.
Time & Location: 29 Feb, 5:30 pm
The Science Theatre, F13, UNSW, Union Rd, Kensington NSW 2033, Australia

-

ஆதித்தன் திருநந்தகுமார், ஜனார்த்தன் குமரகுருபரன் ஆகியோரின் இயக்கத்தில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் புகழேந்தி எனும் நாடகம் சிட்னியில் மேடையேறவுள்ளது. அதுபற்றிய விவரங்களை ஆதித்தன் திருநந்தகுமார், நிஷித்தா சிறீதரன் மற்றும் அவினாஷ் தனபாலன் ஆகியோரிடம் உரையாடி கேட்டறிகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

நாடகம் அரங்கேறவுள்ள நாள்/நேரம்: 29 Feb சனிக்கிழமை. மாலை 5:30.
இடம்: The Science Theatre, F13, UNSW, Union Rd, Kensington NSW 2033
மேலதிக விவரம்/நுழைவுச்சீட்டுகள்:
Tickets online at www.eventboss.com/events/pugazhendhi 

 

 

World Radio Day - SBS Radio is celebrating 45 years - "தமிழ் தெரிந்தவரெல்லாம் வானொலி அறிவிப்பாளராகும் நிலைமை"

Feb 8, 2020 0:14:27

Description:

13th of February is World Radio Day - a day to celebrate radio and how it shapes our lives. Praba Maheswaran is producing a special segment in Tamil to mark this special day.

And also this year SBS Radio is celebrating 45 years. 

-

பெப்ரவரி 13ம் திகதி உலக வானொலி தினமாகும். ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கானா பிரபா, "இன்பத்தமிழ் ஒலி" பாலசிங்கம் பிரபாகரன், தாயகம் ஒலிபரப்பின் மகேந்திரன் சத்தியபாலன், மெல்பேர்ன் - வானிசை ஒலிபரப்பின் குமார் சின்னத்துரை மற்றும் பிறிஸ்பேர்ன் - தமிழ் ஒலியின் சிவா கைலாசம் ஆகியோரின் கருத்துகளுடன் உலக வானொலி தின சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினைப் படைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.    

 

 

Leander Paes bids final goodbye to Australian Open - இதுவே என் கடைசி: ஓய்வு முடிவை அறிவித்தார் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்!

Feb 7, 2020 0:11:59

Description:

The 46-year old from Kolkata, a 18 times Grand Slam winner (8 double + 10 mix doubles) and a Olympic bronze medalist in Atlanta 1996, announced his retirement at the end of the 2020 season. 

"I will not miss the loneliness of tennis" said Paes, who's also a sport ambassador for the Indian state of Haryana. 

Italian producer Dario Castaldo interviewed Paes during this year Australian Open and this feature is produced based on his interview.

-

லியாண்டர் பயஸ் - மூன்று தசாப்தங்களாக டென்னிஸ் விளையாடி வரும் இந்திய டென்னிஸ் வீரர்.  இந்த ஆண்டு இறுதியுடன் டென்னிஸிலிருந்து ஒய்வு பெற போவதாக அறிவித்துள்ள அவரை நடந்து முடிந்த ஆஸ்திரேலியான் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துக்கொள்ள வந்திருந்த போது இத்தாலியன் ஒலிபரப்பு சார்பில் Dario Castaldo செய்த நேர்காணலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட விவரணம் -  தயாரித்து வழங்குகிறார் செல்வி.

John Pennycuick: The man who changed the lives of Tamils - பென்னிகுக்கை ஏன் தமிழர்கள் வணங்குகின்றனர்?

Feb 7, 2020 0:06:09

Description:

John Pennycuick, a trained civil engineer who worked in India transformed the lives of Tamils. In fact, for the people of the Cumbum-Theni region, Pennycuick is forever sutured into their consciousness, a flame of aspiration glowing through their darkest and driest years. RaySel presents Kalathuli on Pennycuick.  

-

தமிழ்நாட்டின் தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் சில விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் குழந்தைகளுக்கு பென்னிகுக் என்று பெயர் வைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது. இந்த பகுதிகளில் இன்றும் பென்னிகுக் நினைவைப் போற்றிட ஆண்டு தோறும் கிராமத்துத் தெய்வங்களை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் கூட உள்ளது. யார் இந்த பென்னிகுக்? விளக்குகிறார் றைசெல்.   

Scott Morrison announces new cabinet line-up - அரசியல் இறுக்கத்தின் மத்தியில் அமைச்சரவை மாற்றம்

Feb 7, 2020 0:04:24

Description:

Prime Minister Scott Morrison and Deputy Prime Minister Michael McCormack have announced the new-look government front bench.

-

புதிய தோற்றமுடைய அமைச்சரவையை பிரதமர் Scott Morrison மற்றும் துணைப்பிரதமர் Michael McCormack அறிவித்துள்ளனர்.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Feb 7, 2020 0:05:26

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவர்கள் இன்று எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Feb 7, 2020 0:09:14

Description:

Australian news bulletin aired on Friday 07 February 2020 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (07/02/2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். 

05/02/2020 Australian News - கொரோனா வைரஸ்: Christmas தீவு நிரம்பியுள்ளதால் மேலதிகமானோர் முன்னாள் சுரங்க முகாம்களுக்

Feb 5, 2020 0:10:17

Description:

The news bulletin broadcasted on 05 February 2020 at 8pm. Read by Maheswaran Prabaharan.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (05 February 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Focus: Tamil Nadu/India - தமிழகத்தில் ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு தேர்வுகள் இல்லை!

Feb 5, 2020 0:05:25

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தும் திட்டம் தமிழக்தில் கைவிடப்பட்டு உள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பணிகள் துவங்கி, பின்பு நாடாளுமன்றத்தில் சட்டமானது. தற்போது கடுமையான எதிர்ப்பின் காரணமாக இந்த பொதுத்தேர்வு திட்டம் கைவிடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை!  

 

 

The architectural significance of Thanjavur’s Big Temple - குடமுழுக்கு சிறப்புப் பதிவு: தஞ்சை பெரியகோவிலின் சிறப்பு என்ன?

Feb 5, 2020 0:11:48

Description:

The consecration of the Thanjavur Big Temple took place in a grand manner today (5 Feb) with mantras recited in both Tamil and Sanskrit. Mr S.K.Sridhar, secretary of Mamannar Rajarajacholan History and Research Centre, spoke to RaySel on the architectural significance of Thanjavur’s Big Temple.  

-

தமிழகத்தின் தஞ்சை பெரியகோவிலின் குடமுழுக்கு விழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த பின்னணியில், தஞ்சை பெரியகோவிலின் சிறப்பு என்ன என்பதையும், மாமன்னன் ராஜராஜசோழனின் பெருமைகளையும் விளக்குகிறார் மாமன்னர் ராஜராஜசோழன் வரலாறு மற்றும் ஆய்வு மையத்தின் செயலாளர் S.K.ஸ்ரீதர் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.  

World is 'dangerously unprepared for global pandemic': WHO - SARS இறப்புகளைக் கடந்து செல்லும் கொரோனா இறப்புகள்!!

Feb 5, 2020 0:06:03

Description:

The World Health Organisation says a new system is needed for fighting virus outbreaks, warning the world is "dangerously unprepared for a global pandemic."

It comes as China's death toll from the coronavirus passes 360 exceeding the 349 mainland fatalities from the SARS outbreak in the early 2000s. That story by Abbie O’Brien for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil.

-

உலகளாவிய தொற்றுநோய்களுக்கு சர்வதேச நாடுகள் தயாராக இல்லை என்று WHO எச்சரித்துள்ளது. அத்துடன் பயணத்தடை காரணமாக ஆஸ்திரேலிய பல்கலைக்கழங்களில் தமது கல்வியை ஆரம்பிக்கமுடியாத நிலையில் சீனாவைச் சேர்ந்த ஒரு இலட்சம் வரையிலான வெளிநாட்டு மாணவர்கள் சிக்கியுள்ளனர். Abbie O’Brien தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

 

Tamils celebrate Pongal 2020 at NSW Parliament - NSW பாராளுமன்றத்தில் தமிழரின் பொங்கல் விழா 2020

Feb 5, 2020 0:06:50

Description:

Tamils of NSW celebrated their traditional harvest festival at NSW Parliament on Tuesday, February 04, 2020. This event was organised by the Tamil Arts and Culture Association. Praba Maheswaran brings an overview of the event.

-

TACA எனப்படும் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் ஒழுங்கமைத்த பொங்கல் விழா ஐந்தாவது வருடமாக NSW பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க் கிழமை (04/02/2020) கொண்டாடப்பட்டது. மாநில பாராளுமன்ற உறுப்பினர்கள், பெரியோர்கள், இளைஞர்கள், குழந்தைகள் எனப் பலதரப்பட்டோரும் கலந்துகொண்ட இவ்விழா பற்றிய விவரணம் ஒன்றைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Is cancer preventable? - புற்றுநோயை தடுக்க முடியுமா?

Feb 5, 2020 0:09:56

Description:

Is cancer preventable? How can we protect ourselves from cancer? Queensland James Cook university lecturer and Senior Oncologist Dr Sundaram Sabesan explains

-

பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.  புற்றுநோயை தடுக்க முடியுமா?  புற்றுநோய் வருவதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது? இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் கூறுகிறார் Queensland Townsville James Cook பல்கலைக்கழத்தில் பேராசிரியராகவும் பல்கலைக்கழக மருத்துவமனையில் Senior Oncologistஆக பணியாற்றும் டாக்டர் சுந்தரம் சபேசன்.  அவரோடு உரையாடுகிறார் செல்வி.    

Australian News 03.02.20 - Wuhan நகரிலிருந்து 243 ஆஸ்திரேலியர்கள் விமானம் மூலம் வெளியேற்றப்பட்டனர்

Feb 3, 2020 0:09:05

Description:

The news bulletin aired on 3rd February 2020 at 8pm

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (03 பிப்ரவரி 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: செல்வி.

Focus : SriLanka - இலங்கை சுதந்திர தின நிகழ்வுகளில் சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும்

Feb 3, 2020 0:05:40

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் நாளை நடைபெறவுள்ள நிலையில் கொழும்பில் இடம்பெறும் பிரதான நிகழ்வுகளில் சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும்  என இலங்கை அரசாங்கம்  அறிவித்துள்ளது. இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

 

How to become a volunteer firefighter? - தீயணைப்பு படையில் தொண்டராக இணைவது எப்படி?

Feb 3, 2020 0:05:22

Description:

Australia cannot fight through its worst bushfire season without the selfless sacrifice of its 260,000-strong volunteer firefighters. The National Council for Fire & Emergency Service is calling for volunteers of diverse backgrounds to sign up, to better serve our multicultural population.

In English : Amy Chien-Yu Wang ;  In Tamil : Selvi

-

தீயணைப்பு படையில் தன்னார்வ தொண்டராக இணைவது எப்படி என்று விளக்குகிறது இந்த விவரணம்.  ஆங்கிலத்தில் : Amy Chien-Yu Wang ; தமிழில் : செல்வி 

How to resolve neighbourhood disputes? - அயலவருடனான பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி?

Feb 3, 2020 0:11:03

Description:

What are all the neighbourhood disputes and how do you resolve them?  Lawyer Ganakaran explains

-

ஆஸ்திரேலியாவில் அயலவர்களுடன் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது? விளக்குகிறார் வழக்கறிஞர் ஞானாகரன்.  நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.  

Focus: India - வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் குறித்து இந்திய நிதிநிலை அறிக்கை கூறும் தகவல்!

Feb 2, 2020 0:05:41

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

இந்திய நாடாளுமன்றத்தில் 2020-2021ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை நேற்று (சனிக்கிழமை) சமர்பிக்கப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையில் காணப்படும் முக்கிய அம்சங்களையும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தொடர்பாக இதில் கூறப்பட்டிருக்கும் தகவல்களையும் முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.   

Australian News - கொரோனா வைரஸ் அச்சம் - ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

Feb 2, 2020 0:10:20

Description:

The news bulletin was broadcasted on 2 February 2020 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (2 பெப்ரவரி 2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Facts behind Sydney Opera House & Sydney Harbour Bridge - சிட்னியின் Opera House மற்றும் Harbour Bridge உருவான கதைகள்

Feb 2, 2020 0:09:02

Description:

How and why Sydney Opera House and Sydney Harbour Bridge built? Explains Geetha Mathivanan in “Namma Australia”. Produced by RaySel.   

-

ஆஸ்திரேலியாவின் உச்ச பிரமாண்டமான சிட்னி ஓபரா அரங்கம் உருவான கதை, அதை வடிவமைத்த கலைஞனுக்கு நேர்ந்த அனுபவம், சிட்னி துறைமுக பாலம் உருவான பின்னணி, அது திறந்துவைக்கப்பட்டபோது  நடந்த சம்பவம் என்று அடுக்கடுக்கான தகவல்களை தனக்கே உரித்தான சுவையாக கதை சொல்லும் பாணியில் “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.    

Interview with Dr Dhanavel – Part 1 - “தமிழ் மருத்துவம் சித்தமருத்துவத்திற்கு சம அங்கீகாரம் பெற்றுத்தந்தோம்”

Feb 2, 2020 0:15:07

Description:

Dr Dhanavel, PhD, IAS retd, is known for his writing in Tamil language. Dr Dhanavel shared his life story and commented on some current issues. Produced by RaySel.

-

எளிய பின்னணியிலிருந்து வந்து உயரம் தொட்டவர் கி. தனவேல் அவர்கள். இந்தியாவில் மிக உயர்ந்த பட்டம்  அல்லது பதவி என்று பார்க்கப்படும் இந்திய ஆட்சிப்பணி-IAS பட்டம் பெற்று பல அரசுப்பணிகளில் பணியாற்றி சேவை புரிந்தவர். தனவேல் அவர்களின் சிறப்பு, அவர் தமிழகத்தின் இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். கவிஞர். இலக்கியம், நடப்பு அரசியல், தமிழின் நிலை என்று பல்வேறு கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் தருகிறார் முனைவர் தனவேல் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.  

Interview with Dr Dhanavel – Part 2 - “இடஒதுக்கீடு என்பது உரிமை, சமூக நீதி; பெரியார் அதை பெற்றுத்தர போராடியவர்”

Feb 2, 2020 0:11:48

Description:

Dr Dhanavel, PhD, IAS retd, is known for his writing in Tamil language. Dr Dhanavel shared his life story and commented on some current issues. Produced by RaySel.

-

எளிய பின்னணியிலிருந்து வந்து உயரம் தொட்டவர் கி. தனவேல் அவர்கள். இந்தியாவில் மிக உயர்ந்த பட்டம்  அல்லது பதவி என்று பார்க்கப்படும் இந்திய ஆட்சிப்பணி-IAS பட்டம் பெற்று பல அரசுப்பணிகளில் பணியாற்றி சேவை புரிந்தவர். தனவேல் அவர்களின் சிறப்பு, அவர் தமிழகத்தின் இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். கவிஞர். இலக்கியம், நடப்பு அரசியல், தமிழின் நிலை, இட ஒதுக்கீடு என்று பல்வேறு கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் தருகிறார் முனைவர் தனவேல் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். 

Australian News 31.01.20 - ACTயில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அவசரகால நிலை அறிவிப்பு

Jan 31, 2020 0:07:45

Description:

The news bulletin aired on 31th January 2020 at 8pm -

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளி (31 ஜனவரி 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: செல்வி.

How to protect yourself from Coronavirus - கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க முடியுமா?

Jan 31, 2020 0:13:20

Description:

Dr Rajesh Kannan explains about the ways to protect ourselves from Coronavirus infection

-

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்பதனை விளக்குகிறார் Epidemiology and Prevention துறையில் ஆர்வமுள்ள குடும்ப வைத்தியர் ராஜேஷ் கண்ணன்

WHO declares coronavirus an international Public Health Emergency - கொரோனா வைரஸ் சுகாதார அவசரகால நிலை - WHO அறிவிப்பு

Jan 31, 2020 0:06:08

Description:

The World Health Organisation has declared the novel coronavirus outbreak a global emergency.

It comes as the virus continues to spread inside and outside China.

-

கொரோனா வைரஸ் தொற்று சர்வதேச சுகாதார அவரசரகால நிலை என WHO உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.  இது குறித்து ஆங்கிலத்தில் Amy Hall எழுதிய விவரணம் தமிழில் செல்வி.   

Focus : SriLanka - இலங்கையில் கொரோனா வைரசின் பாதிப்பு !!

Jan 31, 2020 0:05:32

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றை இலங்கை எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்த செய்திகளை தொகுத்து தருகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

29/01/2020 Australian News - CoronaVirus: சீனாவிலிருந்து அழைத்துவரப்படும் ஆஸ்திரேலியர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப

Jan 29, 2020 0:10:15

Description:

The news bulletin broadcasted on 29 January 2020 at 8pm. Read by Maheswaran Prabaharan.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (29 January 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Popular Program : From Slavery to becoming a Govt Minister - பலரை கவர்ந்த நிகழ்ச்சி : அடிமையிலிருந்து அமைச்சராக! - மொறிஸியஸ் நாட்டின்

Jan 29, 2020 0:16:08

Description:

Kulasegaram Sanchayan talks to Armoogum Parsuramen during his recent visit to Sydney.  Mr Parsuramen was former minister of Education, Art, Culture & Science - Mauritius; Director UNESCO; Senior Advisor World Bank; and the current President and founder of Global Rainbow Foundation, Senior Citizen Solitary Foundation, and International Thirukkural Foundation.

-

மொறிஸியஸ் நாட்டின் கல்வி, கலாச்சாரம் மற்றும் விஞ்ஞானத்துறையின் அமைச்சராகக் கடமையாற்றிய தமிழர் ஆறுமுகம் பரசுராமன் ஓய்வு பெற்ற பின்னரும் ஓய்ந்திருக்கவில்லை.அண்மையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வந்திருந்த அவரை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். அவர் ஆங்கிலத்தில் வழங்கிய பதில்களுக்குத் தமிழில் குரல் கொடுத்தவர் இராமநாதன் மனோகரன்.

Focus: Tamil Nadu/India - ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வு

Jan 29, 2020 0:05:08

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொதுத் தோ்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை 

Popular Program : How would you manage a partner with an addiction? - பலரை கவர்ந்த நிகழ்ச்சி : சூதாட்டத்தில் மாட்டிக் கொண்டவர் கதை!

Jan 29, 2020 0:14:21

Description:

Six weeks after her wedding, Ahalya Krishinan discovered that her husband had a severe gambling addiction. Ahalya has come forward to share her story with the hope that it will help others who may be in a similar situation. Kulasegaram Sanchayan brings Ahalya’s story.

-

சில பழக்கங்களுக்கு ஒருவர் அடிமையாகும் போது, மற்றவர்களுக்கு அது வெளிப்படையாகத் தெரியக் கூடும்.  ஆனால், சில பழக்கங்கள், கூட இருக்கும் மனைவிக்கோ கணவனுக்கோ கூட தெரியாமல் போகலாம்.  அப்படியான ஒருவர், அகல்யா கிருஷ்ஷிணன் தனது கதையை குலசேகரம் சஞ்சயனுடன்  பகிர்ந்து கொள்கிறார்.

What Is Car Insurance & How Does It Work? - Car Insuranceல் மறைந்திருக்கும் தந்திரங்கள்

Jan 29, 2020 0:12:11

Description:

Lawyer Viji Veerasamy explains about car insurance in detail

-

Car Insurance என்றால் என்ன? Car Insuranceல் உள்ள வகைகள் என்ன?  விபத்துகளில் ஈடுபட்ட கார்களின் ஓட்டுனர்கள் தங்களின் Insurance நிறுவனத்திற்கு தெரிவிக்க சேகரிக்க வேண்டிய விடயங்கள் என்ன? இது போன்று Car Insurance குறித்த பல கேள்விகளுக்கு விரிவாக பதிலளிக்கிறார் சிட்னியை சேர்ந்த வழக்கறிஞர் விஜி வீராசாமி அவர்கள்.   அவரோடு உரையாடுகிறார் செல்வி.  

Coronavirus global risk level raised - கொரோனா வைரஸ்: உலகளாவிய ஆபத்து நிலை அதிகரிப்பு

Jan 29, 2020 0:07:21

Description:

The World Health Organisation has raised the global threat level of the novel coronavirus from moderate to high. Share prices in the US have fallen sharply with the coronavirus outbreak sparking global economic fears. That story by Matt Connellan for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil.

-

WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பு உலகளாவிய ஆபத்து அளவை அதாவது global risk level இனை மிதமான நிலையிலிருந்து உயர்வான நிலைக்கு உயர்த்தியுள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பங்கு விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து உலகளாவிய பொருளாதார அச்சம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மெல்போர்னில் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை மீள் உருவாக்கியுள்ளனர். இது போன்ற செய்திகளை  உள்ளடக்கிய செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Australian News 27.01.20 - பள்ளிகளுக்கு Coronavirus குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Jan 27, 2020 0:07:31

Description:

The news bulletin aired on 27th January 2020 at 8pm

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (27 ஜனவரி 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: செல்வி.

Focus : SriLanka - யாழ்ப்பாணத்தில் அரும்பொருள் காட்சியகம்

Jan 27, 2020 0:05:44

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

தமிழர்களின் பண்டைய வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருள்காட்சியகம் சிவபூமி அறக்கட்டளையைால் அமைக்கப்பட்ட “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” யாழ்ப்பாணத்தின்நாவற்குழியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த  செய்திகளை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன். 

Popular program : Friends from Jaffna on a mission to feed the World - பலரை கவர்ந்த நிகழ்ச்சி : யாழ்ப்பாண நண்பர்கள் உலகத்திற்கே உணவூட்ட வழ

Jan 27, 2020 0:12:41

Description:

Agriculture in many parts of the world, including India and Sri Lanka, follow the traditional way.  With sustainability and Global Warming becoming key concern for many, young minds coming up with new solutions is like a breath of fresh air.

Miller Alexander Rajendran and Jeyjenthen talk to Kulasegaram Sanchayan about their innovative solutions and their aspirations.

-

இந்தியா மற்றும் இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளிலும், விவசாயம் இன்றும் பாரம்பரிய வழி முறையைப் பின்பற்றித் தான் நடக்கிறது. புவி வெப்பமயமாகி வரும் போது, உலக மக்கள் அனைவருக்கும் எப்படி உணவு வழங்க முடியும் என்றும், வளங்களை எப்படி திறனுடன் பயன்படுத்த முடியும் என்றும் பலரும் சிந்திக்க ஆரம்பித்திருக்கும் வேளையில், சில தமிழ் இளைஞர்கள் தங்கள் சொந்த முயற்சியால் புதிய வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். அவர்களில், மில்லர் அலெக்ஸாண்டர் ராஜேந்திரன் மற்றும் ஜெயெந்தன் ஆகிய இருவரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Popular program : What causes global warming? - பலரை கவர்ந்த நிகழ்ச்சி : புவி வெப்பமயமாதல் - நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம

Jan 27, 2020 0:10:48

Description:

Global warming is long-term rise in the average temperature of the Earth's climate system, an aspect of current climate change shown by temperature measurements and by multiple effects of the warming. The term commonly refers to the mainly human-caused increase in global surface temperatures and its projected continuation. Mr.Ponraj Thangamani(Renewable Cities Young Ambassador) explains more about it.

-

புவி வெப்பமயமாதல் என்பது புவி மேற்புற பகுதியின் சராசரி வெப்பநிலையில் ஏற்பட்டிருக்கும் சீரான வெப்பநிலை உயர்வை குறிக்கிறது. குறிப்பாக தொழில் புரட்சி தொடங்கிய 1870-கள் தொடங்கி தற்போது வரை அதிகரித்துள்ள வெப்ப அளவை இது குறிக்கிறது. புவி வெப்பத்தைக் குறைப்பது ஒரு குறிப்பிட்ட நாட்டின் பிரச்னை கிடையாது. உலக நாடுகளும் அதன் குடிமக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய பிரச்சினை ஆகும். புவிவெப்பமயமாதல் குறித்த முக்கிய தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் திரு. பொன்ராஜ் தங்கமணி(Renewable Cities Young Ambassador). அவருடன் உரையாடுபவர் றேனுகா.

‘Walk on Country’, exploring indigenous Australian’s connection to nature - காட்டுத்தீ பேரழிவை எப்படி தடுப்பது - பூர்வீக மக்களிடம் கற்றுக்க

Jan 27, 2020 0:06:03

Description:

There is a valuable lesson we can learn from the First Peoples known for their love and care for country in the aftermath of recent fire catastrophes.Adding “walking on country” onto your bucket list might help you better understand the meaning of “country” by engaging its traditional custodians.

-

இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பேரழிவுகளுக்கு பிறகு பூர்வீக மக்களிடமிருந்து இந்நிலத்தை பராமரிப்பு குறித்தும் பாதுகாப்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 

ஆங்கிலத்தில் : Amy Chien-Yu Wang ;  தமிழில் : செல்வி

Australia Day special discussion - ஆஸ்திரேலியா நாள்: கொண்டாட்டத்திற்குரிய நாளா?

Jan 26, 2020 0:13:03

Description:

Participants: Mr Chris Antony, Secretary of Adelaide Tamil Association & Ms Uma of 4EB Tamil Oli, Brisbane. Produced by RaySel.

-

“ஆஸ்திரேலியா நாள்” குறித்த “வாங்க பேசலாம்” நிகழ்ச்சி இது. சிறப்பு விருந்தினர்கள்” அடலைட் தமிழ் சங்க செயலாளர் கிறிஸ் ஆன்றனி மற்றும் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலியின் உமா ஆகியோர்.  நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Australian News - “ஆஸ்திரேலியா நாள்” விழாவில் தீயணைப்புப் படைவீரர்களுக்கு சிறப்பு மரியாதை!

Jan 26, 2020 0:07:15

Description:

The news bulletin was broadcasted on 19 January 2020 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (26 ஜனவரி 2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

2019 HSC Tamil Achievers - HSC பரீட்சை - தமிழ் மொழியில் சாதித்தவர்கள்

Jan 26, 2020 0:16:33

Description:

The students in NSW who have passed Tamil Language in their HSC 2019 visited SBS. They are sharing their success, challanges, etc with Praba Maheswaran.
Participated students are:
Dilogi Baskaran, Kavisanth Vigneswaran, Yugeshitha Sivananthan, Shreedevan Maheswaran, Kaviya Siththivinayagar, Denusiya Gnanamoorthy, Digana Satheesh (State Rank 1), Mariyam Suha Ashad (State Rank 4), Angela Chelvan, Jenifer Surenthirakumar (State Rank 5), Danees Krishnapalan, Dhushanthan Mohanathas, Kesaven Vignarajah.

-

NSW மாநில உயர்தரப் பரீட்சையில் (2019) தமிழை ஒரு பாடமாக எடுத்து அதில் சித்தியடைந்த மாணவர்களை SBS அழைத்திருந்தது. எமது அழைப்பையேற்று வருகைதந்திருந்த மாணவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்ததினால் பெருமையடையும் அவர்கள் தாம் சந்தித்த சவால்களையும் இங்கு பகிர்ந்துகொள்கிறார்கள்.
உரையாடிய மாணவர்கள்:
டிலோஜி பாஸ்கரன், கவிசாந் விக்னேஸ்வரன், யுகேஷிதா சிவானந்தன், ஸ்ரீதேவன் மகேஸ்வரன், காவியா சித்திவிநாயகர், டினுசியா ஞானமூர்த்தி, டிகானா சதீஸ்(State Rank 1), மரியம் சுஹா ஆஷாட்(State Rank 4), அஞ்சலா செல்வன், ஜெனிபர் சுரேந்திரகுமார்(State Rank 5), டனிஸ் கிருஸ்ணபாலன், துஷ்யந்தன் மோகனதாஸ், கேசவன் விக்னராஜா.

 

 

Focus: Tamil Nadu - டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு: கைதுகள் தொடர்கின்றன

Jan 26, 2020 0:05:41

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில், முறைகேடு செய்த வழக்கில் கைதுகள் தொடர்கின்றன. இந்த செய்தி பின்னணி குறித்த பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Namma Thamil: Why Tamil a classical language? - நம்ம தமிழ்: ஏன் தமிழ் செம்மொழி?

Jan 26, 2020 0:11:42

Description:

“Namma Thamil”, series on Tamil language, is presented by Ms Yasotha Pathmanathan. Produced by RaySel.

-

தமிழ் மொழியின் அருமை, பெருமை, சிறப்பு என்று பலவித அம்சங்களை நாம் அறிந்திருப்போம். அப்படியான தமிழ் மொழிக்கு அணி இலக்கணம் சேர்க்கும் அழகை  ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிறு நமது SBS தமிழ் ஒலிபரப்பில் “நம்ம தமிழ்” எனும் நிகழ்ச்சி வழியாக முன்வைக்கிறார் யசோதா பத்மநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.  

Popular program : Keeladi Civilisation: Aryan? Dravidian? or Tamil? - பலரை கவர்ந்த நிகழ்ச்சி : கீழடி நாகரீகம் - ஆரியமா? திராவிடமா? தமிழா?

Jan 24, 2020 0:23:12

Description:

Located about 20 km from Madurai, on the southern banks of the Vaigai River is Keeladi. Within the coconut plantations in Keeladi, excavations began in 2014 and the artefacts found there have been studied. The fourth phase of the excavation was done by the Tamil Nadu Archaeological Department (TAD). Its findings were made public last week. Kulasegaram Sanchayan presents the views of Mr T Udayachandran, Commissioner of TAD and Subhashini Kanagasundaram, the founder of the Tamil Heritage Foundation.

-

வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கீழடி என்ற தென்னந்தோப்புகள் நிறைந்த இடத்தில், 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வுகள் செய்யப்பட்டு அங்கு கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. நான்காவது கட்ட அகழாய்வு, 2017ஆம் 18ஆம் ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையின் முன்னெடுப்பில் நடைபெற்றிருந்தது. அதன் முடிவுகளை, கடந்த வாரம் தமிழ் நாடு தொல்லியல்துறை பகிரங்கப்படுத்தியுள்ளது. அது குறித்து, தமிழ் நாடு தொல்லியல்துறையின் ஆணையர் த உதயச்சந்திரன் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவரும், அதன் நிறுவனர்களில் ஒருவருமான சுபாஷிணி கனகசுந்தரம் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Popular program : Science in Tamil Epics - பலரை கவர்ந்த நிகழ்ச்சி : தமிழ் காப்பியங்களில் அறிவியல்

Jan 24, 2020 0:05:37

Description:

Professor Manimegalai whose PhD thesis was on Sujatha’s novels, presents a series on Science and Technology in ancient Tamil literature. In this third episode in the series, Professor Manimegalai talks about “Epics.”Produced by Kulasegaram Sanchayan.

-

“சுஜாதாவின் அறிவியல் நாவல்களில் எதிர்காலவியலும் மனித சிக்கல்களும்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர் மணிமேகலை, தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பில் ஒரு தொடரை வழங்குகிறார். அதன் மூன்றாவது நிகழ்ச்சியில், “காப்பியங்களில் அறிவியல்.”நிகழ்ச்சித் தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.

Popular program : Science in ancient Tamil (ethics) literature - பலரை கவர்ந்த நிகழ்ச்சி : நீதி இலக்கியத்தில் அறிவியல்

Jan 24, 2020 0:05:46

Description:

Professor Manimegalai whose PhD thesis was on Sujatha’s novels, presents a series on Science and Technology in ancient Tamil literature. In the second episode in the series, Professor Manimegalai talks about “ethics literature.”Produced by Kulasegaram Sanchayan.

-

“சுஜாதாவின் அறிவியல் நாவல்களில் எதிர்காலவியலும் மனித சிக்கல்களும்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர் மணிமேகலை, தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பில் ஒரு தொடரை வழங்குகிறார். அதன் இரண்டாவது நிகழ்ச்சியில், “நீதி இலக்கியத்தில் அறிவியல்.”நிகழ்ச்சித் தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.

Australian News 24.01.20 - காட்டுத்தீயில் உயிர் தப்பி தற்போது பட்டினியால் வாடும் விலங்குகளை மீட்க நடவடிக்கை

Jan 24, 2020 0:06:44

Description:

The news bulletin aired on 24th January 2020 at 8pm

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளி  (24 ஜனவரி 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: செல்வி.

What is the coronavirus and how worried should we be? - உலகை அச்சுறுத்தும் Coronavirus: ஒரு விளக்கம்

Jan 24, 2020 0:06:35

Description:

R.Sathyanathan, a popular broadcaster, explains the signs and symptoms of coronavirus.  Produced by RaySel.  

-

உலகை அச்சுறுத்தும் வகையில் பரவிவரும் coronavirus குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.        

Focus : SriLanka - மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு

Jan 24, 2020 0:05:46

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

- இலங்கையில் மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு சாத்தியப்படுமா?இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ வழங்கியுள்ள வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? விவரணத்தை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன். 

Voxpop on Australia Day Celebration - ஆஸ்திரேலியா தினம் - நீங்கள் எப்படி கடைபிடிக்கிறீர்கள்?

Jan 24, 2020 0:11:56

Description:

Voxpop on Australia Day Celebration - How do you celebrate Australia day

-

ஜனவரி 26 ஆஸ்திரேலியா தினம்.  ஆஸ்திரேலியா தினத்தை நீங்கள் எப்படி கடைபிடிக்கிறீர்கள்?  நமது தமிழ் மக்கள் சிலரின் கருத்துக்கள் - நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.  

What is Australia Day - and why is it controversial? - ஆஸ்திரேலியா தினம் என்றால் என்ன? அதில் நிலவும் சர்ச்சை என்ன?

Jan 24, 2020 0:05:42

Description:

The 26th of January is Australia's national day.

But what does Australia Day actually mark and what are the objections to it?

In English : Amy Hall ;  In Tamil : Selvi

-

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆஸ்திரேலியா தினத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.  ஆஸ்திரேலியா தினம் என்றால் என்ன ? அதில் நிலவும் சர்ச்சை என்ன? விளக்குகிறது இந்த விவரணம்.  ஆங்கிலத்தில் : Amy Hall  ;  தமிழில் :  செல்வி.

22/01/2020 Australian News - CoronaVirus தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நாட்டில் கண்டுபிடிப்பு - வ

Jan 22, 2020 0:11:01

Description:

The news bulletin broadcasted on 22 January 2020 at 8pm. Read by Maheswaran Prabaharan.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (22 January 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Focus: Tamil Nadu/India - நடிகர் ரஜினிகாந்தினால் சர்ச்சை

Jan 22, 2020 0:05:58

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-


சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற ‘துக்ளக்’ பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியின்போது, ராமர் மற்றும் சீதையின் உருவப்படங்கள் நிர்வாணமாக எடுத்துவரப்பட்டதாகவும், செருப்பால் அடிக்கப்பட்டதாகவும் ஒரு கருத்தை தெரிவித்தார். அவரின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், பெரியார் குறித்து தான் கற்பனையாக கூறவில்லை என்றும், நடந்ததைத்தான் சொன்னேன் என்று தெரிவித்தார். இதற்காக தான் ஒரு போதும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். ரஜினியின் சர்ச்சை பேச்சும் அதை தொடர்ந்து நிகழ்வுகளின் தாக்கங்கள் குறித்து ஒரு பார்வை. நமது தமிழக செய்தியாளர் ராஜ்

“நான் எப்போதுமே சென்னைத் தமிழன்தான்” - டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ்

Jan 22, 2020 0:01:24

Description:

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் ஆட்ட வீரரான பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் தற்போது மெல்பனில் நடந்து வரும் Australian Open 2020 யில் கலந்துகொண்டுள்ளார். அவர் நமது தமிழ் ஒலிபரப்பிற்காக SBS - Italian ஒலிபரப்பின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் Dario Castaldoயுடன் தமிழில் உரையாடினார்.  

Sri Lanka declares thousands missing from civil war are dead - "காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்" - இலங்கை அரசு

Jan 22, 2020 0:04:45

Description:

Sri Lanka’s president has confirmed that tens of thousands of people missing since the end of the country’s civil war are dead, with formal death certificates to be issued to their families.

It’s a major blow for those who have spent years searching for missing loved ones. That story by Aaron Fernandes and Amy Hall for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil.

-

இலங்கையின் உள்நாட்டுப் போரில் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான மக்களும் இறந்துவிட்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

காணாமல்போன தமது அன்புக்குரியவர்களை பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு பேரிடியாகும். Aaron Fernandes and Amy Hall தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

How To Protect Your Eyes From Bushfire Smoke? - காட்டுத்தீ புகை : கண்களை பாதுகாப்பது எப்படி?

Jan 22, 2020 0:11:19

Description:

How to protect our eyes from this bushfire smoke - Dr Chandra Bala, an eye specialist from Canberra explains.

-

ஆஸ்திரேலியாவில் பரவலாக காட்டுத்தீ எரிவதால் பல இடங்கள் புகை மூட்டமாக காணப்படுகின்றன.   காட்டுத்தீ புகை எமது கண்களை எவ்வாறு பாதிக்கிறது மேலும் இப்பாதிப்பிலிருந்து எப்படி எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்து விளக்குகிறார் கான்பெராவை சேர்ந்த கண் மருத்துவர் டாக்டர் சந்திரா பாலா அவர்கள்.  அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Australian News 20.01.20 - மெல்பன் மற்றும் கான்பெராவில் பெய்த ஆலங்கட்டி மழையினால் பலத்த சேதங்கள் !!

Jan 20, 2020 0:08:04

Description:

The news bulletin aired on 20th January 2020 at 8pm

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (20 ஜனவரி 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: செல்வி.

How to become an Australian citizen? - ஆஸ்திரேலியா குடியுரிமை பெறுவது எப்படி?

Jan 20, 2020 0:05:40

Description:

Many people choose to become an Australian citizen.

More than five million people have been granted citizenship since 1949. 

The key step is a ceremony where people pledge their loyalty, and accept the rights and responsibilities as an Australian.  

In English : Amy Chien-Yu Wang ; In Tamil : Selvi

-

ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர்கள் இந்நாட்டு குடிமகனாகி குடியுரிமை பெறுவது எப்படி?  விளக்குகிறது இந்த விவரணம்.  ஆங்கிலத்தில் : Amy Chien-Yu Wang   ;  தமிழில் : செல்வி. 

“Kumar is a genuine refugee” - “குமார் உண்மையில் அகதி என்பதை அரசு ஏற்கவேண்டும்”

Jan 19, 2020 0:13:05

Description:

The United Nations Working Group on Arbitrary Detention (WGAD) called for the immediate release of a Tamil asylum seeker (Kumar – not his real name) held in Australia’s detention centre network in May 2019.  Kumar has been released from the detention centre but held in community detention.

-

ஆஸ்திரேலியாவின் தடுப்பு மையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் குமார் (அவரது உண்மையான பெயர் அல்ல) என்ற தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்  உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் தன்னிச்சையான தடுப்புக்காவல் குழு (WGAD), கடந்த வருடம் மே மாதத்தில் அழைப்பு விடுத்தது.  தற்போது, குமார் தடுப்பு மையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு சமூக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

The plight of the families of the disappeared in Sri Lanka - இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் கண்ணீர் 10 ஆண்டு

Jan 19, 2020 0:06:43

Description:

Thousands of people have disappeared in Sri Lanka since the 1980s. A 1999 study by the United Nations found that Sri Lanka had the second highest number of disappearances in the world and that 12,000 Sri Lankans had disappeared. Mathivanan, our reporter in Sri Lanka, produced a feature on the plights of the families of the disappeared people.  

-

இலங்கையில் யுத்தம் முடிடைந்து 10 ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை தீர்வுகள் ஏதுமின்றி போராட்டங்களுடன் தொடர்ந்துகொண்டுள்ளது. இந்த சமூக பிரச்சனை குறித்த விவரணத்தை முன்வைக்கிறார்  நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Australian News - காட்டுத்தீயினால் பேரிழப்பைச் சந்திக்கும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

Jan 19, 2020 0:07:50

Description:

The news bulletin was broadcasted on 19 January 2020 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (19  ஜனவரி 2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Australian News 17.01.20 - நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் பெய்து வரும் மழையினால் புதிய

Jan 17, 2020 0:07:03

Description:

The news bulletin aired on 17th January 2020 at 8pm

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளி (17 ஜனவரி 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: செல்வி.

ஆஸ்திரேலிய சிறுகதை: Selected Memory

Jan 17, 2020 0:11:37

Description:

ஆஸ்திரேலியாவில் பல்வேறு தளங்களில் பரிசு பெற்ற சிறுகதைகளையும், அதன் ஆசிரியர்களையும் பற்றிய தொடர் இது.  

Australian Writer’s Centre என்ற அமைப்பு Furious Fiction என்ற தலைப்பில் நடத்திய போட்டியில் கடந்த ஆண்டு August மாதம் வெற்றி பெற்ற Queensland ஐ சேர்ந்த, சிறுகதை எழுத்தாளர் Helena அவர்களின் Selected Memory என்ற சிறுகதையை  அறிமுகம் செய்கிறோம். “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைப்பவர்: 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.   

Boomerang (Feedback) - “ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் மூல மொழி தமிழ் என்பது நகைப்புக்குரியது"

Jan 17, 2020 0:07:39

Description:

Dr Dhamu Pongiyannan, a Visiting Research Fellow at The University of Adelaide, has been working with Aboriginal communities in South Australia. Dr.Pongiyannan disputes the claim of Dr.K.Arasendran, a Tamil scholar. Produced by RaySel.

-

ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் மூல மொழி தமிழே என்று நமது கடந்த வார நிகழ்ச்சியில் வாதிட்டார் தமிழறிஞர் முனைவர் கு. அரசேந்திரன் அவர்கள். ஆனால் அவரின் கருத்து அபத்தமானது என்றும் ஆதாரங்கள் எதுவுமற்றது என்றும் கூறுகிறார் ஊடகத் துறை கல்வியாளரும், தெற்கு ஆஸ்திரேலியாவில் பூர்வீக குடிமக்களுடன் பணியாற்றுகின்றவருமான முனைவர் தாமு அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.     

Bushfire: a detailed explanation and the challenges ahead - காட்டுத்தீ: மோரிசன் அரசுக்கு ஒரு அக்னிப் பரிட்சை!

Jan 17, 2020 0:13:35

Description:

R.Sathyanathan, a popular broadcaster, explains the reasons behind bushfire and the challenges ahead. Produced by RaySel.  

-

நாட்டில் தொடரும் காட்டுத்தீ அரசுக்கு பல அரசியல் நெருக்கடிகளை கொடுத்துவருகிறது. இந்த பின்னணியில், காட்டுத்தீ ஏன் ஏற்படுகிறது? விரைவில் கட்டுப்படுமா? – இது போன்ற கேள்விகளுக்கு விடையையும், காலநிலை மாற்றம் குறித்த ஆளும் கட்சியின் கொள்கை மாறுமா? என்ற அலசலையும் முன்வைக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.        

Focus : SriLanka - "தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்" - எம்.ஏ.சுமந்திரன்

Jan 17, 2020 0:05:47

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை தனக்கு தருவதாயின் தான் அதனை ஏற்கத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  இது குறித்த விவரணம் -  தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Economic impact of bushfires likely to break all records - காட்டுத்தீயும் ஆஸ்திரேலியா பொருளாதாரமும் !!

Jan 17, 2020 0:04:01

Description:

The economic impact from this season's unprecedented bushfires is likely to exceed the record set by the 2009 Black Saturday blazes.

There are warnings the toll the blazes are taking on industries like agriculture and tourism. as well as a lag in consumer confidence...will likely cause a significant blow economy. 

In English : Abbie O’Brien ; In Tamil : Selvi

-

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயினால் பெரிதும் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது.  இது குறித்த விவரணம்.  ஆங்கிலத்தில் : Abbie O' Brien  ;  தமிழில் : செல்வி 

‘There is no such thing as Dalit writing’- Cho Tharman - 'தலித் எழுத்தாளன் என முத்திரை குத்துவது நவீன தீண்டாமை'-சோ.தர்மன்

Jan 16, 2020 0:21:32

Description:

Tamil writer Cho Dharman has won the 2019 Sahitya Akademi award for his novel Sool. This is an interview with him.

-

தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள உருளைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சோ.தர்மன்.  இவர் எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்கு அண்மையில் 2019-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் 'சாகித்ய அகாடமி' விருது அறிவிக்கப்பட்டது. இது தொடர்பிலும் சோ.தர்மன் அவர்களின் எழுத்துப்பயணம் தொடர்பிலும் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். 

Tips for renting a property - வாடகை வீடு எளிதாக கிடைக்க சில ஆலோசனைகள்!

Jan 16, 2020 0:10:35

Description:

If you feel like searching for a rental is becoming harder and harder, you’re not wrong. Mr.Yussouf shares some tips on how to beat the competition and score the perfect rental.

-

இந்த நாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் இருந்து குடியேற வருகிறார்கள்.  அவர்களின்  முதல் தேவை தங்குவதற்கு ஒரு இடம்.   அதாவது வாடகைக்கு ஒரு வீடு.   இந்த வாடகை வீடு பெறுவதில் உள்ள  சிரமங்கள் என்ன என்பதைப்  பற்றியும் அதை எப்படி  சமாளிக்கலாம் என்பது பற்றியும் விளக்குகிறார் திரு.யூசுப் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா 

15/01/2020 Australian News - காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலவச Face Masks

Jan 15, 2020 0:09:43

Description:

The news bulletin broadcasted on 15 January 2020 at 8pm. Read by Maheswaran Prabaharan.

 

  -

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (15 January 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Focus: Tamil Nadu/India - தமிழகத்தில் பொங்கல்

Jan 15, 2020 0:05:22

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம்  பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை, எல்லா வருடமும் போலவே இந்த வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. பொங்கல் கொண்டடங்கள் குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  

Thai Pongal - 2020 - காட்டுத்தீயும் தமிழ் சமூகங்களின் பொங்கலும் !!

Jan 15, 2020 0:16:34

Description:

This feature explains about Thai Pongal 2020 celebration in Western Australia, South Australia and Tasmania

-

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் கொண்டாட்டங்கள் ஆஸ்திரேலியாவில் பல்வேரு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.  சமீப காலமாக பல்வேரு மாநிலங்களில்  வாழும் தமிழர்கள் ஆங்காங்கே ஒன்று கூடி பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.  இவ்வாறு தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தாசுமேனியா மாநிலங்களில் நடைபெறும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் குறித்த நிகழ்ச்சி.  நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.  

Australian policies criticised in Human Rights report - அகதிகள் தொடர்பிலான கொள்கைகளுக்கு Human Rights Watch கண்டனம்

Jan 15, 2020 0:06:03

Description:

The World Report 2020, is the 30th report released by Human Rights Watch reviewing human rights practices in nearly 100 countries, including Australia. That story by Peggy Giakoumelos for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil.

-

மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள World Report 2020 எனும் அறிக்கை ஆஸ்திரேலியாவின் புகலிடம் கோருவோர் மற்றும் அகதிகள் தொடர்பிலான கொள்கைகளை விமர்சிக்கிறது. ஊடக சுதந்திரம், பூர்வகுடியின மக்களின் உரிமைகள் மற்றும் வயோதிபர் பராமரிப்பு ஆகியவை தொடர்பிலும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதாவது Human Rights Watch வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதுபற்றி Peggy Giakoumelos தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

What’s new from January 2020? - ஜனவரி 2020 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

Jan 14, 2020 0:10:19

Description:

2020 brings some good news for first home buyers, working parents and pensioners buying medications. Here's what else you need to know about what's changing from the start of the year.

-

பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் ஜனவரி மாதம் முதல் சில முக்கியமான சட்டங்கள் அல்லது அம்சங்கள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இது தொடர்பில் கலந்துரையாடுகிறார்கள் றைசல், சஞ்சயன் மற்றும் றேனுகா ஆகியோர். 

what are the signs of heat stress and how can you avoid dehydration? - வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி?

Jan 14, 2020 0:06:49

Description:

Every year, many Australians suffer from heat-related stress and illness, which can range from mild to very serious. The weathers getting warmer across much of Australia, and there is no immediate change in sight. Ensure you stay cool with our comprehensive roundup of heat-beating tips.

-

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு வருடமும் கடும் வெப்பம் மற்றும் அதையொட்டிய நோய்களால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நம்மை எப்படிப் பாதுகாப்பதென்பது குறித்து கலந்துரையாடுகிறார்கள் றைசல், சஞ்சயன் மற்றும் றேனுகா ஆகியோர். 

One year On, families of 243 people still wait for them since they went missing from kerala - தமிழர்கள் உட்பட 243 பேருடன் நியூசிலாந்து வந்த படகு காணாமல்போ

Jan 14, 2020 0:06:14

Description:

It's been more than 12 months that a boat allegedly sailed off from Kerala coast carrying over 243 Indians & SriLankans who went missing. With no trace of them, their families are currently seeking help from the External Affairs Ministry. Renuka presents the story.

-

இந்தியா, கேரளாவிலிருந்து நியூசிலாந்து நோக்கி புறப்பட்ட தேவமாதா படகு காணாமல்போய் ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. இது குறித்த விவரணம் ஒன்றை முன்வைக்கிறார். றேனுகா

Thiruvalluvar’s birth anniversary and the Tamil New Year - திருவள்ளுவரின் பிறந்த நாளும் தமிழ்ப் புத்தாண்டும்

Jan 14, 2020 0:13:05

Description:

Tamil New Year and Thiruvalluvar’s birth anniversary fall on the same day according to Tamil scholars.  Tamils world over will celebrate Thiruvalluvar’s 2050th birthday on January 15th this year.  Kulasegaram Sanchayan brings the story with comments from retired Tamil teacher, Senthalai Gauthaman and researcher S Padmanabhan.

-

தமிழ் பேசும் மக்கள் மட்டுமின்றி, உலகமே போற்றும் திருக்குறளை எமக்குத் தந்த திருவள்ளுவரின் 2051வது பிறந்த நாள் நேற்று.  திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் தமிழ் ஆர்வலர், ஆய்வாளர், பல ஆய்வுக் கட்டுரைகளையும், இரண்டு நூல்களையும் எழுதியுள்ள முருகேசு பாக்கியநாதன் அவர்களைது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Bougainville: Path to Freedom. Part 5 - Bougainville: புதிய நாடு உருவாகும் கதை. பாகம் 5

Jan 14, 2020 0:16:31

Description:

The People of Bougainville have overwhelmingly voted for their independence at the recent referendum.  Kulasegaram Sanchayan explores their history, their struggle for freedom, and their future.

-

சுதந்திரத்தின் வாசலில் நிற்கும் போர்கேன்வில் (Bougainville) மக்கள் யார்?  அதன் சரித்திரம் என்ன? அந் நாட்டு மக்கள் அடக்கப்பட்டது ஏன்? போர்கேன்வில் சுதந்திரப் போராட்டம் வெற்றியில் முடியுமா?  போர்கேன்வில் மக்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பம் நிறைவேறுமா?  பதில் தேடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Thaddai Recipe! - தட்டை செய்முறை!

Jan 14, 2020 0:06:30

Description:

Culinary professional Shantha Jeyaraj shares Thaddai Recipe.

-

பண்டிகைக்காலத்தில் மாத்திரமல்லாமல் அனைத்து நாட்களிலும் உண்டு மகிழக்கூடிய தட்டை செய்முறையை பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

Rasamalai Recipe! - ரசமலாய் செய்முறை!

Jan 14, 2020 0:10:32

Description:

Culinary professional Shantha Jeyaraj shares Rasamalai Recipe.

-

பண்டிகைக்காலத்தில் உண்டு மகிழக்கூடிய ரசமலாய் செய்முறையை பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Jan 13, 2020 0:05:54

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

விகிதாசார நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர அரசாங்கம் கடும் முயற்சி:
சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் குறைக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சிறுபான்மை கட்சிகள் குற்றச்சாட்டு: இதுதொடர்பில் செய்தித்தொகுப்பை முன்வைககிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Jan 13, 2020 0:06:34

Description:

The news bulletin aired on 13 Jan 2020 at 8pm

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் ( ஜனவரி 13 2020 )  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா

Outdoor Pongal Festival again in Sydney - வெளி அரங்கில் மீண்டும் மாபெரும் பொங்கல் விழா!

Jan 13, 2020 0:12:05

Description:

Jaffna Hindu College Old Boys' Association NSW and Tamil Businesses in Sydney present Pongal Festival 2020 on Sunday 18 January.  Organisers Yogaratnam Suthan and Rishi Rishikesan share the details of this event with Kulasegaram Sanchayan. 

-

யாழ்ப்பாணம் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா, சிட்னி பெண்டில்ஹில் சிவிக் பூங்காவில் எதிர்வரும் சனிக்கிழமை நடக்கவிருக்கிறது. இது குறித்த மேலதிக விபரங்களை யோகரட்ணம் சுதன் மற்றும் ரிஷி ரிஷிகேசன் ஆகியோர் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

Australia records its warmest, driest year on record - ஆஸ்திரேலியாவின் மிகவும் சூடான ஆண்டு 2019!

Jan 13, 2020 0:03:49

Description:

The Bureau of Meteorology [[BoM]] says 2019 was the warmest and driest year on record for Australia. In its 2019 Annual Climate Statement the B-o-M links current fire conditions to record low rainfall and increasing temperatures.  That story by Sonia Lal for SBS News, produced by Renuka for SBS Tamil

-

கடந்து சென்ற 2019 ஆண்டு ஆஸ்திரேலியாவின் மிகவும் சூடான மற்றும் வரட்சியான ஆண்டாக வரலாற்றில் பதிவானதாக வானிலை அவதான மையம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் Sonia Lal ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

Pongal in Brisbane! - பிரிஸ்பேன் நகரில் மாபெரும் பொங்கல்!

Jan 12, 2020 0:06:15

Description:

Queensland Tamil Mandram and Thaai Tamil school organise Pongal event in Brisbane on 18 Januray.  Vasugi Sithirasenan, an organiser of the event, explains the importance of event to RaySel.

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பேன் நகரில் ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. குயின்ஸ்லாந்து தமிழ் மன்றமும், தாய் தமிழ் பள்ளியும் இணைந்து ஒருங்கிணைக்கும் இந்த பொங்கல் விழா ஜனவரி மாதம்  18 ஆம் தேதி Springfield, Brisbane எனுமிடத்தில் நடைபெறுகிறது. இது குறித்து இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளார்களில் ஒருவரான வாசுகி சித்திரசேனன் அவர்கள் உரையாடுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Jan 12, 2020 0:06:48

Description:

The news bulletin was broadcasted on 12 January 2020 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (12  ஜனவரி 2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

FOCUS: Tamil Nadu - தலித் மாணவனை மலம் அள்ளவைத்த ஆசிரியைக்கு சிறை!

Jan 12, 2020 0:04:21

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

தமிழ்நாட்டில் பள்ளி  ஆசிரியை இரண்டாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை பிற மாணவனின் மலத்தை அள்ள வைத்தார்.  சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த குற்றத்திற்கு அவருக்கு  கடந்த வாரம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இந்த செய்தி பின்னணி குறித்த பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Australia Day or Survival Day? - ஆஸ்திரேலிய தினம்: பூர்வீக மக்களுக்கு கொண்டாட்டமா? திண்டாட்டமா?

Jan 12, 2020 0:12:11

Description:

Australia Day is the official national day of Australia. Celebrated annually on 26 January.  In present-day Australia, celebrations reflect the diverse society and landscape of the nation and are marked by community and family events, reflections on Australian history, official community awards and citizenship ceremonies welcoming new members of the Australian community.

-

ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக ஆண்டுதோறும் ஜனவரி 26 அன்று ஆஸ்திரேலிய தினம் கொண்டாடப்படுகிறது.  இந்த தேசத்தின் மாறுபட்ட சமூகத்தையும் நிலப்பரப்பையும் பிரதிபலிக்கும் ஒரு கொண்டாட்டமாக ஆஸ்திரேலிய தினம் தற்போது மாறிவிட்டது.  மேலும், அன்றைய நாளில் பல சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்று கூடும் நாளாகவும், புதிதாகக் குடியுரிமை பெற்றவர்கள் குடியுரிமை பெறும் நாளாகவும் அமைந்திருக்கிறது.  இருப்பினும், சில பூர்வீக பின்னணி கொண்டவர்கள் உட்பட மற்றைய சிலரும் பிரித்தானிய குடியேற்றத்தின் மோசமான தாக்கங்களின் அடையாளமாக ஆஸ்திரேலியா தினத்தைக் கருதுகின்றனர்.  ஆஸ்திரேலிய தினத்தின் வரலாறு குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சியில் குலசேகரம் சஞ்சயன் ஆராய்கிறார்.

“Tamil is the first and oldest language in the world” - “ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் மூல மொழி தமிழே”

Jan 12, 2020 0:10:34

Description:

A linguistic researcher and a retired Tamil professor Dr.K.Arasendran who visits Australia soon shares his views on Tamil language and its contributions to other languages. Produced by RaySel.

Part 2.

-

தமிழ் மொழி உலகில் பேசப்படும் மொழிகளில் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தமிழ் மொழியே உலகின் அனைத்து மொழிகளுக்கும் மூத்த மொழி என்றும் ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் மூல மொழி தமிழே என்று ஆய்வுகள் கூறும் தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் தமிழறிஞரும், மொழி ஆய்வாளருமான முனைவர் கு. அரசேந்திரன் அவர்கள்.  

சிட்னி நகருக்கு மிக விரைவில் வருகை தரவிருக்கும் முனைவர் கு. அரசேந்திரன் அவர்களோடு உரையாடியவர்: றைசெல் . பாகம்: 2.  

“Tamil is the first and oldest language in the world” - “உலகின் முதல் மொழியும், மூத்த மொழியும் தமிழே”

Jan 12, 2020 0:15:44

Description:

A linguistic researcher and a retired Tamil professor Dr.K.Arasendran who visits Australia soon shares his views on Tamil language and its contributions to other languages. Produced by RaySel.

Part 1.

-

தமிழ் மொழி உலகில் பேசப்படும் மொழிகளில் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தமிழ் மொழியே உலகின் அனைத்து மொழிகளுக்கும் மூத்த மொழி என்றும் முதல் மொழி என்றும் ஆய்வுகள் கூறும் தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் தமிழறிஞரும், மொழி ஆய்வாளருமான முனைவர் கு. அரசேந்திரன் அவர்கள்.  

சிட்னி நகருக்கு மிக விரைவில் வருகை தரவிருக்கும் முனைவர் கு. அரசேந்திரன் அவர்களோடு உரையாடியவர்: றைசெல். பாகம்: 1    

Tamil volunteers out to serve bush-fire affected communities - காட்டுத் தீ: "மழை வேண்டி யாகம் செய்வதைவிட நேரடியாக உதவுங்கள்"

Jan 12, 2020 0:12:07

Description:

Tamils from Western Sydney have shown amazing generosity helping bush-fire affected people and fire fighters with supplies.
Praba Maheswaran went to one of their collection centers and talking to Gogulan, Sunthar and Dinakaran regarding their service.

-

காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்மாலியன்ற உதவிகளை நேரடியாகச் சென்று வழங்கிவரும் தமிழர்களை நாம் சந்திக்கிறோம். காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிட்னி மேற்கில் வாழும் தமிழர்களான கோகுலன் கோபால், சுந்தர் சுந்தரமூர்த்தி, தினா தினகரன் ஆகியோர் அத்தியாவசியப்பொருட்களை சேகரித்து வழங்கிவருகிறார்கள். அவர்களின் இப்பணிப்பற்றி நேரடியாகச் சென்று அவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.   

 

Aftermath of Australian Bushfires - காட்டுத்தீ அழிவிலிருந்து மீளும் ஆஸ்திரேலியாவின் எதிர்காலம்?

Jan 10, 2020 0:06:41

Description:

The New South Wales Premier has announced a one-billion-dollar infrastructure fund... saying rebuilding starts now. This fund will be used to repair critical infrastructure such as roads, rail and schools. Alongside government allocations are private donations... the largest is 70 million from mining magnate Andrew Forrest.

-

காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மீள் கட்டமைப்பிற்காக ஒரு பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ள மாநில ப்ரீமியர், மறுகட்டமைப்பு உடனடியாக ஆரம்பமாகிறது என்று அறிவித்துள்ளார்.  சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் பாடசாலைகள் போன்ற முக்கியமான உட்கட்டமைப்பு பணிமானங்களைத் திருத்தம் செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும். அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, இந்த வேலைகளுக்கு தனியார் நன்கொடைகளும் வழங்கப்பட்டுள்ளன உள்ளன. மிகப்பெரியது சுரங்க அதிபர் Andrew Forrest 70 மில்லியன் டொலர்கள் வழங்கியுள்ளார்.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Jan 10, 2020 0:06:05

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையில், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் பாராளுமன்றத்தில் வெளியிட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான பாராளுமன்ற விவாதம் குறித்து மிகக்கடுமையாக விமர்சனம் வெளியாகியுள்ளன.  இது குறித்து, சிறுபான்மையின் அரசியல்வாதிகளின் கருத்துகளைத்  தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Jan 10, 2020 0:07:28

Description:

Australian news bulletin aired on Friday 10 January 2020 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (10/01/2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். 

The Tamil Festival 2020! - மெல்பேர்னில் தமிழர் திருநாள் 2020!

Jan 10, 2020 0:14:07

Description:

Tamil Victorians gather in Keysborough to celebrate 'The Tamil Festival 2020' (Thai pongal - Harvest Festival) on the 19th of Jan, 2020. K.Sivasuthan - Casey Tamil Manram, P.Anandajayasekeram - Tamil senior Cirizens Felloship, Victoria, T.Athavan - Jaffna Hindu Old Boys Association, Victoria, R. Rajnarayanan - Hartley College Past Pupil Association, Victoria and P.L.Annadurai - Australian Tamil Arts explain more...

- மெல்பேர்னில் தமிழர் திருநாள் 2020 நிகழ்வு ஜனவரி 19ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து கேசி தமிழ் மன்றத்தைச் சேர்ந்த திரு.சிவசுதன், தமிழ் மூத்த பிரஜைகள் தோழமைக் கழகத்தைச் சேர்ந்த திரு.ஆனந்தஜயசேகரன், யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் விக்டோரியாவைச் சேர்ந்த திரு.ஆதவன், ஹார்ட்லி கல்லூரி பழைய மாணவர் அமைப்பைச் சேர்ந்த திரு. ராஜ்நாராயணன், ஆஸ்திரேலிய தமிழ் கலையகம் அமைப்பைச் சேர்ந்த திரு.லோரன்ஸ் அண்ணாத்துரை ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

The Australian bushfires have killed an estimated 1.25 billion animals - ஆஸ்திரேலிய காட்டுத்தீ: 125 கோடி விலங்குகள் பலி! விரிவான தகவல்கள்

Jan 10, 2020 0:12:55

Description:

Around 1.25 billion animals may have been killed during Australia's horror bushfire season, according to the World Wide Fund for Nature (WWF). 

Twenty-six people are dead and more than 2000 homes have been destroyed as bushfires have so far burned through an area almost the size of England. 

This is an interview with Mr.Ponraj Thangamani(Renewable Cities Young Ambassador) on bushfires. 

-

ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 125 கோடி விலங்குகள் கொல்லப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது எப்படி கணக்கிடப்பட்டுள்ளது என்பது தொடர்பிலும் ஆஸ்திரேலிய காட்டுத்தீ பற்றிய பல முக்கியமான தகவல்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் திரு. பொன்ராஜ் தங்கமணி(Renewable Cities Young Ambassador). அவருடன் உரையாடுபவர் றேனுகா.

08/01/2020 Australian News - 08/01/2020 ஆஸ்திரேலியச் செய்திகள்

Jan 8, 2020 0:09:16

Description:

The news bulletin broadcasted on 08 January 2020 at 8pm. Read by Maheswaran Prabaharan.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (08 January 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Focus: Tamil Nadu/India - டெல்லி பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் மீது தாக்குதல்

Jan 8, 2020 0:05:19

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து விடுதியில் இருந்த மாணவர்களை மர்ம நபர்கள் ஆயுதங்களால் கடுமையாக தாக்கிய சம்பவம், நாடு முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வருகிறது. டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை! முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

 

 

Bougainville: Path to Freedom. Part 4 - Bougainville: புதிய நாடு உருவாகும் கதை. பாகம் 4

Jan 8, 2020 0:12:05

Description:

The People of Bougainville have overwhelmingly voted for their independence at the recent referendum.  Kulasegaram Sanchayan explores their history, their struggle for freedom, and their future.

-

சுதந்திரத்தின் வாசலில் நிற்கும் போர்கேன்வில் (Bougainville) மக்கள் யார்?  அதன் சரித்திரம் என்ன? அந் நாட்டு மக்கள் அடக்கப்பட்டது ஏன்? போர்கேன்வில் சுதந்திரப் போராட்டம் வெற்றியில் முடியுமா?  போர்கேன்வில் மக்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பம் நிறைவேறுமா?  பதில் தேடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Generous Australians urged to be vigilant against bushfire-related scams - எச்சரிக்கை - காட்டுத்தீ நிவாரண பணமோசடியில் பலர் ஈடுபாடு

Jan 8, 2020 0:07:55

Description:

Authorities are warning Australians to be alert when donating to bushfire relief funds after reports of scammers posing as well-known charities and victims.

The government’s consumer agency has received 47 reports of bushfire related scams since September.

That story by SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil.

 

  -

காட்டுத்தீ நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கும்போது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த செப்டம்பர் முதல் காட்டுத்தீ தொடர்பான மோசடிகளின் 47 புகார்களை ACCC எனப்படும் Australian Competition and Consumer Commission இதுவரை பெற்றுள்ளது. இதுபற்றிய செய்திவிவரணத்தை தமிழில் வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Jan 6, 2020 0:05:26

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவின் நாடாளுமன்ற கன்னி உரை மற்றும் அது குறித்த கருத்துக்களைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.     

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Jan 6, 2020 0:08:34

Description:

The news bulletin aired on 06 Jan 2020 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (ஜனவரி 06 2020 )  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.

Artificial Intelligence beats doctors at diagnosing breast cancer - மார்பகப் புற்றுநோயை கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்ப

Jan 6, 2020 0:03:47

Description:

An early and accurate diagnosis of breast cancer is quite often the key to successful treatment. Now a new study in the journal Nature is suggesting that Artificial Intelligence is more accurate than doctors in diagnosing breast cancer from a mammorgram.  That story by Allan Lee and the BBC's Fergus Walsh for SBS News, produced by Renuka for SBS Tamil.

-

மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பம் தொடர்பில் Allan Lee & Fergus Walsh ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Jan 5, 2020 0:08:10

Description:

The news bulletin was broadcasted on 5 January 2020 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (5  ஜனவரி 2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Focus: Tamil Nadu - தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவு தரும் செய்தி என்ன?

Jan 5, 2020 0:07:40

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று கடந்த வாரம் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசியலில் அதிமுக, திமுக என்று இரு துருவ அரசியல் மட்டுமே என்பது இந்த தேர்தலில் மீண்டும் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக மற்றும் மாநில கட்சிகளால் இந்த உள்ளாட்சி தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெறமுடியவில்லை. தேர்தல் முடிவுகளும், அது தரும் செய்தியும், தமிழக  அரசியல் எப்படி நகரும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறும் கருத்துக்களையும் தொகுத்து முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Australia Day and flags: History and significance - ஆஸ்திரேலிய நாடும் கொடிகளும் உருவான கதை

Jan 5, 2020 0:08:58

Description:

What is the significance of Australia Day? How did they make the flags? Narrates Geetha Mathivanan in “Namma Australia”. Produced by RaySel.   

-

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித இனம் தழைத்து பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தங்களுக்கென தனித்த மொழி, ஆன்மீகம், கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்க்கை முறைகளைக் கொண்டு வாழ்ந்துகொண்டிருந்தது. ஆஸ்திரேலிய தினம் நெருங்கும் இவ்வேளையில் ஆஸ்திரேலிய நாடும் அதன் கொடிகளும் உருவான வரலாற்றை தனக்கே உரித்தான சுவையாக கதை சொல்லும் பாணியில் “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.    

Year in Review: Science and Technology 2019 - 2019 ல் நடந்த அறிவியல் & தொழில்நுட்பப் பாய்ச்சல்கள்!

Jan 5, 2020 0:13:54

Description:

R.Sathyanathan, a popular broadcaster, compiles most of the technological major breakthroughs and innovations of 2019. Produced by RaySel.  

-

கடந்து சென்ற 2019 ஆம் ஆண்டில் உலகம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பல பாய்ச்சல்களைக் கண்டது. இவற்றை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.         

Visa rule changes make for an uncertain future - ஆஸ்திரேலிய வீசாவில் வந்துள்ள மாற்றங்கள்!

Jan 3, 2020 0:07:32

Description:

After a tumultuous year of changes to visa rules, international students and skilled migrants are heading into 2020 facing an uncertain future.

-

ஒன்றல்ல, இரண்டல்ல எத்தனை மாற்றங்கள்?  ஆஸ்திரேலிய வீசா விதிகளில் பல மாற்றங்கள் கடந்த வருடம் அறிமுகமாகி இருக்கின்றன.  சர்வதேச மாணவர்கள் மற்றும் திறமை அடிப்படையில் குடிவருவோர் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Jan 3, 2020 0:07:24

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையில், தேர்தல் தொடர்பிலான அரசியலமைப்பு சட்டங்களை மாற்ற அரசு முயற்சிக்கிறது.  அரசின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள பல்வேறு விமர்சனம் செய்கிறார்கள்.  அத்துடன், நீண்ட இழுபறி நிலைக்குப் பின்னர் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட திருமதி சார்ள்ஸ் நேற்று பதவிப் பொறுப்பேற்றார். இந்த நியமனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் வரவேற்றுள்ளார்கள். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Jan 3, 2020 0:08:52

Description:

Australian news bulletin aired on Friday 03 January 2020 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (03/01/2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். 

The Best Songs Of 2019 - 2019ம் ஆண்டின் பிரபல பாடல்கள்!

Jan 3, 2020 0:18:57

Description:

It was a musical year for Kollywood in 2019. Here are the top 10 songs that rocked in 2019.

-

2019 ம் ஆண்டில் வெளியான பல திரைப்படப் பாடல்கள் இசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அப்படியான 10 பாடல்களைத் தொகுத்து வழங்குகிறார் றேனுகா.

Experience of a Tamil volunteer firefighter - தீயணைப்புப் படையிலுள்ள தமிழர் ஒருவரின் அனுபவம்

Jan 3, 2020 0:14:17

Description:

Bushfire has been ravaging many parts of Australia over the past weeks.  More than three hundred thousand acres of land has been burnt.  23 people, including some firefighters have fallen victims.  Tens of thousands of wild animals and cattle have also fallen prey to this bushfire.

-

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நூற்றுக்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. மூன்று இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகியுள்ளது.  தீயணைப்பு வீரர்கள் உட்பட இது வரை 23 பேர் பலியாகியுள்ளனர்.  பல்லாயிரக்கணக்கான வன விலங்குகள் மட்டுமல்ல, கால்நடைகளும் இந்தக் காட்டுத்தீக்கு இரையாகியுள்ளன.

Farewells in 2019! - 2019: உலகிலிருந்து விடைபெற்ற ஆளுமைகள்/பிரபலங்கள்!

Jan 3, 2020 0:24:06

Description:

Renuka reflects on the lives of celebrities we have lost last year.

-

முடிவுக்கு வந்த 2019ம் ஆண்டில் பல பிரபலங்களின் வாழ்வும் முடிந்திருக்கிறது. யார் அவர்கள்? கடந்த வருடம் நாம் இழந்த பிரபலங்கள் மற்றும் ஆளுமைகளைத் தொகுத்து நிகழ்ச்சி படைத்துள்ளார் றேனுகா.

01/01/2020 Australian News - 01/01/2020 ஆஸ்திரேலியச் செய்திகள்

Jan 1, 2020 0:09:52

Description:

The news bulletin broadcasted on 01 January 2020 at 8pm. Read by Maheswaran Prabaharan.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (01 January 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Focus: Tamil Nadu/India - நெல்லை கண்ணன் கைது செய்யப்படுவாரா?

Jan 1, 2020 0:04:51

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் அவதூறாகப் பேசியதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பேச்சாளருமான நெல்லை கண்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜகவின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நெல்லை கண்ணன், நெல்லையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை விரைவில் கைது செய்யவேண்டும் என்று தமிழக பாஜவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை! வழங்குகிறார் எமது இந்தியா நிருபர் ராஜ். 

 

 

 

Bougainville: Path to Freedom. Part 3 - Bougainville: புதிய நாடு உருவாகும் கதை. பாகம் 3.

Jan 1, 2020 0:10:49

Description:

The People of Bougainville have overwhelmingly voted for their independence at the recent referendum.  Kulasegaram Sanchayan explores their history, their struggle for freedom, and their future.

-

சுதந்திரத்தின் வாசலில் நிற்கும் போர்கேன்வில் (Bougainville) மக்கள் யார்?  அதன் சரித்திரம் என்ன? அந் நாட்டு மக்கள் அடக்கப்பட்டது ஏன்? போர்கேன்வில் சுதந்திரப் போராட்டம் வெற்றியில் முடியுமா?  போர்கேன்வில் மக்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பம் நிறைவேறுமா?  பதில் தேடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

CHILD GENIUS AUSTRALIA - Mahesh Namasivayam - CHILD GENIUS AUSTRALIA - வெற்றிபெற்ற தமிழ்ச் சிறுவன்

Jan 1, 2020 0:12:39

Description:

12-year-old Mahesh Namasivayam from Melbourne took away the crown of Australia's Child Genius.
Praba Maheswaran is talking to Mahesh along with his parents for SBS Radio.
Overseen by Australian Mensa, and Quiz Master extraordinaire Dr Susan Carland, this 4-part documentary competition series brings together sixteen of Australia’s brightest kids from all over the country as they undergo a series of challenging quizzes that would stump even the smartest adults. These gifted children all showcase extraordinary cognitive abilities in maths, general knowledge, spelling, history, science and memory.

 

-

நான்கு சுற்றுகளாக SBS தேசிய தொலைக்காட்சியில் நடைபெற்ற CHILD GENIUS AUSTRALIA எனும் 'வினாடி வினா' பொது அறிவுத் தொடர் - போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளரான மகேஷ் நமசிவாயம் எமக்களித்த நேர்முகம்.
நாடளாவிய ரீதியில் பல கடுமையான போட்டிகள் மூலம் பதினாறு அதிதிறமையான சிறார்களை தெரிவுசெய்து அவர்களுக்கிடையில் கணிதம், பொது அறிவு, எழுத்து(Spelling), வரலாறு, அறிவியல் மற்றும் நினைவாற்றல் எனப் பல பகுதிகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் 12 வயதான மகேஷ் நமசிவாயம் வெற்றிபெற்றார். மகேஷ், அவரது தந்தை ரவீந்திரன் நமசிவாயம், தாயார் ருட்ராணி ரவீந்திரன் ஆகியோருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Government urged to take action to make private health insurance more attractive - தனியார் சுகாதாரக்காப்பீடு - தள்ளுபடிகள், சீர்திருத்தங்கள்!

Jan 1, 2020 0:06:47

Description:

A survey commissioned by the Medical Technology Association of Australia ((MTAA)) has looked at some of the barriers preventing people from taking up private health insurance.
Premium costs, value for money were some of the reasons cited by people who have dropped their private health insurance.
That story by Peggy Giakoumelos for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil.

-

பெரும்பாலானோர் தனியார் சுகாதாரக்காப்பீடு - private health insurance எடுப்பதை தவிர்த்துவருவதாக அல்லது அதிலிருந்து விலகிவருவதாகத் தெரிவிக்கப்படும் பின்னணியில் தள்ளுபடிகள் உள்ளிட்ட சீர்திருத்தங்களை உருவாக்கி வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி Peggy Giakoumelos தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். 

 

 

What we want in 2020 - 2020இல் நடக்கவேண்டுமென விரும்புபவை

Dec 31, 2019 0:15:18

Description:

Sydney Murugan Temple senior priest Mathivathana Sharma gives a New Year message. Also, a few listeners share their New Year wishes with Praba Maheswaran. 

-

சிட்னி முருகன் ஆலயத்தின் குருக்கள் மதிவதனசர்மா அவர்கள் வழங்கிய புதுவருட வாழ்த்துச் செய்தியுடன், பிறந்துள்ள 2020 புத்தாண்டில் தமக்குப்பிடித்தோருக்கு நல்லவை நடக்கவேண்டுமென சில நேயர்கள் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களையும் இணைத்து நிகழ்ச்சி ஒன்றினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.    

 

 

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 30, 2019 0:08:04

Description:

The news bulletin aired on 30 December 2019 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (டிசம்பர்  30 2019 )  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Dec 30, 2019 0:06:44

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி இடம்பெறும் இலங்கையின் தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதில் ஏற்பட்ட சர்ச்சை, மற்றும் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடுவது என்ற அறிவிப்பு தொடர்பில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.

How bad is bushfire smoke for your health? - காட்டுத்தீ புகை: நம்மைப் பாதுகாப்பது எப்படி?

Dec 30, 2019 0:10:54

Description:

Bushfire smoke has continued to intermittently shroud greater Sydney as major bushfires rage around NSW. A lot of people have difficulty breathing. How can we protect ourselves from any harm? Dr.Paran Chithamparakumar explains.

-

NSW மாநிலத்தில் காட்டுத்தீ பரவலாக எரிவதால், பல இடங்கள் புகை மூட்டமாக இருக்கின்றன . இதனால் சுவாசக்கோளாறுகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலும் காட்டுத்தீ புகையின்  பாதிப்பிலிருந்து எப்படி எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் விளக்குகிறார் சிட்னியைச் சேர்ந்த மருத்துவர் பரன் சிதம்பரகுமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா. 

Milestone reached for women on ASX 200 boards - ஆஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினர்களில் 30 வீதமானவர்

Dec 30, 2019 0:03:31

Description:

In a milestone achievement for gender equality, women now make up 30 per cent of the boards of Australia's top 200 companies for the first time. Feature by Cassandra Bain, for SBS News, produced by Renuka for SBS Tamil.

-

ஆஸ்திரேலியாவில் பாலின சமத்துவத்தின் மைல்கல்லாக, நாட்டிலுள்ள 200 முன்னணி நிறுவனங்களின் நிர்வாகசபை உறுப்பினர்களில் 30 வீதமானவர்கள் பெண்கள் என்ற இலக்கு முதன்முதலாக இவ்வருடம் எட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பில் Cassandra Bain ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா

Year in Review: Odd News in 2019 - வினோத சம்பவங்கள் 2019: ஒரு மீள் பார்வை

Dec 30, 2019 0:14:43

Description:

Kulasegaram Sanchayan reviews unusual and odd events and stories that caught the attention in 2019. 

-

உலகில் தினம் தினம் வினோத சம்பவங்கள் நடந்து கொண்டேயுள்ளன. 2019 ஆம் ஆண்டில் நடந்த சில சம்பவங்கள் சிரிக்கவும், வியக்கவும் வைக்கின்றன. முடிவிற்கு வரும் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சில வினோத செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 29, 2019 0:08:35

Description:

The news bulletin was broadcasted on 29 December 2019 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (29 டிசம்பர் 2019)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Year in Review: Tamil Nadu 2019 - தமிழகம் 2019 ல் சந்தித்த நிகழ்வுகளும் பரபரப்புகளும்!

Dec 29, 2019 0:11:36

Description:

Raj, our correspondent in Tamil Nadu, reviews major events and stories in Tamil Nadu that made headlines in India in 2019.

-

தமிழ்நாடு இந்த ஆண்டு சந்தித்த முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள்,  பரபரப்புகளாக உலாவந்த செய்திகள் என்று பல அம்சங்களை தொகுத்து முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Year in Review: India 2019 - இந்தியா 2019 ல் சந்தித்த நிகழ்வுகளும், திருப்பங்களும்!

Dec 29, 2019 0:09:19

Description:

Raj, our correspondent in Tamil Nadu, reviews major events and stories that made headlines in India in 2019.

-

பரபரப்பு மிகுந்த ஆண்டாக இந்த ஆண்டு இந்தியாவுக்கு இருந்தது.  இந்தியா சந்தித்த முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள்,  பரபரப்புகளாக உலாவந்த செய்திகள் என்று பல அம்சங்களை தொகுத்து முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Year in Review: Australia 2019 - ஆஸ்திரேலியாவும் 2019 ஆம் ஆண்டும்!

Dec 29, 2019 0:13:41

Description:

RaySel compiles major Australian events, news stories and comments that made headlines in 2019.

-

அரசியல், பொருளாதராம், குடிவரவு, அகதி, காட்டுத்தீ என்று இந்த ஆண்டில்  ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள், பரபரப்புகள் என்று பல அம்சங்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.      

Year in Review: Sports 2019 - விளையாட்டு 2019: ஒரு மீள்பார்வை

Dec 27, 2019 0:11:17

Description:

Praba Maheswaran reviews major sporting events and stories that made headlines in 2019.

-

முடிவிற்கு வரும் 2019 ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் முடிவுகள் குறித்த தொகுப்பு இது. முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Year in Review: Sri Lanka 2019 - இலங்கை 2019: ஒரு மீள்பார்வை

Dec 27, 2019 0:14:03

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, reviews major events and stories that made headlines in 2019 from Sri Lanka. 

-

முடிவிற்கு வரும் 2019 ம் ஆண்டில் இலங்கை சார்ந்த, அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த தொகுப்பு இது. 

2019 - A year of ups and downs in health - இந்த ஆண்டின் மருத்துவ பாய்ச்சல்கள்

Dec 27, 2019 0:07:31

Description:

Doctors found people weren't willing to take their advice this year, despite the lives claimed by the measles epidemic, the spread of polio and the availability of new vaccines for another Ebola outbreak in Africa.

-

மருத்துவம் சுகாதாரம் என்று வரும் போது, மக்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளைக் கேட்டு நடக்க அவர்கள் தயாராக இல்லை என்று இந்த வருடம் மருத்துவர்கள் உணர்ந்துள்ளார்கள்.  measles எனப்படும் தட்டம்மை, polio எனப்படும் இளம்பிள்ளை வாதம், ஏன் ஆபிரிக்க நாடுகளில் பலரைக் காவு கொண்ட எபோலாவிற்கும் புதிய தடுப்பூசிகள் கிடைத்தாலும், சிலர் அதனைப் போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 27, 2019 0:06:26

Description:

Australian news bulletin aired on Friday 27 December 2019 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (27/12/2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். 

Bougainville: Path to Freedom. Part 2 - Bougainville: புதிய நாடு உருவாகும் கதை. பாகம் 2.

Dec 25, 2019 0:10:44

Description:

The People of Bougainville have overwhelmingly voted for their independence at the recent referendum.  Kulasegaram Sanchayan explores their history, their struggle for freedom, and their future.

-

சுதந்திரத்தின் வாசலில் நிற்கும் போர்கேன்வில் (Bougainville) மக்கள் யார்?  அதன் சரித்திரம் என்ன? அந் நாட்டு மக்கள் அடக்கப்பட்டது ஏன்? போர்கேன்வில் சுதந்திரப் போராட்டம் வெற்றியில் முடியுமா?  போர்கேன்வில் மக்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பம் நிறைவேறுமா?  பதில் தேடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

25/12/2019 Australian News - 25/12/2019 ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 25, 2019 0:07:57

Description:

The news bulletin broadcasted on 25 December 2019 at 8pm. Read by Maheswaran Prabaharan.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (25 December 2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Focus: Tamil Nadu/India - தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டம் - அரசு ஒப்புதல்

Dec 25, 2019 0:05:27

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக, ரூ.3,941 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. மேலதிக விவரங்களுடன் எமது செய்தியாளர் ராஜ்.

 

 

Meaning of Christmas - கிறிஸ்மஸ் ஏன் கொண்டாட வேண்டும்?

Dec 25, 2019 0:17:45

Description:

Christmas festival is celebrated worldwide.  But how is it celebrated?

-

உலகெங்கும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு விழா, கிறிஸ்மஸ் விழா. கிறிஸ்மஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?  எப்படிக் கொண்டாடப்படுகிறது?  அதன் உண்மை அர்த்தம் தான் என்ன?

Canberra set to be first city outside Europe to be powered entirely by renewable energy - ஐரோப்பாவிற்கு வெளியே முற்றுமுழுதாக புதுப்பிக்கத்தக்க எரிச

Dec 25, 2019 0:05:27

Description:


From Jan 1 2020, the Australian Capital Territory becomes the world's eighth major city - and the first outside Europe – to be fully powered by renewable energy.
While critics say Canberra remains reliant on the non-renewable national grid to keep the lights on, advocates argue the Territory's offsets are proof other states can cut their emissions too.
That story by Brett Mason for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil.

-

முற்றுமுழுதாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட எரிசக்தி பயன்படுத்தும் நகரங்களில் ஒன்றாக ஜனவரி 01, 2020 முதல் ACT - Australian Capital Territory அமையவுள்ளது. இதுபற்றி Brett Mason தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Year in Review: Tamil Cinema 2019 - 2019ல் தமிழ்த் திரைப்படங்கள் ஒரு மீள்பார்வை

Dec 23, 2019 0:17:28

Description:

In 2019 more than 250 tamil movies were released. 2019 tamil movie review program produced by Selvi

-

2019ம் ஆண்டு 250க்கு மேற்பட்ட தமிழ்ப்படங்கள் வெளிவந்திருந்தன. இப்படங்கள் குறித்த மீள்பார்வையை முன்வைக்கிறார் செல்வி

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 23, 2019 0:07:42

Description:

The news bulletin aired on 23 December 2019 at 8pm

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (டிசம்பர் 23 2019 )  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Dec 23, 2019 0:05:55

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட பல பகுதிகளில் மீண்டும் பலத்த மழை - 3 பேர் உயிரிழப்பு, போக்குவரத்து துண்டிப்பு, மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு. இது தொடர்பிலும்
தமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் தலைமைத்துவம் தேவை என தமிழ் அரசியல் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளமை தொடர்பிலும் செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.     

What you need to know before buying timeshare - நீங்கள் Timeshare ஊடாக விடுமுறை செல்பவரா?

Dec 23, 2019 0:05:08

Description:

The pace of modern life makes holidaying at exclusive locations a desirable luxury. More than 180,000 Australians have signed up to time-sharing schemes at popular holiday destinations.

However, older owners may find the long-term nature of these arrangements inconvenient as circumstances change following retirement. Feature by Amy Chien-Yu Wang

-

நவீன யுகத்தில் ஆடம்பரமான விடுமுறைகளைப் பலரும் நாடிச்செல்லும் பின்னணியில் இதற்கான மையப்புள்ளியாக  Timeshare திட்டம் ஆஸ்திரேலியர்களிடையே பிரபலமாக இருக்கின்றது.
இதுவரை சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள்  timeshare திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.
Timeshare என்பது பெரும்பாலும் சுற்றுலா மையங்களிலுள்ள சொத்துக்களை பலருடன் சேர்ந்து கொள்வனவு செய்து கூட்டு உரிமையாளராகும் செயற்பாடு ஆகும். இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

Tamil film producer M.A.Venu - உயரம் தொட்ட திரைப்பட தயாரிப்பாளர் M.A. வேணு

Dec 22, 2019 0:12:57

Description:

D.Suntheradas, a veteran journalist, presents a special feature on Tamil film producer M.A.Venu. A feature produced by RaySel.

-

தமிழ் திரைப்பட உலகில்  தயாரிப்பாளராக கோலோச்சியவர்கள் அதிகமில்லை. அந்த வகையில் M.A. வேணு அவர்கள் எளிய பின்னணியிலிருந்து வந்து இறுதியில் உச்சம் தொட்டவர். அவரின் கதையை  விளக்குகிறார் எழுத்தாளர் S.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.   

Interview with D.Selvaraj - மறைந்த எழுத்தாளர் டி. செல்வராஜ் அவர்களின் சிறப்பு நேர்முகம்!

Dec 22, 2019 0:13:26

Description:

D.Selvaraj, an eminent novelist and one of the founders of Progressive Writers Association, passed away on Saturday. D.Selvaraj who received a Sahitya Akademi award for his Tamil novel Thol (Skin) in 2013. Selvaraj is known for his involvement in communist party and leftist ideology. He shared his views on politics, castism and literary works with RaySel for SBS-Tamil.  

-

தமிழ்நாட்டில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் டி. செல்வராஜ் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 87. முற்போக்கு எழுத்தாளரான செல்வராஜ் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பனர்களில் ஒருவர். திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களின் அவலநிலையையும், அவர்களது விடுதலைக்காக செங்கொடி இயக்கம் ஆற்றிய மகத்தான பணியையும் பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய நாவல் “தோல்”.  இந்த நாவலுக்காக  அவருக்கு 2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

அவ்வேளையில் அவர் நமக்கு வழங்கிய நேர்முகம் இது. செல்வராஜ்  அவர்களோடு உரையாடியவர் றைசெல். 

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 22, 2019 0:05:48

Description:

The news bulletin was broadcasted on 22 December 2019 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (22 டிசம்பர் 2019)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

The forgotten Hindus: Sri Lankan Tamil refugees in India - “நாங்கள் தொடர்ந்து பிச்சைக்காரர்களாக வாழவே இந்தியா விரும்புகிறதா?” -இல

Dec 22, 2019 0:14:43

Description:

 According to the policy note of the Tamil Nadu Government, 61,422 Sri Lankan Tamil refugees are staying in 107 refugees camps in Tamil Nadu. There are 35,316 more refugees are staying outside the camps. Though the vast majority of these refugees are Hindus, they have been left out of the ambit of the Citizenship Amendment Bill. Many of the Sri Lankan Tamils in refugee camps have lived in Tamil Nadu for at least a decade and a half. However, they are not included in the Bill. Maga.Tamizh Prabhagaran, a journalist from Tamil Nadu, visited the refugee camps and presents the feature for SBS-Tamil. Produced by RaySel.  

-

தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளனர். 107 அகதி முகாம்களில் 61,422 பேரும் 35,316 பேர் அகதிகள் முகாம்களுக்கு வெளியேயும்  தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். ஆனால் இந்திய அரசு நடைமுறைப்படுத்தும் குடியுரிமைச்சட்டத்தில் இந்த மக்கள் சேர்க்கப்படவில்லை. இது குறித்து இந்த மக்கள் என்ன நினைக்கின்றனர்?

அகதி முகாம்களுக்குச் சென்று அவர்களின் கருத்துக்களைத் தொகுத்து SBS தமிழ் ஒலிபரப்பிற்காக முன்வைக்கிறார் சுயாதீனமான ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன். தயாரிப்பு: றைசெல்.

Focus: India - குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: 23 பேர் உயிரிழப்பு!

Dec 22, 2019 0:06:35

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுகொண்டுள்ளன. இது குறித்த செய்திகளை தொகுத்து முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Year in Review: World 2019 - உலகம் 2019: ஒரு மீள்பார்வை

Dec 20, 2019 0:14:33

Description:

Kulasegaram Sanchayan reviews major world events and stories (excluding Australia, India and Sri Lanka), that made headlines in 2019. 

-

முடிவிற்கு வரும் 2019 ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இந்தியா தவிர்ந்த மற்றைய உலக நாடுகள் சார்ந்த, அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த தொகுப்பு இது. முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Why are Australia's capital cities getting hotter? - நாம் வாழும் நகரம் சூடாகிறது. குறைப்பது எப்படி?

Dec 20, 2019 0:06:28

Description:

High temperatures, increasing populations and reduced open spaces are just some of the factors behind rising urban heat in Australian cities, but experts believe there are several solutions to combat it.R.Sathyanathan, a popular broadcaster, explains the experts’ solutions in Tamil. Produced by RaySel.  

-

நாம் வாழும் நகரங்கள் முன்பு எப்போதுமில்லாத அளவு சூடாகிறது. இந்த வெப்பத்தின் அளவு வரும் ஆண்டுகளில் குறையப்போவதில்லை என்றும், வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏன் நகரங்கள் சூடாகின்றன என்றும் அந்த வெப்பத்தை எப்படி குறைப்பது என்றும் நிபுணர்கள் கூறும் கருத்துக்களை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.        

Donald Trump becomes third impeached US president - அமெரிக்க அதிபர் Donald Trump தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

Dec 20, 2019 0:04:49

Description:

United States President Donald Trump has been impeached in a vote in the House of Representatives, setting up a Senate trial on removing him from office after three turbulent years.

-

அமெரிக்க அதிபர் Donald Trump பதவி விலக வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் எடுக்கப் பட்டுள்ளது.  அமெரிக்க செனட் சபை இது குறித்து விசாரித்து, அவரை பதவி விலக்குவதா இல்லையா என்ற முடிவெடுக்க வேண்டும். 

Focus: Sri Lanka - "இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு இல்லை"

Dec 20, 2019 0:06:16

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையில், "இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு இல்லை" என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்புக்கள் வலுத்து வருகின்றன.  இது குறித்தும், இலங்கை தமிழரசுக்கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா குறித்தும் செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 20, 2019 0:07:16

Description:

Australian news bulletin aired on Friday 20 December 2019 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (20/12/2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். 

Bougainville: Path to Freedom. Part 1 - Bougainville: புதிய நாடு உருவாகும் கதை. பாகம் 1.

Dec 18, 2019 0:10:16

Description:

The People of Bougainville have overwhelmingly voted for their independence at the recent referendum.  Kulasegaram Sanchayan explores their history, their struggle for freedom, and their future.

-

சுதந்திரத்தின் வாசலில் நிற்கும் போர்கேன்வில் (Bougainville) மக்கள் யார்?  அதன் சரித்திரம் என்ன? அந் நாட்டு மக்கள் அடக்கப்பட்டது ஏன்? போர்கேன்வில் சுதந்திரப் போராட்டம் வெற்றியில் முடியுமா?  போர்கேன்வில் மக்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பம் நிறைவேறுமா?  பதில் தேடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Data shows public hospitals not coping with demand - மருத்துவ மனையில் காத்திருக்கிறீர்களா?

Dec 18, 2019 0:04:46

Description:

New national figures show public hospitals are struggling to keep up with the demand for some surgeries and emergency department care.

-

அரச மருத்துவமனைகளில் சில அறுவை சிகிச்சைகள் செய்வதற்குப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.  அது தவிர, சில சமயங்களில், அவசர சிகிச்சை வேண்டுபவர்கள் உடனடியாக கவனிக்கப்படாமல் விடப்படுகிறார்கள் என்று புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

Focus: Tamil Nadu/India - தமிழகப் பார்வை!

Dec 18, 2019 0:05:42

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

இந்திய மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய முழுவதும் எதிர் காட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்ததை அடுத்து நாடு முழுவதும் மாணவர்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் எண்ணம் இல்லை, அந்த பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 18, 2019 0:08:53

Description:

Australian news bulletin aired on Wednesday 18 December 2019 at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (18/12/2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். 

Nithyananda and his many controversies - "நித்தியானந்தா ஆசிரமத்தில் மோசமான செயற்பாடுகளை பார்த்ததால் அதிலிருந்து விலகி

Dec 18, 2019 0:19:53

Description:

Swami Nithyananda - one of many self-styled Indian "godmen" with thousands of followers and a chequered past - is wanted by police for alleged rape, sexual abuse, and abduction of children. Nithyananda announced online that he has created his own new country - complete with cabinet, golden passports, and even a department of homeland security. Haran-a former disciple of controversial "godman" Nityananda, shares his experiences of verbal abuse, sleep deprivation and more... 

-

தமிழகத்தின் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தற்போது பாலியல் குற்றச்சாட்டு, இளம்பெண் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார்.

வெளிநாடொன்றில் வாழ்ந்துவருவதாக கூறப்படும் நித்தியானந்தா தினசரி காலையில் பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றும் வீடியோவை தவறாமல் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் கைலாசா என்றொரு தனி நாட்டை உருவாக்கியிருப்பதாகவும், அந்த நாட்டில் சேர்ந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், கைலாசா இணையதளத்தில் பதிவு செய்து தங்களின் விருப்பத்தை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.இப்படியாக நித்தியானந்தா குறித்த செய்திகள் தொடர்ந்தும் பேசுபொருளாக இருக்கும் பின்னணியில்  நித்தியானந்தாவிடம் சீடராக இணைந்து பின்னர் அவரிடமிருந்து விலகிய மெல்பேர்னைச் சேர்ந்த ஹரனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். 

Where is Nithyananda's new country 'Kailaasa'? - "நித்தியானந்தா மட்டுமே ஞானமடைந்தவர்,அவர் ஒரு அவதாரம்" - மெல்பேர்ன் பக்தை

Dec 18, 2019 0:15:00

Description:

Swami Nithyananda - one of many self-styled Indian "godmen" with thousands of followers and a chequered past - is wanted by police for alleged rape, sexual abuse, and abduction of children. Nithyananda announced online that he has created his own new country - complete with cabinet, golden passports, and even a department of homeland security. This is an interview with his disciple Kamalambigai Elango(Melbourne). 

-

தமிழகத்தின் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தற்போது பாலியல் குற்றச்சாட்டு, இளம்பெண் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். வெளிநாடொன்றில் வாழ்ந்துவருவதாக கூறப்படும் நித்தியானந்தா தினசரி காலையில் பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றும் வீடியோவை தவறாமல் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் கைலாசா என்றொரு தனி நாட்டை உருவாக்கியிருப்பதாகவும், அந்த நாட்டில் சேர்ந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், கைலாசா இணையதளத்தில் பதிவு செய்து தங்களின் விருப்பத்தை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இப்படியாக நித்தியானந்தா குறித்த செய்திகள் தொடர்ந்தும் பேசுபொருளாக இருக்கும் பின்னணியில் மெல்பேர்னிலுள்ள அவருடைய பக்தை திருமதி கமலாம்பிகை இளங்கோவுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். 

Australian News 16.12.19 - ஆஸ்திரேலியச் செய்திகள் 16.12.19

Dec 16, 2019 0:07:29

Description:

The news bulletin aired on 16th December 2019 at 8pm

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள்  (16 டிசம்பர் 2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: செல்வி.

How to get boating and fishing licences in Australia - படகு மற்றும் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் எவ்வாறு பெறுவது?

Dec 16, 2019 0:05:50

Description:

Living in a beautiful country with picturesque rivers, lakes and coastlines, it is little wonder that boating and fishing are among Australia’s favourite pastimes.

However, with the fun comes responsibility and some essential rules and regulations for boating and fishing that have to be observed to keep everybody safe.

-

ஆஸ்திரேலியாவில் படகு ஓட்டுவதற்கு எவ்வாறு அனுமதி பெறுவது? மீன் பிடிப்பதற்கு எவ்வாறு அனுமதி பெறுவது? விளக்குகிறது இந்த விவரணம்.
ஆங்கிலத்தில் : Wolfgang Mueller ; தமிழில் : செல்வி

Focus : SriLanka - இலங்கைப் பார்வை !!

Dec 16, 2019 0:06:30

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

- இலங்கையில்  ரெலோ கட்சியிலிருந்து பிரிந்து தமிழ்த்தேசிய கட்சி என்ற புதிய கட்சி உதயமாகியுள்ளது மற்றும்  தமிழ் மக்களின் நலனுக்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற தயார் என கருணா அறிவித்துள்ளார்.  இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக தயாரித்து தருகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.  

Now, more than ever, is the time to check your credit score - உங்களுக்கு கடன் கிடைப்பதற்கான தகுதியை முடிவு செய்யும் credit score ஐ மாற்ற முட

Dec 15, 2019 0:07:42

Description:

Your credit score is calculated by combining all your financial information. This can include the number of credit enquiries made by lenders, loan repayments, default information and late payments. An excellent credit score is usually between 800 and 1000, while a below-average is a score is about 550, says R.Sathyanathan, a popular broadcaster, who explains the credit score procedure. Produced by RaySel.   

-

ஒருவரின் கடன் வாங்கும் தகுதியை முடிவு செய்யும் முக்கிய அம்சம் அவரின் credit score . உங்களுக்கு கடன் கிடைப்பதற்கான தகுதியை முடிவு செய்யும்  credit score ஐ மாற்ற முடியுமா?  விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.        

Focus: Tamil Nadu - தமிழகத்தில் சிறார் ஆபாச வீடியோவை பதிவேற்றியவர் கைது!

Dec 15, 2019 0:06:25

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

இந்தியாவில் சிறுவர் சிறுமி ஆகியோரின் பாலியல் படங்களை இணையத்தில்  பதிவேற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்திருந்தனர். இந்த நிலையில் சிறார் ஆபாச வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரை தமிழக போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்தியாவிலேயே முதல் முறையாக ஆபாச வீடியோ விவகாரம்  தொடர்பாக தமிழகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 15, 2019 0:05:23

Description:

The news bulletin was broadcasted on 15 December 2019 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (15 டிசம்பர் 2019)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

 

Tamil Community Centre for Sydney Tamils! - சிட்னியில் தமிழருக்கென்று Community Centre திறக்கப்படுகிறது!

Dec 15, 2019 0:10:43

Description:

 

New South Wales Tamil Community Centre Inc, a not for profit association, was established to acquire the Yarl Function Halls. The coordinators say that the Centre will create and establish connectedness between the Tamil people sharing the same linguistic and cultural heritage and to promote kinship. RaySel spoke to Mr. James Sugumar and Mr.Rishi, coordinators of New South Wales Tamil Community Centre Inc.

-

ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் சிட்னி பெருநகரில் வாழந்தாலும் அவர்களுக்கென்று தனியாக Community Centre என்று எதுவும் இதுவரை சிட்னியில் இல்லை. இந்த பின்னணியில் 1.8 மில்லியன் டாலர் பொருட்செலவில் கட்டிடம் ஒன்றை தாம் வாங்கியிருப்பதாகவும் அது நியூ சவுத் வேல்ஸ் தமிழ் சமூக மையமாக இயங்கும் என்றும் New South Wales Tamil Community Centre Inc அமைப்பு அறிவித்துள்ளது. Tamil Community Centre எப்படி இயங்கும் என்று விளக்குகிறார்கள் இந்த அமைப்பின் ஒருங்கிணப்பாளர்களான ரிஷி மற்றும் சுகுமார் ஆகியோர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.   

Is India’s new Citizenship Amendment Bill discriminatory? - இந்திய குடியுரிமைச் சட்டத்திருத்தம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!

Dec 15, 2019 0:07:31

Description:

A new bill in India will let the government grant citizenship to millions of illegal immigrants who entered India from three neighbouring countries before 2015 - but not if they are Muslim. Is it discriminatory? Analyses Kavitha Muralitharan, a leading journalist in India.  Produced by RaySel.

-

இந்தியாவில் குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டு புதிய சட்டம் கடந்தவாரம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டம் முஸ்லீம் மக்களை பாகுபாடுடன் நடத்துகிறது என்றும் தமிழ் நாட்டில் அகதிகளாய் வாழும் இலங்கை தமிழ் மக்களை இந்த சட்டம் புறக்கணிக்கிறது என்றும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்து அலசுகிறார் தமிழ்நாட்டின் பிரபல ஊடகவியலாளர் கவிதா முரளீதரன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.      

How to make a complaint about an agent? - குடிவரவு முகவர்களால் சுரண்டப்படும் அகதிகள் எங்கே உதவி பெறலாம்?

Dec 13, 2019 0:13:44

Description:

Migration agents play a vital role in assisting refugees and people seeking asylum gain protection and reunite with separated family members.  The desperation of people to seek protection in Australia, or bring their family member to Australia, has also pushed people to fall into the hands of unscrupulous migration agents. Melbourne based lawyer and migration agent Mrs.Maryam explains more about it.

-

ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் கோரிவருபவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் மெல்பேர்னிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தமக்கான உதவிகளை எங்கே பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவராக பணியாற்றும் திருமதி மரியம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா.

Power prices are set to fall - உங்கள் மின்சாரக் கட்டணம் குறைகிறது!

Dec 13, 2019 0:04:19

Description:

Power prices are set to fall in most states and territories over the next three years, according to forecasts by the Australian Energy Market Commission.

-

பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில், அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரத்திற்கான கட்டணத்தில் வீழ்ச்சி ஏற்படும் என்று ஆஸ்திரேலிய எரிசக்தி சந்தை ஆணையம் (Australian Energy Market Commission) கணிப்பிட்டுள்ளது.

Would Conservative win lead for a referendum in Scotland? - பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி ஏன் வெற்றிபெற்றது?

Dec 13, 2019 0:07:42

Description:

Boris Johnson's Conservatives have won the UK election with a result that has prompted Labour's Jeremy Corbyn to declare he will eventually step down as leader. The Scottish National Party has wrested seats from all their rivals. What is the implication of the UK election outcome? Analyses former broadcaster Mr Thirunavukarasu Vignarajah who lives in London. Produced by RaySel.    

-

பிரிட்டனில் போரிஸ் ஜான்சன் தலைமையில் ஆளும்கட்சியான Conservative கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் எதிர்கட்சியான Labour கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. ஆச்சரியத்தை ஏற்படுத்து வகையில், பிரிட்டனிலிருந்து பிரிந்து ஸ்காட்லான்ட் சுதந்திரநாடாக மாறவேண்டும் என்று கோரிவரும் Scottish National Party இந்த தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றி, தோல்விக்கு என்ன காரணம்? இவை பிரிட்டன் அரசியலில் வரும் நாட்களில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கமென்ன? அலசுகிறார் லண்டனிலிருந்து  முன்னாள் ஊடகவியலாளர் திருநாவுக்கரசு விக்னராஜா அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.              

What do the new water restrictions mean for you? - புதிய தண்ணீர்க் கட்டுப்பாடுகள். மீறினால் அபராதம்!

Dec 13, 2019 0:06:05

Description:

New South Wales Premier Gladys Berejiklian has announced level 2 water restrictions, as the state's dam levels continue to drop amid ongoing drought.

So what are level 2 restrictions and who will they apply to?

That story by Bethan Smoleniec for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil.

 

  -

கடும் வறட்சி காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள பெரும்பாலான அணைகளில் நீர்மட்டங்கள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதன் பின்னணியில்

செவ்வாய் முதல் Level 2 தண்ணீர்க்கட்டுப்பாடு NSW மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.  Level 2 தண்ணீர்க் கட்டுப்பாடுகள் என்ன, அவை யாருக்கு பொருந்தும்? Bethan Smoleniec தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Dec 13, 2019 0:06:17

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இந்திய மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டமை நேயர்கள் அறிந்த செய்தி. இந்தப் பின்னணியில், இந்தியாவில் வாழும் இலங்கை மக்கள் இந்த சட்ட திருத்தத்தின் மூலம் இந்திய குடியுரிமை பெற  சேர்த்துக்கொள்ளப்படாமை தொடர்பில் இலங்கை அரசியல் தலைவர்களின் கருத்துகள், மற்றும் இலங்கையின் புதிய அரசாங்கம் சிறுபான்மை மக்களை ஒதுக்குகின்றதா என்று கேட்கும் சிறுபான்மை அரசியல் பிரதிநிதிகளின் கருத்துகலைத் தொகுத்து, பார்வைகள் நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 13, 2019 0:08:55

Description:

Australian news bulletin aired on Friday 13 December 2019 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (13/12/2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். 

What to do when a workplace accident occurs - பணியிடத்தில் காயமடையும் தொழிலாளர்கள் தவறாமல் செய்ய வேண்டிய அம்சங்கள் எவை?

Dec 12, 2019 0:08:28

Description:

If an accident occurs or an injury is sustained in the workplace, it is necessary to follow particular guidelines for compensation to be received. Migrant Workers Centre organiser Lavanya Thavaraja explains more.

-

வேலை செய்யும்போது காயமடையும் தொழிலாளர்கள் தவறாமல் செய்ய வேண்டிய அம்சங்கள் தொடர்பிலும் விக்டோரியா மாநிலத்தில் தொழிலாளர்கள் Long service leave எடுப்பதில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் உட்பட சில விடயங்கள் தொடர்பிலும் விளக்குகிறார் புலம்பெயர் தொழிலாளர் மையத்தைச் சேர்ந்த லாவண்யா அவர்கள். லாவண்யாவுடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

11/12/2019 Australian News - 11/12/2019 ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 11, 2019 0:07:49

Description:

The news bulletin broadcasted on 11 December 2019 at 8pm. Read by Maheswaran Prabaharan.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (11 December 2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Airborne Smoke: How to Protect Us - காற்றில் பரவும் புகை: நம்மைப் பாதுகாப்பது எப்படி?

Dec 11, 2019 0:14:30

Description:

With bushfires are rapidly burning in NSW and Queensland.  Many places are clouded with thick smoke.  A lot of people have difficulty breathing.  How long will this continue?  How can we protect ourselves from any harm?

-

NSW மற்றும் Queensland  மாநிலங்களில் காட்டுத்தீ பரவலாக எரிவதால், பல இடங்கள் புகை மூட்டமாக இருக்கின்றன .  இதனால் பலரும் சுவாசிக்க சிரமப்படுகிறார்கள்.  இது தொடருமா?  இதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து எப்படி எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது குறித்த ஒரு கலந்துரையாடல்.

Bharathi's Chellamma! - பாரதியின் செல்லம்மா!

Dec 11, 2019 0:17:39

Description:

Subramaniya Bharathi was a pioneer of modern Tamil poetry and is considered one of the greatest Tamil literary figures of all time. On his 138th birthday, Renuka talks to Nellai pulavar veigaimuthu who has wriiten a book on Chellamma Bharathi.

-

தமிழ் கவிஞரும், எழுத்தாளரும், விடுதலை போராட்ட வீரருமான பாரதியின் கவிதைகளைச் சேகரித்து இவ்வுலகிற்கு வழங்கியவர்களில் முக்கியமானவர் அவரது மனைவி செல்லம்மா. செல்லம்மாவை பற்றி "பாரதியின் செல்லம்மா" என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார் கடையத்தைச் சேர்ந்த 81 வயதான புலவர் வெய்கைமுத்து அவர்கள். அதிகம் பேசப்படாத செல்லம்மாவை பற்றி பேசுகிறது இந்தப் புத்தகம். பாரதியின் பிறந்ததினத்தையொட்டி இந்நூல் தொடர்பில் புலவர் வெய்கைமுத்துவுடன் உரையாடுகிறார் றேனுகா.

Focus: Tamil Nadu/India - இந்திய குடியுரிமை சட்டத்திருத்தம் - ஈழத் தமிழர்கள் புறக்கணிப்பு!

Dec 11, 2019 0:05:32

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு சென்ற முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழி செய்யும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இந்திய மக்களவையில் நிறைவேறியுள்ளது. மத அடிப்படையில் குடியுரிமையில் முன்னுரிமையோ, பாகுபாடோ காட்டப்படுவது குறித்த விவாதம் ஒருபுறம் இருந்தாலும், அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இடம் பெயர்ந்தவர்கள் என்ற பட்டியலில், இலங்கையின் பௌத்த மத வாதத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறி அகதிகளாக இந்தியாவில் இருக்கும், இந்துக்களாக அடையாளம் காணப்படும் இலங்கைத் தமிழர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற விவாதம் எழுந்துள்ளது. இது பற்றிய ஒரு பார்வையை முன்வைக்கிறார் எமது தமிழக நிருபர் ராஜ்.

 

 

Our Australia: Ben Chifley - ASIO எனும் உளவுஅமைப்பை துவக்கிய பிரதமர்!

Dec 11, 2019 0:08:09

Description:

Joseph Benedict Chifley was an Australian politician who served as the 16th Prime Minister of Australia, in office from 1945 to 1949. He was leader of the Labor Party from 1945 until his death. Mr.Siva Kailasam of 4EB Tamil Oli explains the contributions of Ben Chifley in “Namma Australia”. Produced by RaySel.

-

ஆஸ்திரேலியா வளம் பெற பணியாற்றிய பல தலைவர்களில் Ben Chifley அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். அவரின் காலத்தில்தான் Snowy Mountains எனும் நீர்மூலம் மின்சாரம் பெரும் மிகப் பெரிய திட்டம் துவங்கப்பட்டது. யார் இந்த Ben Chifley? அவரின் சாதனைகள் என்ன? “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் 4 EB தமிழ் ஒலியின் சிவா கைலாசம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.   

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 9, 2019 0:07:45

Description:

The news bulletin aired on 09 December 2019 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (டிசம்பர் 09 2019 )  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Dec 9, 2019 0:05:38

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையில் இரு வாரங்களுக்கு மேலாக தொடரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பிலும் கடந்த ஆட்சியில் வடக்கில் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளமை தொடர்பிலும் செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.

Want to keep fit? Try walking football - Walking football பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Dec 9, 2019 0:05:55

Description:

Walking football is a modified version of soccer which is rapidly gaining popularity among the over fifties age group. Since its inception in 2011, more than 800 clubs have already been set up in the UK. Australia is following suit with Football Federation Australia planning to establish 110 walking football hubs across the country in the coming year. Feature by Amy Chien-Yu Wang

-

Walking football முதியவர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. 2011 லண்டனில் இவ்விளையாட்டு ஆரம்பமானது முதல் தற்போது சுமார் 800 கழகங்கள் இதற்கென ஆரம்பிக்கப்பட்டுள்ளன. லண்டனின் மாதிரியைப் பின்பற்றி ஆஸ்திரேலியாவிலும் அடுத்த ஆண்டில் 110 கழகங்களை நிறுவுவதற்கு Football Federation Australia -வுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

How mobile-use detecting cameras work? - கார் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்தினால் கமரா எப்படி கண்டுபிடிக்கும்?

Dec 8, 2019 0:07:28

Description:

NSW introduced mobile-use detecting cameras. The detection system, which operates both day and night and in all weather conditions, uses high-definition cameras to capture images of the front-row cabin space of all vehicles to detect illegal mobile phone use, says   R.Sathyanathan, a popular broadcaster. Produced by RaySel.  

-

வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசிகளை பயன்படுத்தும் ஓட்டுனர்களை பிடிப்பதற்கென நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளமை நாமறிந்த செய்தி. இந்தக் கமராக்கள் எப்படி செயற்படுகின்றன என விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசல். 

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 8, 2019 0:07:46

Description:

The news bulletin was broadcasted on 8 December 2019 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (8 டிசம்பர் 2019)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Focus: Onion price in India - வெங்காய விலை: வெங்காயமில்லாமலேயே கண்களில் தண்ணீர்!

Dec 8, 2019 0:05:15

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

இந்தியாவில் சமையலுக்கு தினந்தோறும் பயன்படும் வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  டிசம்பர் 4ஆம் தேதி ஒரு கிலோ ரூ.140 ஆக இருந்த வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து தற்போது சில கடைகளில் கடைகளில் ரூ.180 வரை விற்கப்படுகிறது. இது குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Armed police to patrol major Australian airports - விமான நிலையத்தில் ஆயுதம் தாங்கிய போலீசார்!

Dec 8, 2019 0:03:31

Description:

Anti-terror police armed with assault rifles will continue to patrol Brisbane and Canberra airports this Christmas, before being deployed at additional airports and assisted by bomb-detection dogs. Home Affairs Minister Peter Dutton says recent global events serve as a reminder the threat of terror has not diminished.

 That story by Peggy Giakoumelos for SBS News, produced by RaySel for SBS Tamil.

-

நாட்டில் இயங்கும் பதினொரு சர்வதேச விமான நிலையங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இது தொடர்பான செய்தியின் விரிவாக்கம்.

SBS News இன் Peggy Giakoumelos எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

Police “encounter” killing: Is it right? - “என்கவுன்டர் கொலையை மக்கள் கொண்டாடுகின்றனர்”

Dec 8, 2019 0:10:05

Description:

India’s Hyderabad Police said the four accused who sexually assaulted and murdered 27-year-old Hyderabad doctor were shot dead after they tried to escape from police custody. Some human rights activities accuse the police of murdering them as revenge. However, many people in India appreciate the police action. Mrs Anitha Kuppusamy, a popular folksong singer and active in politics, shares her views. Produced by RaySel.     

-

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இளம் மருத்துவர் ஒருவரை நான்குபேர் கூட்டாக பாலியல் வல்லுறவு செய்து பின்னர் அவரை எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட  மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை காவல்துறையினர் “என்கவுன்டர்” செய்து சுட்டுக்கொன்றது. இது இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் போலீசாரின் செயலை கொண்டாடுவது புரிந்துகொள்ளகூடியதே என்கிறார் தமிழ்நாட்டின் பிரபல நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.   

Police “encounter” killing: Is it right? - “என்கவுன்டர் கொலை ஏன் ஏழைகளையே குறிவைக்கிறது?”

Dec 8, 2019 0:10:35

Description:

India’s Hyderabad Police said the four accused who sexually assaulted and murdered 27-year-old Hyderabad doctor were shot dead after they tried to escape from police custody. Some human rights activities accuse the police of murdering them as revenge. However, many people in India appreciate the police action. Arul Mozhi, a popular lawyer and a leader of Dravidar kazhagam, shares her views. Produced by RaySel.     

-

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இளம் மருத்துவர் ஒருவரை நான்குபேர் கூட்டாக பாலியல் வல்லுறவு செய்து பின்னர் அவரை எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட  மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை காவல்துறையினர் “என்கவுன்டர்” செய்து சுட்டுக்கொன்றது. இது இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் செயல் சரியல்ல என்கிறார் வழக்கறிஞரும், திராவிடர் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அருள் மொழி அவர்கள்.  

நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.  

Medevac repeal: What it means for asylum seekers - மருத்துவ தேவைக்காக, அகதிகள் இனி எளிதில் ஆஸ்திரேலியா வர முடியுமா?

Dec 6, 2019 0:15:58

Description:

After much negotiation, the government has secured the repeal of the medical evacuation law, popularly known as “medevac” law, after making a secret deal with a cross-bench Senator.

-

அகதிகள் மருத்துவ தேவைக்காக ஆஸ்திரேலியா வருவதை எளிதாக்கும் Medevac சட்டம் மீளபெறப்பட்டுள்ளது.

Travelling outside of Australia on a TPV or SHEV - தற்காலிக பாதுகாப்பு விசாவில் உள்ளவர்கள் வெளிநாடு செல்ல முடியுமா?

Dec 6, 2019 0:09:59

Description:

 TPV or SHEV visa holders cannot travel outside Australia unless their travel is approved by the Minister of Immigration.  This feature explains more.

-

ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு வீசாவில் உள்ள அகதிகள் மற்றும் Bridging வீசாவில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை வெளிநாடு சென்று சந்தித்து விட்டு ஆஸ்திரேலியா திரும்ப முடியுமா?  விளக்குகிறது இந்த விவரணம் - தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Older people, domestic abuse survivors, and the disabled all targets for financial abuse - நிதி தொடர்பான துன்புறுத்தலை எதிர்கொள்கிறீர்களா?

Dec 6, 2019 0:04:30

Description:

A specialist service has launched to tackle one of Australia's most under-reported issues.

-

ஆஸ்திரேலியாவில் அதிகம் பேசப்படாத விடயம் ஒன்றை மனதில் வைத்து, ஒரு புதிய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Dec 6, 2019 0:06:04

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையில், 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இது தொடர்பில் தமிழ் தலைவர்களின் கருத்துகள்; அத்துடன் இலங்கை அதிபருக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை குறைத்த 19வது திருத்தச்சட்டத்தை நீக்க அரசு முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அது குறித்த அரசியல் கட்சிகள் பலவற்றின் கண்டனங்களையும் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 6, 2019 0:08:34

Description:

Australian news bulletin aired on Friday 06 December 2019 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (06/12/2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். 

Gallipoli (dir. Peter Weir 1981) - Gallipoli (dir. Peter Weir 1981)

Dec 6, 2019 0:07:38

Description:

Starring Mel Gibson and Mark Lee, Gallipoli (dir. Peter Weir 1981) is an Australian war drama. Narrated in the historical background of the World War I, the film provides a faithful portrayal of life and culture in Australia in the 1910s by reflecting on mateship, larrikinism, the loss of innocence in war and the bonding between the Australian soldiers and the nation (later called the ANZAC spirit). Dr Dhamu Pongiyannan presents his analysis on this magnificent coming-of-age Australian film for SBS Tamil listeners.

-

மேற்கு ஆஸ்திரேலிய கிராமம் ஒன்றிலிருந்து துருக்கி நாட்டு தீபகற்பம் ஒன்றில் நடக்கும் யுத்தத்தில் பங்கேற்கும் இரு ஆஸ்திரேலிய இளைஞர்களின் நட்பைச் சுற்றிச் சுழலும் திரைப்படம்தான் Gallipoli.  நவீன ஆஸ்திரேலிய அடையாளத்தின் பிரிக்க முடியாத அங்கமாகவும், தவிர்க்க முடியாத துயரமாகவும் அமைந்துவிட்ட முதலாம் உலகப் போரைத் தழுவி படைக்கப்பட்ட இந்தத் திரைப்படம் குறித்தான தனது பார்வையை SBS தமிழ் நேயர்களுக்காக முன்வைக்கிறார் முனைவர் தாமு.

What are the symptoms of hypothyroidism? - தைராய்ட் பிரச்சினை வராமல் தடுப்பது எப்படி?

Dec 5, 2019 0:12:10

Description:

Hypothyroidism is a condition in which the thyroid gland is not able to produce enough thyroid hormone. Dr.Deen explains more about it.

-

நமது தொண்டையிலுள்ள தைராய்ட் சுரப்பியிலிருந்து ஹோர்மோன் சுரப்பது குறைவதால் ஏற்படும் நோய் நிலைமையே Hypothyroidism ஆகும். இது ஏன் ஏற்படுகிறது, இது ஏற்படாமல் தடுக்க முடியுமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதில் தருகிறார் மெல்பேர்னைச் சேர்ந்த மருத்துவர் நளிமுடீன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா. 

04/12/2019 Australian News - 04/12/2019 ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 4, 2019 0:08:33

Description:

The news bulletin broadcasted on 04 December 2019 at 8pm. Read by Maheswaran Prabaharan.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (04 December 2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Three artefacts 'improperly' acquired by Australia return to India - தமிழகத்திற்கு ஆஸ்திரேலியா திரும்பத்தரும் கடவுள் சிலைகள்

Dec 4, 2019 0:14:48

Description:

Australia will return three culturally significant artefacts to India during Prime Minister Scott Morrison’s visit in January 2020.

-

குறிப்பிடத்தக்க கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த மூன்று கலைப் பொருட்களை ஆஸ்திரேலியா இந்தியாவிடம் மீள கையளிக்கவுள்ளது.  அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தியா பயணிக்கும் பிரதமர் Scott Morrison, இந்த சிலைகளை நேரடியாக எடுத்துச் செல்லவுள்ளார்.

Focus: Tamil Nadu/India - 'தீண்டாமை சுவரே மரணத்திற்கு கரணம்'

Dec 4, 2019 0:05:20

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகினர். இது வெறுமனே இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்ட விபத்து  அல்ல என்றும் தீண்டாமை காரணமாக கருங்கல்லினால் அபாயகரமான இந்த சுவர் கட்டப்பட்டதாக குற்றசாட்டை முன்வைக்கின்றனர் பல்வேறு அமைப்பினர். தீண்டாமை சுவரே மரணத்திற்கு கரணம் என்று விபத்தால் பாதிக்கப்பட்டவர்களும் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் இது விபத்து என்று மற்றொரு தரப்பினர் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வருக்கிறார் எமது தமிழக நிருபர் ராஜ்.

 

 

What is plant-based meat? - தாவர இறைச்சி உண்ண விருப்பமா?

Dec 4, 2019 0:10:16

Description:

A new Aussie plant-based meat startup has launched. According to the CSIRO, the plant-based meat market is set to be worth more than $6 billion by 2030 in Australia, which will present a big opportunity for existing meat and grain producers. Mr.Yusouf explains more...

-

மாமிசம் உண்பதிலிருந்து மரக்கறி உண்பவராக மாற விரும்புபவர்களுக்கு உதவவென சிட்னி நகரில் தாவர இறைச்சி-Plant Based Meat உருவாக்கும் நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இந்த Plant Based Meat பற்றி விளக்குகிறார் திரு.யூசுப் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

What happens to asylum seekers who are returned to Sri Lanka? - இலங்கை திரும்பிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு என்ன நடந்தது?

Dec 4, 2019 0:08:05

Description:

When Sri Lanka’s civil war ended in 2009, up to a million people had been displaced and a major refugee exodus triggered. Many tried to come by boat to Australia but as the war had ended their refugee claims were rejected and they were sent back.

What happened to the Tamil asylum seekers who weren’t allowed to stay? And what does the return to power of a controversial figure in Sri Lankan politics mean for asylum seekers?

That story by Aaron Fernandes in Jaffna, Sri Lanka for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil program.

 

  -

ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தமிழ்ப்புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இலங்கையில் என்ன நடந்தது? இலங்கை அரசியலில் ஒரு சர்ச்சைக்குரிய நபரான கோட்டபாய ராஜபக்க்ஷ, அந்நாட்டு அதிபராகத் தெரிவாகியிருப்பது திருப்பியனுப்பப்படுவோருக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து Aaron Fernandes ஆங்கிலத்தில் தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Dec 2, 2019 0:07:20

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கை முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலையால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பிலும் தமிழ் மக்களுக்கு மாற்றுத்தலைமை தேவை என தமிழ் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கருத்துதெரிவித்துள்ளமை தொடர்பிலும் செய்தித்தொகுப்பை முன்வைககிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 2, 2019 0:07:48

Description:

The news bulletin aired on 02 December 2019 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (டிசம்பர் 2  2019 )  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.

Australia's new regional visa program: What you need to know P02 - ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான புதிய விசாவுக்கு விண்ணப்பிப்பது எப

Dec 2, 2019 0:09:48

Description:

Do you want to live in Australia? The good news is there are two new migration routes, but there’s a catch: you must live and work in a regional area. 
If you meet this requirement, then the door opens for you to obtain permanent residence. After a few years, you could even apply for citizenship. Lawyer and migration agent Maryam Naleemudeen explains more about it. Part 02

-

ஆஸ்திரேலியாவின் regional area-நகரம் அல்லாத பகுதிகளில் குடியேற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் நவம்பர் 16 ஆம் திகதி புதிய விசா உப பிரிவுகள்  491, 191 மற்றும் 494 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டமை நாமறிந்த செய்தி.  இதில் குறிப்பாக விசா உப பிரிவு 491 Skilled Work-Points based (Provisional)எனப்படுவது தொழில் ரீதியாக ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு குடிவந்து regional பகுதியில் வசிப்பதற்கு வழியமைத்துக்கொடுக்கிறது. இதுதொடர்பில் விளக்குகிறார் மெல்பேர்னில் சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவராக கடமையாற்றும் திருமதி.மரியம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். பாகம் 02. 

Overcoming loneliness in a new country - தனிமையாக உணரும் அகதிகளுக்கு எங்கே உதவிகள் கிடைக்கின்றன?

Dec 2, 2019 0:05:44

Description:

Language barriers, cultural differences, separation from family and friends are just some of the reasons why many refugees and asylum seekers experience loneliness. In Sydney and Melbourne, refugee organisations offer a range of programs and initiatives to help new arrivals regain a sense of community and belonging in their new country. Feature by Wolfgang Mueller

-

தாய்நாட்டிலிருந்து குடும்பம் மற்றும் நண்பர்களைப் பிரிந்து வந்தமை, மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகள் உள்ளிட்ட பல காரணிகளால் ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக குடிவந்த அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர் தனிமையாக உணரக்கூடும். இப்படியானவர்களுக்கு சிட்னி மெல்பேர்னில் உள்ள அகதிகள் அமைப்புகள் பல்வேறுதரப்பட்ட உதவிகளை வழங்குகின்றன. இது தொடர்பில் Wolfgang Mueller ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Dec 1, 2019 0:07:12

Description:

The news bulletin was broadcasted on 1 December 2019 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (1 டிசம்பர் 2019)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

குழந்தைஆபாச படம் அதிகம் பார்க்கும் பட்டியலில் உலகில் சென்னை முதலிடம்!

Dec 1, 2019 0:05:32

Description:

உலகிலேயே குழந்தைகளின் ஆபாச படத்தை பார்க்கும் நகரம் சென்னை என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையை அமெரிக்க புலனாய்வு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளதாகவும், இந்த தகவலின் அடிப்படையில் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்றும் தற்போது தமிழக காவல்துறையும் இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Boomerang (Feedback) - அகதிகள் தொடர்பான தகவலை SBS தமிழ் சரியாக தருகிறதா?

Dec 1, 2019 0:05:36

Description:

Dr Vicky Vigneswaran who is a refugee advocate in Sydney gives feedback on SBS-Tamil.   

-

புகலிடம் கோருவோர் அலல்து அகதிகள் தொடர்பான செய்திகளை நாம் அதிகமாக வழங்கிவருகிறோம். ஆனால் அவை தரமாகவும், உபயோகமாகவும் உள்ளனவா என்று அலசுகிறார் அகதிகளுக்காக குரல் தருகின்ற முனைவர் பாலா விக்கி அவர்கள். சிட்னி நகரில் வாழும் முனைவர் பாலா விக்கி அவர்கள் நமது SBS தமிழ் ஒலிபரப்பின் நிகழ்ச்சிகளை அலசுகிறார். அவர் முன்வைக்கும் “பூமராங்” நிகழ்ச்சி. தயாரிப்பு: றைசெல்.      

What is this girl on about? Is it a new language?? - தமிழ் பாடலையே தலைகீழாகப் பாடும் பெண்!

Dec 1, 2019 0:13:25

Description:

We know of palindromes – words which read the same backward as forward.  Manonmani Murugesan from Tirupur, Tamil Nadu, India has gone one step further -  she can speak in reverse - not just simple words, but a complete sentence.  She can also sing a complete song in reverse.

-

விகடகவி... இந்த சொல்லை பின் இருந்து முன் சொன்னாலும் விகடகவி என்று தான் சொல்லப்படும்.  ஆனால், ஒரு வார்த்தையை மட்டுமல்ல, முழு வசனங்கள், ஏன் 200க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட புத்தகத்தையே பின் இருந்து முன் வாசிக்கும் திறமையை வளர்த்துக் கொண்டவர் திருப்பூரைச் சேர்ந்த மனோன்மணி முருகேசன்.  அது மட்டுமல்ல, திரையிசைப் பாடல்களையும் அப்படி தலைகீழாகப் பாடுகிறார் இவர்.  இவரது காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

Study challenges conventional medical opinion over heart surgery - கடுமையான இதய நோய்க்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? இல்லை !

Dec 1, 2019 0:04:30

Description:

A US study on people with heart disease is challenging medical dogma and calls into question some of the most common practices in heart care. The study found people with stable heart disease don't benefit by having surgery. That story by Allan Lee for SBS News, produced by RaySel for SBS Tamil.

-

இதயநோய் என்றாலே அறுவை சிகிச்சைதான் என்பது நவீன மருத்துவத்தின் தீர்வாக உள்ளது. ஆனால் உண்மையில், கடுமையான இதய நோய் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை அல்லது சத்திரசிகிச்சைதான் தீர்வா? மருந்து மாத்திரையிலேயே கடுமையான இதய நோய்களை சரிசெய்யலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு.

SBS News இன் Allan Lee எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

NESA handover Tamil K–10 Syllabus in NSW - தமிழ் மொழி NSW பள்ளிகளில் அறிமுகம்!!

Nov 29, 2019 0:08:20

Description:

The Tamil K–10 Syllabus has been developed using the established NSW Education Standards Authority (NESA) syllabus development process.  The syllabus outcomes and the Stage statements for Early Stage 1 to Stage 5 follow the structure of other NSW K–10 Languages Syllabuses, which align with the Australian Curriculum achievement standards. NESA handover Tamil K-10 Syllabus this week. This feature explains more.

-

NSW மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எதிர்வரும் ஆண்டு முதல் ஆரம்ப வகுப்பு முதல் தமிழ் மொழியை ஒரு படமாக எடுத்து கற்கும் வகையில் தமிழ் மொழி K-10 பாடத்திட்டத்தை NSW Education Standards Authority(NESA)  தயாரித்து வெளியிட்டுள்ளது.  இதற்கான நிகழ்வு உத்தியோகபூர்வமாக சிட்னியில் உள்ள NESA அலுவலகத்தில் இவ்வாரம் நடைபெற்றது.  இது குறித்த விவரணம் ; தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Concerns raised about assessment of asylum applications - "அகதி விண்ணப்பங்கள் சரியாக பரிசீலிக்கப்படவில்லை"

Nov 29, 2019 0:07:33

Description:

The Human Rights Commission and mental health experts continue to raise concerns about the asylum applications of thousands of asylum seekers who arrived in Australia by boat.

-

நீங்கள் ஆஸ்திரேலியாவிற்குப் புகலிடம் தேடி வந்துள்ளீர்களா?  அல்லது அப்படி வந்தவர்கள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Nov 29, 2019 0:05:02

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையில் மீண்டும் அமைச்சரவை விரிவாக்கப்படுகிறது.  அதிலும் எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களும் இடம்பெறவில்லை.  இது குறித்து முஸ்லிம் தலைவர்கள் கருத்து; மற்றும் கொழும்பிலுள்ள சுவிஸ் நாட்டு தூதரக அதிகாரி கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட விடயம் குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Nov 29, 2019 0:08:54

Description:

Australian news bulletin aired on Friday 29 November 2019 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (29/11/2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். 

Know the Australian iconic bird emu! - ஆஸ்திரேலிய சின்னம் ஈம்யு பறவை பற்றிய அரிய தகவல்கள்

Nov 29, 2019 0:09:03

Description:

The emu is the second-largest living bird by height, after its ratite relative, the ostrich. It is endemic to Australia where it is the largest native bird and the only extant member of the genus Dromaius. Geetha Mathivanan who presents “Namma Australia” compiles some interesting facts about emu. Produced by RaySel.     

-

உலகிலுள்ள பறக்கவியலாத பறவையினங்களில்  இரண்டாவது பெரிய பறவை ஈம்யு. கங்காருவைப்போலவே ஈம்யு பறவையும் ஆஸ்திரேலியாவின் தேசிய, கலாசார அடையாளங்களுள் முக்கியமானது. இது ஆஸ்திரேலிய அரசின் முத்திரையில் இடம்பெற்றிருப்பதோடு நாணயங்களிலும், தபால் தலைகளிலும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய ஈம்யு பறவை குறித்த அரிய தகவல்களைத் தொகுத்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியாக்கிப் படைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.    

Three-parent baby? - ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர். அரசு இணக்கம்!

Nov 29, 2019 0:07:17

Description:

Three-parent baby, human offspring produced from the genetic material of one man and two women through the use of assisted reproductive technologies, specifically mitochondrial manipulation (or replacement) technologies and three-person in vitro fertilization (IVF). Explains  R.Sathyanathan, a popular broadcaster. Produced by RaySel.  

-

ஒரு குழந்தைக்கு ஆண் பெண் என்று இருவர்தான் பெற்றோர்களாக இருப்பர். ஆனால்   ஒரு குழந்தைக்கு ஒரு ஆண் இரு பெண்கள் என்று மூன்றுபேர் பெற்றோர்களாக இருக்கலாம் என்பதற்கு ஆஸ்திரேலிய அரசு இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்காக விரைவில் சட்டம் இயற்றப்படலாம். ஏன் இந்த சட்டம் தேவை?  ஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர்  என்பது ஏன்? அதன் அவசியம் என்ன என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.        

Australia's new regional visa program: What you need to know - ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான புதிய விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்

Nov 28, 2019 0:13:59

Description:

Do you want to live in Australia? The good news is there are two new migration routes, but there’s a catch: you must live and work in a regional area.
If you meet this requirement, then the door opens for you to obtain permanent residence. After a few years, you could even apply for citizenship. Lawyer and migration agent explains more about it. Part 01

-

ஆஸ்திரேலியாவின் regional area-நகரம் அல்லாத பகுதிகளில் குடியேற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் நவம்பர் 16 ஆம் திகதி புதிய விசா உப பிரிவுகள்  491, 191 மற்றும் 494 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டமை நாமறிந்த செய்தி.  இதில் குறிப்பாக விசா உப பிரிவு 491 Skilled Work-Points based (Provisional)எனப்படுவது தொழில் ரீதியாக ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு குடிவந்து regional பகுதியில் வசிப்பதற்கு வழியமைத்துக்கொடுக்கிறது. இதுதொடர்பில் விளக்குகிறார் மெல்பேர்னில் சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவராக கடமையாற்றும் திருமதி.மரியம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். பாகம் 01. 

Australian News 27.11.19 - ஆஸ்திரேலியச் செய்திகள் 27.11.19

Nov 27, 2019 0:06:50

Description:

The news bulletin aired on 27th November 2019 at 8pm

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன் (27 நவம்பர் 2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: செல்வி.

Maaveerar Naal – Reports from Sydney & other cities - சிட்னி, அடலைட், பெர்த் நகரங்களில் நடந்த மாவீரர் நாள் நினைவுத் தொகுப்பு

Nov 27, 2019 0:07:12

Description:

Maaveerar Naal is observed all over the world to remember the deaths of Tamil people died during the civil war in Sri Lanka since 1982. This is a compilation of reports from Sydney, Adelaide and Perth where Maaveerar Naal is observed today (27 Nov 2019). Produced by RaySel.

-

மாவீரர் நாள் இன்று (27 நவம்பர் 2019) ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் அனுசரிக்கப்படுகிறது. சிட்னி, அடலைட், பெர்த் நகரங்களில் இந்த நிகழ்வு நடைபெற்ற செய்திகளின் தொகுப்பு இது. தொகுத்தவர்: றைசெல்.        

Maaveerar Naal – A report from Melbourne - மெல்பன் நகரில் நடந்த மாவீரர் நாள் நினைவுத் தொகுப்பு

Nov 27, 2019 0:05:01

Description:

Maaveerar Naal is observed all over the world to remember the deaths of Tamil people died during the civil war in Sri Lanka since 1982. This is a report from Melbourne where Maaveerar Naal is observed today (27 Nov 2019). Report by Renuka. Produced by RaySel.

 

-

மாவீரர் நாள் இன்று (27 நவம்பர் 2019) ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் அனுசரிக்கப்படுகிறது. மெல்பன் நகரில் நடைபெறும் நிகழ்வின் செய்தி விவரணம்.  செய்தியாளர்: றேணுகா துரைசிங்கம் & தொகுத்தவர்: றைசெல்.        

Focus : India - மீண்டும் சர்ச்சையில் நித்யானந்தா

Nov 27, 2019 0:05:09

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் தங்கள் மகளை மீட்டுத் தரக்கோரி, கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா மற்றும் அவரது மனைவி ஆகியோர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

கடந்த சில வருடங்களாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நித்யானந்தா மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ் 

Sri Lankan President’s visit to India: expectations and reality - இலங்கை அதிபர் கோட்டாபயவின் இந்தியப் பயணம் எதை சாதிக்கும்?

Nov 27, 2019 0:08:32

Description:

Sri Lankan President Gotabaya Rajapaksa is visiting India on Friday. It is seen as an important visit. What would the visit achieve?  M. Mayilvaganan, PhD, an Associate Professor in International Strategic and Security Studies programme at National Institute of Advanced Studies (NIAS), India, analyses the significance of the visit. Produced by RaySel.    

-

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தியா செல்கிறார். அதிபராக பொறுப்பேற்றபின் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு அவர் இந்தியாவை தெரிவு செய்திருப்பதன் பின்னணி, இந்த பயணம் எதை சாதிக்கும் என்ற கேள்விகளோடு அலசுகிறார் முனைவர் எம்.மயில்வாகனன் அவர்கள். இந்தியாவின் பெங்களூரு நகரில் இயங்கும் National Institute of Advanced Studies (NIAS) நிறுவனத்தின் International Strategic and Security Studies பிரிவில் இணை பேராசிரியராக அவர் பணியாற்றுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.   

'Greedy' doctors responsible for exorbitant health insurance: Grattan Institute - "பேராசை மருத்துவர்களினால் தனியார் சுகாதார காப்பீடு மீது மக்கள்

Nov 27, 2019 0:04:55

Description:

Public policy analysts at the Grattan Institute have named 'greedy doctors' as one of the reasons Australians are deserting private health insurance.

They're calling on the government to force public hospitals to rein in soaring costs, estimating a saving of $2 billion per year, and a much-needed drop in premiums.

In English : Amelia Dunn ; In Tamil : Selvi

-

தனியார் சுகாதார காப்பீட்டு சந்தா தொகை அதிகம் ஆனால் அதன் மூலம் பெறும் பலன்கள் குறைவு என மக்களின் ஏமாற்ற குரல்கள் ஒலித்து வருவதாகவும் தனியார் சுகாதார காப்பீட்டு திட்டத்தை மேம்படுத்த பல பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை Grattan Institute வெளியிட்டுள்ளது.  இது குறித்து ஆங்கிலத்தில் Amelia Dunn எழுதிய விவரணம்; தமிழில் செல்வி 

How to reapply for expiring TPV - காலாவதியாக உள்ள தற்காலிக பாதுகாப்பு விசாவில் உள்ளவர்கள் உடனே செய்யவேண்டியவை

Nov 27, 2019 0:10:08

Description:

How to reapply for expiring TPV or SHEV visa.  Allison Rayne from RACS explains

 

-

மூன்று அல்லது ஐந்து ஆண்டு கால தற்காலிக பாதுகாப்பு விசா முடிவடையும் நிலையில் உள்ள அகதிகள் தங்களின் விசா முடிவடைவதற்குள் என்ன செய்ய வேண்டும் என அகதி ஒருவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் RACS வழக்கறிஞர் Allison Rayne . அகதி ஒருவருக்காக குரல் கொடுத்தவர் வசந்தி ரட்ணகுமார். 

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Nov 25, 2019 0:07:54

Description:

The news bulletin was aired on 25 November 2019 (Monday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள்  (25 நவம்பர் 2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்:றேனுகா

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Nov 25, 2019 0:06:47

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற புதிய அதிபர் அக்கறை செலுத்தவேண்டும் என தமிழ் முஸ்லிம் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல்
புதிய அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் அரசியல் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பில் செய்தியைத் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.    

Starting your own business at 60 - சொந்தமாக வியாபாரத்தில் ஈடுபடுவது குறித்து சிந்தித்திருக்கிறீர்களா?

Nov 25, 2019 0:05:25

Description:

There’s a common perception that we are less likely to take risks as we get older. Yet, research found that baby-boomers are the fastest growing entrepreneurship cohort anywhere in the world with the trend likely to increase as the population ages. Feature by Amy Chien-Yu Wang

-

வயது செல்லச் செல்ல புதிதாக வியாபாரம் தொடங்குவதற்குப் பலரும் தயங்குவதுண்டு.  ஆனால் 50-65 வயதுக்குட்பட்ட பலர் சொந்தமாக வியாபாரத்தை ஆரம்பிக்கும் செயற்பாடு உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆஸ்திரேலியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா

The unforgettable news in 2019 - இந்த செய்திகளே நினைவில் நிற்கின்றன!

Nov 24, 2019 0:12:45

Description:

Some of our listeners share the news they find unforgettable or important in 2019.

Special guests: Janani and Ramanan. Produced by RaySel.    

-

கடந்துசெல்லும் 2019 ஆம் ஆண்டில் உங்களை பாதித்த செய்தி எது? அல்லது இந்த ஆண்டில் உங்களை ஆச்சரியப்படவைத்த அல்லது அனுதாபப்பபடவைத்த செய்தி எது? என்ற கேள்வியோடு நாம் நடத்திய “பரிமாற்றம்” நிகழ்ச்சியில் நேயர்கள் கலந்துகொண்டு முன்வைத்த எண்ணங்கள். சிறப்பு விருந்தினர்கள்:   ஜனனி & ரமணன். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.      

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Nov 24, 2019 0:07:18

Description:

The news bulletin was broadcasted on 24 November 2019 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (24 நவம்பர் 2019)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Maharashtra crisis: Latest political developments

Nov 24, 2019 0:04:55

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

Working longer the fix for 'economic time bomb' of an ageing population: Frydenberg - “வேலைக்குப் போக நாங்கள் தயார்; வேலை யார் தருவார்கள்?”

Nov 24, 2019 0:04:30

Description:

Federal Treasurer Josh Frydenberg says he's concerned Australia's ageing population is an "economic time bomb". He wants older Australians to remain in the workplace longer to help keep the economy afloat, but some senior workers say workplace culture is what needs to change. Amy Hall and Nakari Thorpe for SBS News explains. RaySel for SBS Tamil.

-

ஓய்வூதியம் பெறும் வயதை நெருங்கும்போது வேலை இழந்தால் அவர்களுக்கு வேலை கிடைப்பது எளிதல்ல. ஆனால் வயது முதிர்கின்றவர்கள் வேலையில் அதிக ஆண்டுகள் நீடித்தால்தான் நாட்டின் பொருளாதாரம் மேம்பட முடியும் என்கிறார் நாட்டின் கருவூலக்காப்பாளர் Josh Frydenberg அவர்கள்.             

SBS News இன் Amy Hall & Nakari Thorpe எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

Former student and a father share their experience of education in Tamil Nadu - தமிழகத்தில் கல்வி: கேரள முன்னாள் மாணவி & தந்தையின் அனுபவம்

Nov 22, 2019 0:09:01

Description:

Fathima Latif, a student of IIT Madras from Kerala suicided last week. This incident triggered a debate over discrimination faced by minorities in Tamil Nadu educational institutions. Ms Naseena who went to Tamil Nadu from Kerala for higher studies and Mr Aravindakshan who sent her daughter to Tamil Nadu from Kerala for higher studies share their experience. Produced by RaySel.   

-

சென்னை IIT-யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்துகொண்டார்.  பாத்திமாவின் சோகத்தையடுத்து கேரளா மாநிலத்திலிருந்து தமிழகம் வந்து கல்வி கற்ற மாணவிகள் மற்றும் மாணவிகளை தமிழகம் அனுப்பிவைத்த பெற்றோர்கள் என்ன நினைக்கின்றனர்? 

தமிழகத்தில் கல்வி கற்ற அனுபவத்தை கேரளா மாநிலத்தைச் சார்ந்த நசீனா அவர்களும், தமிழகத்தில் கல்வி கற்க தன் மகளை அனுப்பிய அனுபவத்தை கேரளா மாநிலத்தைச் சார்ந்த அரவிந்தக்ஷன் அவர்களும்  பகிர்ந்துகொள்கின்றனர். தயாரிப்பு: றைசெல்.        

Fathima Latheef suicide case and allegations of Islamophobia! - மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: மதம் காரணமா?

Nov 22, 2019 0:14:41

Description:

19-year old Fathima from Kerala was a first year student at IIT Madras. She was found hanging from a ceiling fan in her room on the morning of November 9. Fathima's father Abdul has claimed that his daughter had named some professors in notes that she left behind on her mobile phone. Renuka presents a feature.

-

சென்னை IIT-யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் கடந்த 9-ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். குறித்த மாணவி தனது பேராசிரியர்கள் சிலரின் சாதி,மத ரீதியான துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளதையடுத்து இவ்விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இது தொடர்பில் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Will Bougainville become the world's newest nation? - சுதந்திரத்தின் வாசலில் இன்னொரு நாடு

Nov 22, 2019 0:05:30

Description:

A new country could soon come into existence in the Pacific just 1,500 kilometres north-east from Australia.

-

புதிய நாடொன்று உருவாக இருக்கிறது.  அதுவும் ஆஸ்திரேலியாவிற்கு அருகில், சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவில் பசிஃபிக் பகுதியில் ஒரு புதிய நாடு விரைவில் உருவாகும் சாத்தியம் இருக்கிறது.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Nov 22, 2019 0:05:14

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கைப் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ பதவி ஏற்றிருக்கிறார். அவர் உட்பட 16 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Nov 22, 2019 0:09:02

Description:

Australian news bulletin aired on Friday 22 November 2019 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (22/11/2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். 

Australia's new regional visa program: What should our listeners look for? - ஆஸ்திரேலியாவில் குடியேற புதிய விசா: எந்த வேலை செய்பவர்கள் விண்ணப

Nov 22, 2019 0:14:35

Description:

Australia's new regional visa program has been launched.

-

ஆஸ்திரேலியாவில் நகரம் அல்லாத பகுதிகளில் (regional areaவில்) குடியேற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் நவம்பர் 16 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு புதிய விசா (உப பிரிவு 491மற்றும் 494) வகைகளின் கீழ் என்னென்ன வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

20/11/2019 Australian News - 20/11/2019 ஆஸ்திரேலியச் செய்திகள்

Nov 20, 2019 0:08:59

Description:

The news bulletin broadcasted on 20 November 2019 at 8pm. Read by Maheswaran Prabaharan.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (20 November 2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Focus: Sri Lanka - இலங்கையில் தேர்தலுக்கு பிந்திய கள நிலவரம்

Nov 20, 2019 0:06:06

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையில் தேர்தலுக்கு பிந்திய கள நிலவரம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை பயணம் தொடர்பாகவும்
தமிழர்களின் கருத்து வெளிப்பாட்டுக்கு புதிய ஜனாதிபதி மதிப்பளிக்கவேண்டும் என்ற சம்பந்தனின் வேண்டுகோள் தொடர்பிலும் செய்திவிவரணம் ஒன்றை முன்வைக்கிறார் எமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

 

 

Tamil syllabus added to NSW public schools curriculum: What about Victoria? - விக்டோரியாவில் தமிழுக்கென்று தனியான பாடத்திட்டம் உருவாக்கப்பட

Nov 20, 2019 0:13:38

Description:

Tamil syllabus has been added to NSW public schools curriculum. What about Victoria? VCE Tamil is studied nearly exclusively by correspondence, with the support of community-run organisations.  Many representatives of Tamil organisations from across the state are calling to have the Tamil language introduced into the national curriculum. Renuka presents a feature. 

-

NSW மாநிலத்தில் பாலர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்கும் வகையில் தமிழுக்கென்று தனியான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் விக்டோரியாவிலும் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பிலும் அங்கு தமிழ்மொழி எவ்வாறு கற்பிக்கப்படுகின்றது என்பது தொடர்பிலும் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா 

SriLanka's new president to form care-taker government? - இலங்கை அதிபர் தேர்தல்: அடுத்தது என்ன?

Nov 20, 2019 0:14:40

Description:

Former Sri Lankan defence minister Gotabaya Rajapaksa has won the country's presidential election. He ran a nationalist campaign with a promise of security and vows to crush religious extremism.This is an analysis on Sri Lankan presidential election 2019 by T.Premananth, Editor-Uthayan News Paper, Jaffna.

-

இலங்கை அதிபர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ வெற்றிபெற்றாலும் தமிழ் பேசும் சமூகம் அதிகமான வாக்குகளை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்கியிருந்தமை நாமறிந்த செய்தி. இப்படியான பின்னணியில் புதிய அதிபராக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டமை குறித்து தமிழ்மக்களின் மனநிலை தொடர்பிலும் இன்னும் சில சமகால அரசியல் விடயங்கள் தொடர்பிலும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் திரு.பிறேமானந்துடன் உரையாடுகிறார் றேனுகா.

Government abandons 'robo-debt' recovery from welfare recipients - கடன் கணக்கிடும் முறையை Centrelink மாற்றுகிறது

Nov 20, 2019 0:05:37

Description:

The federal government is changing its "robo-debt" recovery scheme targeting welfare recipients. Tens of thousands of welfare recipients were overcharged by Centrelink using the process, and there are calls now for their payments to be refunded.

Praba Maheswaran has the story in Tamil written for SBS News.

- முற்று முழுதாக எந்திரங்களை மாத்திரம் பயன்படுத்திக் கணக்கிடும் முறைமூலம் மேலதிக கொடுப்பனவுகளை மீளப்பெறும் திட்டத்தை அரசு கைவிடுகிறது. இதுபற்றி SBS செய்திப்பிரிவு தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

Lena: a Tamil leading producer - சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியவர்!

Nov 20, 2019 0:10:04

Description:

S. M. Letchuman Chettiar from Chettinad known as Lena Chettiar was a Tamil film producer  in 1940s. D.Suntheradas, a veteran journalist, presents a special feature on Lena. Produced by RaySel.

-

தமிழ் திரையுலகின் அன்றைய சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவதர் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரைவைத்து படம் தயாரித்த பெருமைகளைக் கொண்டவர் கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார் அவர்கள். அவர் குறித்த நிகழ்ச்சியை முன்வைக்கிறார் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.  

Pay day loans leave vulnerable people worse off - ஆஸ்திரேலியாவில் எளியவர்களை நசுக்கும் கந்துவட்டி!

Nov 20, 2019 0:08:09

Description:

The Consumer Action Law Centre is concerned vulnerable Australians, including new migrants, are often financially worse off after accessing pay day loans. The high-cost short term credit agreement is usually timed with a consumer's pay-day but many fall into debt, while the lenders gain profits due to attached costs. More than 135,000 of these loans are being written every month. R.Sathyanathan, a popular broadcaster, explains the Pay day loan system. Produced by RaySel.  

-

கந்துவட்டி கடன் என்பது கடன்கொடுக்கும் பணத்துக்கு பல மடங்கு வட்டி வசூலிக்கும் கொடுமையான கடன் முறை. இந்த கந்துவட்டி உலகின் ஏழை நாடுகளில்தான் உள்ளது என்று நினைக்காதீர்கள். ஆஸ்திரேலியாவிலும் நம்மைச் சுற்றி இந்த கந்துவட்டியின் வலைவிரிகிறது.  விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.        

Gotabaya Rajapaksa sworn in as Sri Lanka's new president - இலங்கை அதிபராக பொறுப்பேற்றார் கோட்டாபய ராஜபக்ஸ!

Nov 18, 2019 0:07:20

Description:

Gotabaya Rajapaksa sworn in as Sri Lanka's new president. Mathivaanan, our correspondent in Sri Lanka,presents a report. 

-

இலங்கையின் புதிய அதிபராக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்றுக்கொண்டார்.
அவரது வெற்றி குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பிலும்
நாடாளுமன்றத்கை கலைப்பது குறித்து ஆளும் அணி ஆலோசனை நடத்திவருகின்றமை தொடர்பிலும் செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.     

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Nov 18, 2019 0:07:51

Description:

The news bulletin aired on 18 November 2019 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (நவம்பர் 18 2019 )  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.

What is Schoolies Week? - Schoolies Week என்றால் என்ன?

Nov 18, 2019 0:05:55

Description:

School graduation holds significant meaning to adolescents worldwide. In Australia, school leavers tend to celebrate what’s called ‘Schoolies’ over a week. The most popular destination Gold Coast is expecting around eighteen thousand school leavers this November. Feature by Amy Chien-Yu Wang

-

ஆஸ்திரேலியாவில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளியேறுபவர்களுக்கான கொண்டாட்ட வாரமாக Schoolies Week கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாதத்தின் இறுதி வாரத்தில் சுமார் 18 ஆயிரம் பேர் Schoolies Week கொண்டாட்டத்திற்காக Gold Coast- இல் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

 

FOCUS: Sri Lanka - கோத்தபய ராஜபக்ச: இலங்கையின் புதிய அதிபர்!

Nov 17, 2019 0:05:45

Description:

Sri Lanka’s former wartime defence minister Gotabaya Rajapaksa, part of the country’s most powerful political dynasty, has been elected president. Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report explaining the victory of Gotabaya Rajapaksa.

-

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளார். நாட்டின் நிறைவேற்று அதிகார அதிபராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்ச நாளை காலை அனுராதபுரத்தில் பதவி ஏற்கிறார்.  அது தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Nov 17, 2019 0:07:34

Description:

The news bulletin was broadcasted on 17 November 2019 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (17 நவம்பர் 2019)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

வெள்ளையார்களால் மட்டுமே நாடு வளம்பெறும் என்று நம்பிய பிரதமர்

Nov 17, 2019 0:07:38

Description:

ஆஸ்திரேலிய அரசியலில் பலரும் மறந்த பிரதமர் Stanley Bruce என்று கூறுமளவு இவரைப்பற்றி யாரும் அவ்வளவு நினைவுகூருவதில்லை. யார் இந்த Stanley Bruce? அவரின் சாதனைகள் என்ன? இந்த கேள்விகளின் பதிலோடு வெள்ளையார்களால் மட்டுமே ஆஸ்திரேலிய நாடு வளம்பெறும் என்று நம்பிய பிரதமரான Stanley Bruce அவர்கள் குறித்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைக்கிறார் 4 EB தமிழ் ஒலியின் சிவா கைலாசம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.   

“It's a divisive and dangerous politics” - “இனவாத பூகம்பத்தின் வெற்றி”

Nov 17, 2019 0:16:55

Description:

Sri Lanka’s former wartime defence minister Gotabaya Rajapaksa, part of the country’s most powerful political dynasty. The casted votes indicate that the minority Tamils and Muslims favoured Sajith Premadasa. What does it imply? Mr Karunakaran, Mr Vidhyatharan and Ms Tamil Kavi in Sri Lanka analyse the election outcome and its implications.    

-

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெற்றாலும் தமிழ் பேசும் சமூகம் அதிகமான வாக்குகளை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்கியுள்ளது. அதேவேளையில் சிங்கள சமூகத்தினர் கோத்தபாய  ராஜபக்சவுக்கு அதிகமான வாக்குகளை வழங்கியுள்ளனர். இப்படியான போக்கு எதைக் காட்டுகிறது? புதிய அதிபரான கோத்தபாய ராஜபக்ச சந்திக்கும் சவால்கள் என்ன? இந்த கேள்விகளோடு அலசுகின்றனர் இலங்கையிலிருந்து பிரபல அரசியல் ஆய்வாளர்கள் – வித்யாதரன், கருணாகரன் மற்றும் விடுதலைப்புலிகளின் ஊடகத்தில் பணியாற்றி தற்போது கிளிநொச்சியில் வாழ்ந்துவரும் முன்னாள் போராளி தமிழ் கவி ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.     

Interview with Professor Saratha Nambi Arooran - “தமிழ் பாடல்கள் சரிசமமாக பாடும் நிலை தமிழ்நாட்டில் இல்லை”

Nov 15, 2019 0:16:36

Description:

Professor Dr.Saratha Nambi Arooran is visiting Sydney on 16 Nov (Saturday) to attend Mathalai Somu’s “Kandych Cheemai” book release event. Dr Saratha spoke to RaySel. 

-

பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் கல்லூரி முதல்வராகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆன்மிகச் சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர் எனப் பன்முகத்தன்மைகொண்டவர். மறைமலை அடிகளாரின் மகள் வயிற்றுப் பேரன், நம்பி ஆரூரனை மணந்தவர்.

 

ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவரான மாத்தளை சோமு அவர்கள் எழுதிய “கண்டிச்சீமை” நாவலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள சிட்னி வருகைதரும் முனைவர்.சாரதா நம்பி ஆரூரன் அவர்களை சந்தித்து உரையாடுகிறார்: றைசெல்.

 

“கண்டிச்சீமை” நாவல் வெளியீட்டு நாள்: 16 நவம்பர். சனிக்கிழமை மாலை 5.30 மணி. நடைபெறும் இடம்:   சிட்னி துர்கை அம்மன் ஆலய தமிழர் மண்டபம்.

அதிக தொடர்புக்கு: 0420 440 008 & 0402 436 196         

 

Climate change is putting Australians' health at risk - காலநிலை மாற்றம் – உங்கள் உயிருக்கே ஆபத்து!

Nov 15, 2019 0:05:17

Description:

Climate change is not just damaging the planet but putting people’s health at risk, according to a new report.

-

காலநிலை மாற்றம் எமது பூமியை மட்டுமல்ல, மக்களின் ஆரோக்கியத்தையும் அதிகமாகத் தாக்குகிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

Sri Lankan Presidential Election: What Do Our Listeners Say? - இலங்கை அதிபர் தேர்தல்: எங்கள் நேயர்கள் என்ன சொல்கிறார்கள்?

Nov 15, 2019 0:07:03

Description:

We asked some of our listeners about the Presidential election in Sri Lanka tomorrow.  

-

இலங்கை தேர்தலில் எப்படியான முடிவை எதிர்பார்க்கிறார்கள், தேர்தல் நடக்கும் முறை எப்படி அமையும், மற்றும் இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவதை அவர்கள் விரும்புகிறார்கள் என்று எமது நேயர்கள் சிலரிடம் கேட்டிருந்தோம்.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Nov 15, 2019 0:05:12

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை நடைபெறவுள்ளது.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Nov 15, 2019 0:08:03

Description:

Australian news bulletin aired on Friday 15 November 2019 at 8pm. Read by Kulasegaram Sanchayan.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (15/11/2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.

How passport system introduced? - பாஸ்போர்ட் உருவான கதையும் உலகின் சக்திமிக்க கடவுச்சீட்டும்!

Nov 15, 2019 0:08:49

Description:

A recent report ranked Australia's passport as one of the most powerful in the world, based on the number of countries it grants access to. However, introduction of passport has an interesting history. Explains R.Sathyanathan, a popular broadcaster. Produced by RaySel.  

 

-

உலகின் சக்திமிக்க கடவுச்சீட்டு எது எனும் பட்டியல் அவ்வப்போது வெளியாவதுண்டு. ஆனால் இப்படியான பட்டியல் தயாரிப்பு எப்படியான அம்சங்களை கணக்கில் கொள்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?  மட்டுமல்ல, பாஸ்போர்ட் எனும் முறை எப்படி உருவானது என்று தெரியுமா? விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.        

Janaki's ‘Unravelled’: Into Draupadi's mind - மெல்பேர்னில் ஜானகி ரங்கராஜனின் 'Unravelled'

Nov 14, 2019 0:14:35

Description:

Classical Dancer Dr Janaki Rangarajan is coming to Melbourne to showcase her solo production "Unravelled" -a dance-theatre production based on a contemporary script written by theatre artist, V. Balakrishnan, merging traditional Bharathanatyam dance and the spoken word in English. This is an interview with her.

-

மெல்பேர்னில் இயங்கும் சந்திராலயா நடனப்பள்ளி, உலகப்புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞர் Dr.ஜானகி ரங்கராஜனின் ''Unravelled'' என்ற நிகழ்வை நவம்பர் 24ம் திகதி Rowville Performing Arts Centre-இல் நடத்தவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பிலும் Dr.ஜானகி ரங்கராஜனின் கலைப்பயணம் தொடர்பிலும் அவரோடு உரையாடுகிறார் றேனுகா. 

Sri Lankan Tamils in Australia concerned at possible election outcome - ஆஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களும் : இலங்கை அதிபர் தேர்தலும்

Nov 13, 2019 0:05:17

Description:

 

Sri Lankan Tamils living in limbo in Australia fear they could be returned to a situation even more dangerous than the one they fled.

This weekend, the country will elect a new President and the front-runner is a man accused of human rights abuses against the ethnic minority. 

In English : Abbie O'Brien ; In Tamil : Selvi

-

இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கு பிறகு அங்கு தங்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை அதிகரிக்கக்கூடும் என்று ஆஸ்திரேலிய தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் அஞ்சுவதாக கூறப்படுகிறது.  அதற்கான காரணத்தை விளக்குகிறது இந்த விவரணம்.  ஆங்கிலத்தில் : Abbie O' Brien ; தமிழில் : செல்வி. 

Focus : India - இந்தியப் பார்வை!!

Nov 13, 2019 0:05:07

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

-

மகாராஷ்டிராவில் அரசியல் கட்சிகள் ஆட்சி அமைக்க தவறியதை அடுத்து, நேற்று அதிரடியாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை முடக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் ஆளுநர் கோஷ்யாரி என்று குற்றம்சாட்டுகின்றனர் எதிர்க்கட்சியினர். மஹாராஷ்டிராவில் நடந்தது என்ன? விளக்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Australian News 13.11.19 - ஆஸ்திரேலியச் செய்திகள் 13.11.19

Nov 13, 2019 0:08:21

Description:

The news bulletin aired on 13th November 2019 at 8pm

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன் (13 நவம்பர் 2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.வாசித்தவர்: செல்வி.

When to go to the Emergency Department(ED) - அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் எவை?

Nov 13, 2019 0:12:15

Description:

There's a lot of confusion about when you should visit a doctor (GP), or call an ambulance to take you to the hospital emergency department. Dr.Jeya-Adelaide Victor Harbour hospital Emergency Consultant explains about when you should visit a hospital's emergency department (ED) and hospital costs & payments.

-

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்ற அனுபவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கும். ஒருவர் எப்படியான சந்தர்ப்பங்களில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லவேண்டும் என்பது தொடர்பிலும் மெடிகெயார் இல்லாதவர்கள் தனியார் மருத்துவ காப்புறுதி பெற்றிருக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் விளக்குகிறார் அடிலெய்டிலுள்ள Victor Harbour மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர்- Consultant ஜெயசாகரனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Interview with Dr.P.Anandakumar! - 'மொழி,பண்பாட்டு தனித்துவங்களை திட்டமிட்டு குலைக்கும் செயற்பாடே 'காவி அரசியல்''

Nov 13, 2019 0:14:26

Description:

Dr.P.Anandakumar, Professor and Head, Department of Tamil, The Gandhigram Rural Institute will be the keynote speaker at “Tamil Osai” magazine’s annual event in Sydney. This is an interview with him.

-

சிட்னியில் நடைபெறவுள்ள தமிழ் ஓசை சஞ்சிகையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து முனைவர் பா. ஆனந்தகுமார்  வருகை தருகிறார். காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியரான இவர் இந்திய இலக்கிய ஒப்பாய்வுத் துறையில் சிறந்து விளங்கும் தமிழறிஞர் ஆவார். அவரது ஆஸ்திரேலிய பயணம் பற்றியும் இலக்கியப்பணி தொடர்பிலும் முனைவர் பா. ஆனந்தகுமாருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். 

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Nov 11, 2019 0:08:19

Description:

The news bulletin aired on 11 November 2019 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (நவம்பர் 11 2019 )  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Nov 11, 2019 0:05:28

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கை அதிபர் தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சார பணிகள் தொடர்பிலும்  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வடக்கு கிழக்கில் தமது நிலைப்பாடு தொடர்பில் கூட்டங்களை நடாத்தும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்பிலும் செய்தியைத் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள். 

One - A new sculpture at University of Canberra - “அனைத்தும் ஒன்றே” - கன்பரா பல்கலைக்கழகத்தில் ஒரு புதிய சிற்பம்

Nov 11, 2019 0:10:45

Description:

‘One’, is a self-supporting triangulated monocoque that splits into 3 twisting arms of stainless steel that join in axial union at the apex and base. The design best encompasses the values held by Dr Naren Chellappah of Truth, Right conduct, Love, Peace, and Non-Violence.  

-

‘ஒன்று’என்ற தலைப்பில் ஒரு புதிய சிற்பம் கன்பரா பல்கலைக்கழகத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  உண்மை, நன்னடத்தை, அன்பு, அமைதி மற்றும் வன்முறையற்ற வாழ்க்கை என்ற செய்திகளை இந்த வடிவமைப்பு சிறப்பாக உள்ளடக்கியது என்கிறார், இந்த சிற்பத்திற்கு வடிவம் கொடுத்துள்ள பல் வைத்தியர் நரேன் செல்லப்பா.

Re-imagining aged care in Australia Part 2 - ஆஸ்திரேலிய முதியோர் பராமரிப்பு சேவைகளை முன்னேற்றுவது எப்படி?

Nov 11, 2019 0:06:37

Description:

The Interim Report by the Aged Care Royal Commission reveals a substandard residential aged care sector plagued by poor care and safety standards. As Australia looks at improving the care of our ageing population, it must also consider the complex cultural needs of our multicultural seniors. Some innovative providers are recognising the importance of intergenerational interactions. Feature by Amy Chien-Yu Wang

-

முதியோர்களைப் பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பில் ஆஸ்திரேலியாவிலுள்ள முதியோர் இல்லங்கள் மிகவும் குறைவுபடுவதாக ரோயல் கமிஷன் விசாரணை மூலம் தெரியவந்திருக்கிறது.
முதுமையடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் பின்னணியில் அவர்களைப் பராமரிக்கும் துறையில் பல முன்னேற்றங்கள் செய்யவேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில்  Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா

 

Writer Mathalai Somu on his novel “Kandych Cheemai” - “ஒரு இனத்தின் அவல வரலாற்றை கண்டிச்சீமை புதினமாக பதிவுசெய்துள்ளது”

Nov 10, 2019 0:08:46

Description:

Mathalai Somu is a leading Tamil writer in Australia. His latest novel is “Kandych Cheemai” which keeps receiving awards. Somu spoke to RaySel on his motivation for writing a sociohistorical novel.  

-

மாத்தளை சோமு அவர்கள் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர். அவரது சமீபத்திய நாவல் “கண்டிச்சீமை” இலங்கையின் மலையகத் தமிழர்களின் வரலாற்று அவலங்களை சமூக வரலாற்று நாவலாக முன்வைக்கிறது. இது குறித்து மாத்தளை சோமு அவர்களை சந்தித்து உரையாடுகிறார்: றைசெல்.

இந்த நாவல் வெளியீட்டு நாள்: 16 நவம்பர். மாலை 5.30 மணி. நடைபெறும் இடம்:   சிட்னி துர்கை அம்மன் ஆலய தமிழர் மண்டபம்.

அதிக தொடர்புக்கு: 0420 440 008 & 0402 436 196         

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Nov 10, 2019 0:06:15

Description:

The news bulletin was broadcasted on 10 November 2019 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (10 நவம்பர் 2019)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Focus: INDIA - அயோத்தி வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – ஒரு பார்வை

Nov 10, 2019 0:06:46

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

இந்தியாவில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் – பாபர் மசூதி வழக்கில் நேற்று இந்திய உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்தது.  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக பல்வேறு விவாதங்கள் தொடார்ந்து நடந்து வருகின்றன. அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Boomerang (Feedback) - நேயரின் தட்டு! குட்டு! கொஞ்சம் பூச்செண்டு!!

Nov 10, 2019 0:04:27

Description:

Dhinakaran who is a long time listener in Sydney gives feedback on SBS-Tamil.   

-

சிட்னி நகரில் வாழும் நமது நீண்ட கால நேயர் தினகரன் அவர்கள் நமது SBS தமிழ் ஒலிபரப்பின் நிகழ்ச்சிகளை அலசுகிறார். அவர் முன்வைக்கும் “பூமராங்” நிகழ்ச்சி. தயாரிப்பு: றைசெல்.      

A discussion on Sri Lanka’s presidential election - இலங்கை அதிபர் தேர்தலில் யார் வெல்வர்? யார் வெல்லவேண்டும்?

Nov 10, 2019 0:15:56

Description:

The 2019 Sri Lankan presidential election will be held on Saturday (16 Nov). This is the first Presidential election in Sri Lanka where no sitting president, prime minister or opposition leader is contesting for President. Tamil National Alliance decided to support UNP candidate Sajith Premadasa. Who will win? Who is a better candidate for the minority communities? Panelists: Mr.M.M.Nilamdeen, a leading political analyst in Sri Lanka,  Mr Ismail Meeran in Sydney, Mr Muthukannan in Brisbane and Mr.Krishnakumar in Sydney. Produced by RaySel.

 

-

இலங்கையில் இன்னும் ஐந்து நாட்களில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த  தேர்தலில் யார் வெல்லவேண்டும், யார் வெற்றிபெறுவர் என்ற கேள்விகளோடு விவாதிக்கின்றனர் இலங்கையிலிருந்து  அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன், கூடவே  ஆஸ்திரேலியத் தமிழர்கள் இஸ்மாயில் மீரான், முத்துக்கண்ணன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர்.  நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Oxfam's new CEO Danny Sriskandarajah - Oxfam இன் புதிய தலைவரான தமிழர்

Nov 8, 2019 0:25:40

Description:

Dr Dhananjayan (Danny) Sriskandarajah joined Oxfam GB as Chief Executive in January 2019.  Dhananjayan has spent his forming years in Sydney.  Kulasegaram Sanchayan talks to Dhananjayan at his residence in London about his childhood, his passion to address inequality and his current role as the CEO of Oxfam.

-

ஒக்ஸ்ஃபாம் (Oxfam) என்ற தொண்டு நிறுவனத்தின் சர்வதேச நிர்வாக இயக்குநர் பொறுப்பை இந்த வருட ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டவர், டாக்டர் தனஞ்சயன் ஸ்ரீஸ்கந்தராஜா.  சிறு வயதை சிட்னியில் கழித்த டாக்டர் தனஞ்சயனை இலண்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த குலசேகரம் சஞ்சயனிடம் தனது சிறுபிராயம், சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கான அவரது ஆர்வம் மற்றும் ஒக்ஸ்ஃபாமில் அவரது தற்போதைய பங்கு என்பன குறித்து மனம் திறந்து பேசுகிறார் டாக்டர் தனஞ்சயன் ஸ்ரீஸ்கந்தராஜா.

Victoria’s first aged care facility for Tamil community! - விக்டோரியாவில் தமிழர்களுக்கென்று தனியான முதியோர் இல்லம்!

Nov 8, 2019 0:12:00

Description:

Victorian Tamil Association has revealed plans for an aged care facility to meet the cultural and future needs of the Tamil community. Renuka talks to Mr.Sivayogan (VTA President) and Mr.Paramanathan (VTA Treasurer) to find out more.

-

விக்டோரியா மாநிலத்தில் தமிழர்களுக்கென்று தனியான முதியோர் இல்லமொன்றை ஏற்பாடு செய்யும் பணியில் விக்டோரிய தமிழ் சங்கம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் விக்டோரிய தமிழ் சங்கத்தின் தலைவர் திரு.சிவயோகன் மற்றும் பொருளாளர் திரு.பரமநாதன் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா.

Migrant legal service tackles wage theft - உங்களுக்கு சரியான ஊதியம் கிடைக்கிறதா? எப்படித் தெரியும்??

Nov 8, 2019 0:05:32

Description:

Migrants and temporary visa holders facing exploitation from their employers will now be able to access free legal help in New South Wales.

-

புலம்பெயர்ந்தோர், குறிப்பாக தற்காலிக வீசா வைத்திருப்பவர்கள் அவர்களது முதலாளிகளிடமிருந்து சுரண்டலை எதிர்கொண்டால், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இலவச சட்ட உதவியை இப்போது பெற முடியும்.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Nov 8, 2019 0:05:33

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையில், அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

   

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Nov 8, 2019 0:07:05

Description:

Australian news bulletin aired on Friday 08 November 2019 at 8pm. Read by Kulasegaram Sanchayan.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (08/11/2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.

06/11/2019 Australian News - 06/11/2019 ஆஸ்திரேலியச் செய்திகள்

Nov 6, 2019 0:07:51

Description:

The news bulletin broadcasted on 06 November 2019 at 8pm. Read by Maheswaran Prabaharan.

 

  -

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (06 November 2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

A Film by Retired Rowdies - அடிலெய்ட் தமிழர்களின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் ஒரு குறும்படம்!

Nov 6, 2019 0:24:22

Description:

This is an interview with the cast and crew of a tamil movie produced by Vinaithogi Productions in Adelaide.

 

-

தெற்கு ஆஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் வருடாந்த நிகழ்வையொட்டி Retired Rowdies எனும் குழு, வினைத்தொகை Productions ஊடாக தமிழ் குறும்படம் ஒன்றினை தயாரித்து வெளியிட்டுள்ளது.
திரைப்படத்துறையில் அனுபவம் இல்லாமல்-புதியவர்களால்-குறிப்பாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் IT துறைசார்ந்தவர்களால்  உருவாக்கப்பட்டிருக்கும் இக்குறும்படம் தொடர்பில் அதன் இயக்குனர் Dr. Titus உள்ளிட்ட குழுவினருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

“TNA made a wrong decision” - தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு சரியா? – ஒரு அலசல்

Nov 6, 2019 0:07:59

Description:

The 2019 Sri Lankan presidential election will be held on 16 November. This is the first Presidential election in Sri Lanka where no sitting president, prime minister or opposition leader is contesting for President. Tamil National Alliance decided to support UNP candidate Sajith Premadasa. Is this the strategic decision?  Analyses Dr. Thamil Venthan Ananthavinayagan, Lecturer in International Law, Griffith College, Ireland. Produced by RaySel.

-

இலங்கையில் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி (New Democratic Front) சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். சிறீலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சியின் சார்பில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுகிறார். தமிழ்தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு சரிதானா என்று அலசுகிறார் அயர்லாந்து நாட்டின் Griffith College யில் பணியாற்றும் கல்வியாளர் முனைவர் தமிழ்வேந்தன் ஆனந்தவினாயகம் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Focus: Tamil Nadu/India - வள்ளுவருக்கு காவி உடை - சர்ச்சை

Nov 6, 2019 0:05:53

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

 

  -

சில தினங்களுக்கு தமிழக பா.ஜ.க தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில்  திருவள்ளுவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அந்த புகைப்படத்தில் திருவள்ளுவர் காவி நிற ஆடையுடன், இந்து மதக் குறியீடுகளான பட்டை நாமம், ருத்ராட்சம் அணிந்த நிலையில் காணப்பட்டார்.
திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். ஆனால் தமிழக பாஜக தலைவர்களோ திருவள்ளுவர் ஒரு ஹிந்து என்று மீண்டும் கருத்துக்களை கூற தமிழக அரசியல் களத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதே நேரம் இது ஒரு தேவையற்ற விவகாரம் என்றும், அரசியல் காட்சிகள் தேவையில்லாமல் இந்த சிறிய விவகாரத்தை சர்ச்சையாக்கிவருவதாக பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர்!!

 

 

Senate committee warned against privatizing Australian visa-processing - ஆஸ்திரேலிய விசா விண்ணப்ப செயல்முறை தனியார்மயமாகிறது!!

Nov 6, 2019 0:05:53

Description:

Migration experts have warned a multi-billion-dollar plan to outsource visa processing threatens the integrity of Australia's migration system. The Department of Home Affairs stresses no jobs will be cut, but critics argue the move will do nothing to clear the application backlog. Praba Maheswaran has the story in Tamil written by Brett Mason and  Matt Connellan for SBS News.

 

 

  -

அடுத்த வருடம் நடைறைக்கு வரவேண்டுமென அரசு விரும்பும் விசா விண்ணப்ப செயல்முறையை தனியார்மயமாக்கும் புதிய திட்டம் பற்றி Brett Mason மற்றும் Matt Connellan தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

 

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Nov 4, 2019 0:05:05

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.     

-

எதிர்வரும் அதிபர் தேர்தலில் யாருக்கு? ஏன்? எதற்காக? தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்? என தமிழ் கட்சிகளிடையே யாழில் நடைபெற்ற விவாதம் மற்றும் தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை குறித்த செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.     

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Nov 4, 2019 0:08:35

Description:

The news bulletin aired on 04 November 2019 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (நவம்பர் 04 2019 )  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.

The race that stops a Nation!!!! - மெல்பேர்ன் கப் 2019: வெல்லப்போவது எந்தக் குதிரை?

Nov 4, 2019 0:10:52

Description:

The Melbourne Cup is Australia's major thoroughbred horse race. Marketed as "the race that stops a nation", it is a 3,200 metre race for three-year-olds and over. It is the richest "two-mile" handicap in the world, and one of the richest turf races. Conducted annually by the Victoria Racing Club on the Flemington Racecourse in Melbourne, Victoria, the event starts at 3pm on the first Tuesday in November. Mr. N. Raguram, explains more about this.

-

ஆஸ்திரேலியாவின் பிரபல குதிரைப்பந்தய போட்டியான மெல்பேர்ன் கப் நிகழ்வு செவ்வாய்க்கிழமை - 04.11.2019 நடைபெறுகிறது. இப்போட்டி குறித்தும் இதன் வரலாறு பற்றியும் விளக்குகிறார் பிரபல ஒலிபரப்பாளர் நவரட்ணம் ரகுராம் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

Sexual harassment and your rights in the workplace - பணியிடத்தில் பாலியல் தொந்தரவா? முறைப்பாடு செய்வது எப்படி?

Nov 4, 2019 0:06:46

Description:

According to the latest survey from the Australian Human Rights Commission, one in three workers say they've been sexually harassed at work over the last five years. But sexual harassment in the workplace is unlawful and shouldn’t be tolerated. If it happens to you or someone you know, there are ways to get help. Feature by Audrey Bourget, produced by Renuka for SBS Tamil.

-

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் மூன்றில் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளில் தமது பணியிடங்களில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய ஆய்வு முடிவு கூறுகின்றது. பணியிடத்தில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்பதுடன் சட்டவிரோதமானதும் கூட.  நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ பணியிடத்தில் பாலியல் தொந்தரவுக்குள்ளானால் உதவி பெறுவதற்கு பல வழிகள் இருக்கின்றன. இது தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா. 

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Nov 3, 2019 0:07:58

Description:

The news bulletin was broadcasted on 3 November 2019 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (3 நவம்பர் 2019)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

 

Focus: Tamil Nadu - பொள்ளாச்சி: குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்புகிறார்களா?

Nov 3, 2019 0:05:24

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

தமிழ்நாட்டின் பிரபல வழக்கு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு. இளம் பெண்களை ஏமாற்றி வல்லுறவு செய்து, அதனை வீடியோ எடுத்து சில இளைஞர்கள் பணம் பறித்தது குறித்த இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கு பதிவில் அரசியல் தலையீடு இருந்ததாக விமர்சிக்கப்படுவது குறித்த ஒரு பார்வை! முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். 

Why Sujith’s death hugely impacted on people? - சுஜித்தின் மரணம் மட்டும் ஏன் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது?

Nov 3, 2019 0:18:36

Description:

Sujith was found dead after four days as all efforts failed to rescue him. Many people in Tamil Nadu got distressed over the issue and it hugely impacted on them. Sudha Vasanth, Ranjan, Dr Suganya and Consultant Psychiatrist Dr Raiz discuss the impact of Sujith’s death.  Produced by RaySel.

-

தமிழ்நாட்டில் சுஜித் எனும் 2 வயதுச் சிறுவன் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து நான்கு நாட்களுக்குப்பின் பிணமாக மீட்கப்பட்டான். மீட்புப்பணி நடந்த நாட்களில் தமிழக மக்களில் பலரும் இந்த சிறுவனுக்காக மனமுருகினர்; கண்ணீர் வடித்தனர். எத்தனையோ மரணங்கள் தினம் தினம் நடந்தாலும் ஏன் சுஜித்தின்  மரணம் மட்டும் இப்படியான ஆழமான தாக்கத்தை நம்மில் ஏற்படுத்தியது? விவாதிக்கின்றனர் சுதா வசந்த், ரஞ்சன், மருத்துவர்கள் ரெய்ஸ் மற்றும் சுகன்யா ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

From Coffee to Concrete! - மெல்பேர்னில் coffee-ஐ பயன்படுத்தி concrete தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் தமிழர்!

Nov 1, 2019 0:14:33

Description:

A new project from RMIT University could see the waste from the 1.3 million cups of coffee drunk daily in Australia turned into concrete used in homes, driveways or office buildings.
As part of the venture, a keen coffee-loving engineering lecturer Dr Srikanth Venkatesan and his students Senura Kohombange and Anthony Abiad have looked to the construction industry for a novel solution to reduce the amount of coffee grinds going to landfill – using them in concrete. Renuka Thuraisigham talks to Dr Srikanth Venkatesan to find out more.

-

மெல்பேர்ன் RMIT பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றும் Dr.ஸ்ரீகாந்த் வெங்கடேசன் தனது மாணவர்களுடன் இணைந்து புதிய ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டுவருகிறார். அதாவது கோப்பி சக்கை/கழிவினை, கட்டடங்கள் கட்டுவதற்குத் தேவையான concrete தயாரிப்பில் பயன்படுத்துவதுதான் இந்த ஆய்வு. இதுதொடர்பில் Dr.ஸ்ரீகாந்த் வெங்கடேசனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

"Making Jaffna a dumb society" - "யாழ்ப்பாணத்தவரை முட்டாள் சமூகமாக்கப்பார்க்கிறார்கள்"

Nov 1, 2019 0:13:28

Description:

The popular Botany teacher and the Palaly Teachers College lecturer Mr Sinnaththamby Gunaseelan speaking to Praba Maheswaran during his recent visit to Australia.

 

  -

யாழ்ப்பாணத்து மாணவர்களின் தற்போதைய போக்கு, அவர்களின் கல்வி கற்கும் திறன்கள் மற்றும் யாழ்ப்பாண சூழ்நிலைகள் குறித்து மனந்திறந்து பேசுகிறார்  பிரபல தாவரவியல் ஆசிரியர், விரிவுரையாளர் திரு சின்னத்தம்பி குணசீலன் அவர்கள்.  

நீதி, நேர்மை, எளிமை, கண்டிப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உறைவிடம் என அவரது மாணவர்களினால் புகழ் சூட்டப்பட்ட யாழ்ப்பாணத்தின் பிரபல தாவரவியல் ஆசிரியர் திரு சின்னத்தம்பி குணசீலன் இம்மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் வந்திருந்தார். அப்போது சிட்னியில் அவரின் மாணவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டிருந்த அவருடன் சந்தித்து உரையாடினார் மகேஸ்வரன் பிரபாகரன். 

 

 

WA Tamils prevent the burning of Ravana - இராவணன் தகனம் செய்யப்படுவதைத் தடுத்த WA தமிழர்கள்!

Nov 1, 2019 0:05:01

Description:

As part of their Diwali celebrations, ISWA, the Indian Society of Western Australia, was planning to burn an effigy of Ravana.  This was not acceptable to the Tamils living in Western Australia. Following their opposition, the event has been altered.

-

மேற்கு ஆஸ்திரேலியாவின் இந்திய அமைப்பான ISWA, தமது தீபாவளி கொண்டாடடங்களின் ஒரு அங்கமாக, இராவணன் பொம்மையை எரிக்க திதிட்டமிட்டிருந்தார்கள்.  இது மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களுக்கு இது ஏற்கத்தக்கதல்ல.  இது குறித்து அவர்கள் காட்டிய எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Nov 1, 2019 0:05:35

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையில், ஐந்து தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறார்கள் முக்கிய வேட்பாளர்கள்.  இதனால், யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் முடிவில்லை என்கின்றன தமிழ் கட்சிகள்.  சூடுபிடிக்கும் இலங்கை அதிபர் தேர்தல் களம் குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Nov 1, 2019 0:09:58

Description:

Australian news bulletin aired on Friday 01 November 2019 at 8pm.  Read by Kulasegaram Sanchayan.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (01/11/2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.

How “Facial Recognition” technologies work? - நாம் எங்கிருந்தாலும் அடையாளம் கண்டுவிட முடியும்!

Nov 1, 2019 0:08:50

Description:

Facial recognition is the process of identifying or verifying the identity of a person using their face. It captures, analyses and compares patterns based on the person's facial details, says R.Sathyanathan, a popular broadcaster. Produced by RaySel.  

-

Facial Recognition எனப்படும் முகத்தைவைத்து அடையாளம் காணும் தொழில்நுட்பம் எங்கும் எதிலும் வியாபித்து நிற்கிறது. இதிலிருந்து யாரும் தப்ப முடியாது என்ற ரீதியில் அசுர வளர்ச்சியடைந்துவரும் இந்த தொழில்நுட்பம் எப்படி இயங்குகிறது என்று எளிய தமிழில் விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.        

Know Australian brush-turkey! - ஆஸ்திரேலிய புதர்க்கோழி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Nov 1, 2019 0:08:49

Description:

The Australian brush-turkey or gweela also frequently called the scrub turkey or bush turkey, is a common, widespread species of mound-building bird from the family Megapodiidae found in eastern Australia from Far North Queensland to Eurobodalla on the south coast of New South Wales. It is the largest extant representative of the family Megapodiidae, and is one of three species to inhabit Australia.  Geetha Mathivanan who presents “Namma Australia” compiles some interesting facts about Australian brush-turkey. Produced by RaySel.     

-

ஆஸ்திரேலியாவில் வாழும் பலருக்கும் ஆஸ்திரேலிய புதர்க்கோழி பற்றி தெரிந்திருக்கும். Australian brush turkey, bush turkey, scrub turkey என்றெல்லாம் குறிப்பிடப்படும் புதர்க்கோழி வான்கோழிகளைப் போல இருந்தாலும் இவை வான்கோழியினத்தைச் சார்ந்தவையல்ல. கோழி என்று குறிப்பிடுவதால் கோழியினத்தைச் சார்ந்தவையும் அல்ல. அப்படிஎன்றால் இந்த பறவை எது? ஆஸ்திரேலிய புதர்க்கோழி குறித்த அரிய தகவல்களைத் தொகுத்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியாக்கிப் படைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.    

Home births, birth centres just as safe as hospital for healthy women - வீட்டிலேயே பிள்ளை பெறுவதும் பாதுகாப்பானதே!

Nov 1, 2019 0:07:17

Description:

The authors of a study on Australian births say national data show home birthing is a safe option for healthy pregnant women.

-

ஆஸ்திரேலியாவில் ஆரோக்கியமான கர்ப்பிணிப் பெண்கள் வீட்டிலேயே பிரசவம் செய்வது மருத்துவமனை பிரசவம் போன்று பாதுகாப்பானதே என்று அண்மைய ஆய்வொன்று கூறுகிறது.

 

30/10/2019 Australian News - 30/10/2019 ஆஸ்திரேலியச் செய்திகள்

Oct 30, 2019 0:07:26

Description:

The news bulletin broadcasted on 30 October 2019 at 8pm. Read by Maheswaran Prabaharan.

 

  -

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (30 October 2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

“Sujith’s death could have been avoided” - “சுஜித்தின் மரணத்தை தடுத்திருக்கலாம்”

Oct 30, 2019 0:07:02

Description:

Sujith was found dead after failed effort to rescue him. The government, policies and officials to be blamed for this type of deaths, says G. Sundarrajan of Poovulagin Nanbargal. Produced by RaySel.

-

தமிழ்நாட்டில் சுஜித் எனும் 2 வயதுச் சிறுவன் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பின்னர் பிணமாக மீட்கப்பட்டான். அரசும், அதிகாரிகளும், மீட்புப் பணியாளர்களும் எவ்வளவோ முயன்றும் சுஜித்தை காப்பாற்ற இயலவில்லை.

இந்த இயலாமைக்கு அரசும், அதிகாரிகளின் நடைமுறைகளும், மீட்புப் பணி நடந்த விதமுமே காரணம் என்றும் கூறுகிறார் பூவுலகின் நண்பரகள் எனும் அமைப்பின் சுந்தர்ராஜன் அவர்கள்.  அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Focus: Tamil Nadu/India - சுஜித்தின் மாரணம் கற்றுத்தரும் பாடம் என்ன?

Oct 30, 2019 0:05:43

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.

 

  -

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்குழாய் கிணற்றில் சிக்கியபின், சிறுவனை மீட்க கடந்த ஐந்து நாட்களாக நடந்த பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. சுமார் 82 மணி நேரத்திற்கு பிறகு சிறுவனின் அழுகிய உடலைத்தான் மீட்பு படையினரால் மீட்க முடிந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் போராடியும் சுமார் 80 மணி நேரத்திற்கு பிறகு, பாழடைந்த ஆழ்குழாய்க்குள்ளேயே சிறுவன் சுஜித் மரணித்த சம்பவம் அனைத்து தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுஜித்தின் மரணம் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களையும் யோசனைகளையும் கூறி வருகின்றனர்.  இதே நேரம் அந்த சிறுவனின் மரணம் ஒரு மிக பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தியாவில் உயிரிழப்புகளுக்குப் பிறகுதான் சட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி தான் அது!!. சிறுவன் சுஜித்தின் மாரணம் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன? 

முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

 

 

“We were unable to rescue Sujith due to this reason” - “இதனால்தான் எங்களால் சுஜித்தை காப்பாற்ற இயலவில்லை”

Oct 30, 2019 0:08:02

Description:

Sujith was found dead after failed effort to rescue him. He fell into a deep well and died after 82 hours. His body was retrieved by rescue workers. Venkatesh who used his invention in the rescue mission explains the reasons for the failure. Produced by RaySel.

-

தமிழ்நாட்டில் சுஜித் எனும் 2 வயதுச் சிறுவன் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 82 மணிநேரங்களுக்குப் பிறகு பிணமாக மீட்கப்பட்டான். அரசும், அதிகாரிகளும், மீட்புப் பணியாளர்களும் எவ்வளவோ முயன்றும் சுஜித்தை காப்பாற்ற இயலவில்லை.

 

இந்த பின்னணியில் சுஜித்தை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்க தான் கண்டுபிடித்த கருவி மூலம் இந்த பணியில் தீவிரமாக செயல்பட்டு, தனது முயற்சியில் தோல்விகண்டுள்ளார் நாமக்கல்லைச் சார்ந்த வெங்கடேஷ் அவர்கள். ஏன் சுஜித்தை தங்களால் காப்பாற்ற இயலவில்லை என்று மனச்சோர்வில் இருக்கும் வெங்கடேஷ் அவர்கள் நமக்காக விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Know the mental illnesses and Depression - சோர்வா? மன அழுத்தமா? வாழ்க்கையில் வெறுப்பா?

Oct 30, 2019 0:11:56

Description:

"Mental Health Month" is observed in October in Australia. This Mental Health Awareness Month gives all Australians the opportunity to reflect on what we can do to support the people we care about, and what we are doing for ourselves when it comes to our mental health. It is the time to know more about mental illness. Dr Raiz, Consultant Psychiatrist, explains the major mental illness, especially Depression.  Produced by RaySel.   

-

அக்டோபர் மாதம் மன நல மாதம். Mental Health Month.  மன நலம், மன நோய்கள் குறிப்பாக மன அழுத்தம் குறித்து விளக்குகிறார் மனநல மருத்துவர் ரெயிஸ் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

உதவி பெற: Lifeline Australia - 13 11 14

Manus Island detention centre is shut but hundreds of asylum seekers say they're now stranded - மனுஸ் தீவு முகாம் முற்றாக மூடல் - அகதிகள் தவிப்பு

Oct 30, 2019 0:05:52

Description:

Almost all asylum seekers have now been moved off Manus Island, marking the end of one of the most controversial chapters in Australia's border policy history. But critics say those now on the Papua New Guinea mainland remain at risk. Praba Maheswaran has the story in Tamil written by Nick Baker, Peggy Giakoumelos for SBS News.

 

  -

ஆஸ்திரேலியாவின் 'எல்லைக் கொள்கை' வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய அத்தியாயங்களில் ஒன்றின் முடிவைக் குறிக்கும் வகையில், ஏறத்தாழ அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களும் இப்போது மனுஸ் தீவில் இருந்து நகர்த்தப்பட்டுள்ளனர். இதுபற்றி Nick Baker, Peggy Giakoumelos தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

 

 

"Unravelled" in Melbourne! - மெல்பேர்னில் சந்திராலயா நடனப்பள்ளி வழங்கும் "Unravelled"

Oct 30, 2019 0:05:28

Description:

Chandralaya School of Dance in Melbourne brings a world-renowned International Classical Dancer by the name Dr Janaki Rangarajan  to showcase her solo production "Unravelled" on Sunday, Nov 24th at Rowville Performing Arts Centre in Melbourne at 6.30 pm. Deepa Mani -Artistic Director of Chandralaya School of Dance explains more about it…

-

மெல்பேர்னில் இயங்கும் சந்திராலயா நடனப்பள்ளி, உலகப்புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞர் Dr.ஜானகி ரங்கராஜனின் ''Unravelled'' என்ற நிகழ்வை நவம்பர் 24ம் திகதி நடத்தவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பில் சந்திராலயா நடனப்பள்ளியின் கலை இயக்குனர் தீபா மணியுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Oct 28, 2019 0:07:52

Description:

The news bulletin aired on 28 October 2019 at 8pm. 

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (அக்டோபர் 28 2019 )  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Oct 28, 2019 0:04:39

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கை அதிபர் தேர்தலில் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதுடன்  தேர்தல் பரப்புரையும் சூடுபிடிக்கிறது. மறுபுறம் தேர்தல் விதிமீறல்களும் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியைத் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.

Yoga teacher Nanammal dies at 99! - மருத்துவமனை பக்கமே நான் சென்றதில்லை- யோகா பாட்டி நந்னம்மாள்

Oct 28, 2019 0:03:59

Description:

At the age of 99, Yoga teacher Nanammal drew her last breath on October 26, 2019, at her residence near Coimbatore, Tamil Nadu. Nanammal had trained thousands of students over the years, and she had groomed more than 600 yoga instructors, including 36 from her own family. This is an interview given by Nanammal 21 months ago to SBS Tamil.

-

"யோகா பாட்டி" என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட இந்தியாவின் மிக மூத்த யோகாசன ஆசிரியர் நந்னம்மாள் தமது 99ஆவது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார். பலவிதமான யோகாசனங்களில் நிபுணத்துவம் பெற்றிருந்த நந்னம்மாள் இந்தியாவின்  உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீவிருது பெற்றவர். அவர் சுமார் 21 மாதங்களுக்கு முன்னர் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு வழங்கிய நேர்முகத்தை மீள் ஒலிபரப்பு செய்கிறோம். அவரை நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன்.

How does Divorce affect a Will? - மணமுறிவை எதிர்கொள்பவர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

Oct 28, 2019 0:12:47

Description:

What happens when a couple divorces, including the conditions you need to meet to get a divorce.  Solicitor Thirumalai Selvi Shanmugam advises about everything you need to know about divorce in Australia, from how to get a quick divorce to how does it affect a will.

-

திருமணமான சில வருடங்களிலேயே விவாகரத்து பெறும் நடைமுறை உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் பின்னணியில் ஆஸ்திரேலியர்கள் அதற்கு விதிவிலக்கு அல்ல. இவ்வாறு விவாகரத்து செய்து கொள்ளும் தம்பதியர் கவனிக்க வேண்டிய அம்சங்கள் தொடர்பிலும் ஆஸ்திரேலியாவில் விவாகரத்து செய்துகொள்வதற்கான நடைமுறைகள் தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பேர்னில் வழக்கறிஞராகப் பணியாற்றும் திருமலை செல்வி சண்முகம் அவர்கள்.

Re-imagining aged care in Australia - ஆஸ்திரேலிய முதியோர் பராமரிப்பு சேவைகளில் முன்னேற்றம் ஏற்படுமா?

Oct 28, 2019 0:05:41

Description:

With one in three older Australians born in a non-English speaking country, how equipped are our nursing homes in tailoring to the specific cultural needs of residents with dementia who may have reverted back to their mother tongue? What if we can re-imagine an aged care system that better meets our human and cultural needs?  Feature by Amy Chien-Yu Wang

-

ஆஸ்திரேலியாவிலுள்ள முதியவர்களில் மூன்றில் ஒருவர் ஆங்கிலத்தை முதன்மொழியாக கொண்டிராத நாடொன்றில் பிறந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்படியானதொரு பின்னணியில் முதுமைக்காலத்தில் அவர்களுக்கு மறதிநோய் ஏற்படும்போது அவர்கள் ஆங்கிலமொழியை மறந்து தமது தாய்மொழி மட்டும் நினைவில் வைத்திருக்கக்கூடும். அப்படியென்றால் முதியோர் இல்லத்தில் அவர்களது தாய்மொழி பேசும் ஒருவர்தான் பராமரிப்பாளாராக இருக்கவேண்டும் இல்லையா? ஆனால் அப்படியான சூழ்நிலை ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றதா? இல்லை என்ற பதில்தான் முதியோர் பராமரிப்பு துறை மீதான ரோயல் கமிஷன் விசாரணை மூலம் தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பில்  Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

 

We celebrated Deepavali! - தீபாவளியும் எங்கள் குடும்பமும்

Oct 27, 2019 0:12:51

Description:

Some of our listeners shared their Deepavali celebration experience  in our monthly talkback program “Vanga Pesalam”.  We post our special guest family - Mr Ayyappan, Mrs Seetha and their child Agri’s experience with their Deepavali program. Program produced by RaySel.  

-

ஆஸ்திரேலியாவில் தமிழ் மக்கள் தீபாவளி விழாவை எப்படி கொண்டாடினார்கள்? அல்லது தீபாவளி திருநாளை பிறர்  கொண்டாடியதை பார்த்தவர்களுக்கு அதில் பிடித்த அம்சம் என்ன? இந்த கேள்விகளோடு நாம் நடத்திய “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட ஐயப்பன், சீதா மற்றும் அக்ரி குடும்பத்தினர் பகிர்ந்து கொண்ட அனுபவம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.      

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Oct 27, 2019 0:09:51

Description:

The news bulletin was broadcasted on 27 October 2019 (Sunday) at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (27 அக்டோபர் 2019)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

 

How “Buy now Pay Later” system works? - இப்போது வாங்குங்கள் பிறகு பணம் செலுத்துங்கள் (Buy now Pay Later): நலனும் அபாயமும்!

Oct 27, 2019 0:07:51

Description:

Buy now Pay Later companies allow customers to buy goods or services without taking out a traditional loan or paying upfront fees or interest, creating an alternative to using a credit card.R.Sathyanathan, a popular broadcaster, explains the pros and cons of buy now pay later system. Produced by RaySel.  

-

Buy now Pay Later அல்லது “இப்போது வாங்குங்கள் பிறகு பணம் செலுத்துங்கள்” எனும் திட்டம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடையத் துவங்கியுள்ளது. இந்த Buy now Pay Later திட்டம் நல்ல திட்டம்தானா? இந்த திட்டத்தின் நன்மை என்ன? எதில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.        

S. M. Subbaiah Naidu: A legendary musician in Tamil! - கண்ணதாசனை, விஸ்வநாதனை, சௌந்தரராஜனை திரைக்கு அறிமுகம் செய்தவர்!

Oct 27, 2019 0:11:53

Description:

S. M. Subbaiah Naidu known as SMS was a South Indian composer, conductor, and orchestrator. He was one of the oldest music directors. SMS also worked with many films under Jupiter Pictures and Central Studios. He is fondly known as "Sangeethayya" in the south Indian film industries. He somehow had never changed his trend of composing much from the beginning days. He is well versed in the Indian music but never showed interest in foreign tunes and music. His contribution is invaluable. He was a composer, conductor, and orchestrator. D.Suntheradas, a veteran journalist, presents a special feature on SMS. Produced by RaySel.

-

தென்னிந்திய திரைப்பட உலகில் இசையமைப்பாளர்  S. M. சுப்பையா நாயுடு  அவர்களின் பங்களிப்பு அளப்பெரிது.  மட்டுமல்ல, கவிஞர் கண்ணதாசனை, இசையமைப்பாளர் விஸ்வநாதனை,  பெரும் பாடகர் TM சௌந்தரராஜனை திரைக்கு அறிமுகம் செய்தவர் S. M. சுப்பையா நாயுடு. இப்படி பல பெருமைகளைக் கொண்ட S. M. சுப்பையா நாயுடு  அவர்களின் நாற்பதாம் ஆண்டு  நினைவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.  

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Oct 25, 2019 0:07:07

Description:

The news bulletin was broadcasted on 25 October 2019 at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளி (25 அக்டோபர் 2019)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Focus: Tamil Nadu - விக்கிரவாண்டி & நாங்குநேரி அதிமுக வெற்றி: ஒரு பார்வை!

Oct 25, 2019 0:05:40

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

தமிழ்நாட்டில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில், ஆளும் கட்சியான அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இரு தொகுதிகளையுமே திமுக கூட்டணி இழந்துள்ளது. தமிழக இடைத் தேர்தல் முடிவு குறித்து ஒரு பார்வை! முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். 

World mourns for 39 Chinese nationals found dead in truck - 39 பேர் குளிரில் உறைந்து மரணம். ஏன் இவர்கள் லண்டன் சென்றனர்?

Oct 25, 2019 0:04:12

Description:

British police said that 39 people found dead in a truck near London were all believed to be Chinese nationals, as officers conduct the country's largest murder probe in more than a decade. Kulasegaram Sanchayan, our producer, reports from London. Produced by: RaySel.

-

பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு லாரியில் உள்ள குளிர் கொள்கலன் மூலம் சட்ட விரோதமாக வந்தபோது உடல் உறைந்து உயிரிழந்த 39 பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று லண்டன் பொலீஸார் கூறுகின்றனர். இவர்கள் இப்படி சட்டவிரோதமாக பிரிட்டன் செல்ல என்ன காரணம்? லண்டன் சென்றுள்ள நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயன் விளக்குகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.     

A new day dawns for Uluru and Anangu - உலுறு பாறையில் இனி ஏற முடியாது!

Oct 24, 2019 0:12:51

Description:

Almost 90 years since Australians began scaling Uluru, the controversial climb has finally closed to the public. The historic decision was announced two years ago, but Anangu  traditional owners have called for a ban for decades. Renuka presents a special feature on this.

-

ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் புனித இடமாக கருதப்படும் Uluru-உலுறு பாறையில் ஏறுவதற்கான தடை அக்டோபர் 26 சனிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உலுறு பகுதியின் சொந்தக்காரர்களான அனாங்கு பூர்வீக குடிமக்களின் நீண்டநாள் கோரிக்கையின் அடிப்படையில் இத்தடை நடைமுறைக்கு வருகிறது.
இதுதொடர்பில் உலுறு பகுதிக்கு ஏற்கனவே சுற்றுலாச் சென்ற இருவரின் அனுபவங்களுடன் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா.

Early childhood education access for asylum seekers expands - சிட்னியில் அகதிச்சிறுவர்களுக்கு இலவச ஆரம்பக்கல்வி வசதி!

Oct 24, 2019 0:04:52

Description:

Asylum seekers on bridging visas in Australia face significant problems getting their children into early learning. In Sydney, there's a new solution. Feature by Allan Lee for SBS News, produced by Renuka for SBS Tamil.

-

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியநிலையில் bridging விசாவுடன் வாழ்ந்து வரும் பலருக்கு தமது பிள்ளைகளுக்கான ஆரம்ப கல்வியைப் பெற்றுக்கொடுப்பதில் சிரமங்கள் காணப்படலாம். ஆனால் சிட்னியிலுள்ளவர்களுக்கு உதவி கிடைக்கிறது.  இது தொடர்பில் SBS News-இன் Allan Lee ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Oct 23, 2019 0:08:43

Description:

The news bulletin was aired on 23 October 2019 at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன் (23 அக்டோபர் 2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா

Focus: Tamil Nadu - தமிழகப் பார்வை

Oct 23, 2019 0:05:08

Description:

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu

-

மத்திய அரசின் புதியகல்விக்கொள்கையின்படி மருத்துவம், பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு இருப்பது போல அனைத்து மாநிலங்களிலும் பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் அனைத்திற்கும் பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கடந்த வாரம் செய்தி வெளியானது. மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் காட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதே போல் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்திய அரசின் முடிவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் எமது தமிழக நிருபர் ராஜ்.

Business Networking and Entertainment Night 2019 - வாணிப வசந்தத்தில் “மாற்றி யோசி”

Oct 23, 2019 0:07:07

Description:

Australian Tamil Chamber of Commerce celebrates its annual event “Vaniba Vasantham 2019” on 9 November 2019. Mr. Thiruvengadam Arumugam (President), Mr.Jega Nadarajah (Executive Vice President), Ms.Vijayakumari Virassamy (Vice President – Community Affairs) speak about the event. Produced by RaySel. 

For more information: Anita: 0410 923 463; Vindran: 0423 624 809; Thiru Arumugam: 0423 445 159; Viji: 0423 044 177. 

-

ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் “வாணிப வசந்தம்” எனும் நிகழ்வு நவம்பர் 9 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் “நீயா நானா” கோபிநாத் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.

      

“வாணிப வசந்தம்” நிகழ்ச்சி குறித்து ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின்  திருவேங்கடம் ஆறுமுகம் (தலைவர்), ஜெகா நடராஜா (செயல் துணைத் தலைவர்), விஜயகுமாரி வீரசாமி (துணைத் தலைவர் – சமூக செயல்பாடு) ஆகியோர் உரையாடுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.     

அதிக தகவலுக்கு:  Anita: 0410 923 463; Vindran: 0423 624 809; Thiru Arumugam: 0423 445 159; Viji: 0423 044 177. 

Terrible dilemma faced by migrant women who are victims of domestic violence - குடியேறிய பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைக்கு அரசு என்ன செய்

Oct 23, 2019 0:06:41

Description:

A new report has found migrant women on temporary visas who experience family violence are often left to suffer in silence because of fears they will be deported if they seek help. Monash University researchers have called for reforms to the migration system to protect them better.

Gareth Boreham for SBS News explains. RaySel for SBS Tamil.

-

ஆஸ்திரேலிய குடும்பங்களில் நடைபெறும் வன்முறையைக் குறைக்க அரசு புதிய செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் புதிதாக நாட்டில் குடியேறிய பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு பரிந்துரைக்கிறது.

SBS News இன் Gareth Boreham எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

“Teachers’ pay is great!” - “ஆசிரியர்கள் பெறுவது மிகச் சிறந்த ஊதியம்!”

Oct 22, 2019 0:16:18

Description:

Teachers' Day is a special day for the appreciation of teachers and may include celebrations to honour them for their special contributions in a particular field area, or the community in general.

-

ஆசிரியர்களைப் பாராட்டுவதற்கான ஒரு சிறப்பு நாளான ஆசிரியர் தினம் பல நாடுகளில் அக்டோபர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டாலும், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 25 ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Are kids these days smarter ? - இன்றைய சிறுவர்கள் உண்மையில் புத்திசாலிகளா?

Oct 22, 2019 0:20:18

Description:

International Children's Day is a day recognized to celebrate children. The day is celebrated on various dates in different countries.

-

இன்று சிறுவர் தினம் ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்படுகிறது.  உலகின் பல பாகங்களிலும் ஒரு நாளைக் கொண்டாடினாலும், ஆஸ்திரேலியாவில் இது சிறுவர் வாரம் என்று ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது.  இது குறித்து குழந்தை மருத்துவர்கள் இருவரின் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Oct 21, 2019 0:07:23

Description:

The news bulletin was aired on 21 October 2019 at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள்  (21 அக்டோபர் 2019) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா 

“They are instilling violence in the name of Rama!” - “இராவண தகனம் என்று வன்முறையை தூண்டுகிறார்கள்”

Oct 21, 2019 0:18:19

Description:

“A ritual of burning effigy of demon king Ravana which represents the victory of good over evil. 'Ravana Dahan' commemorates the day when Lord Rama killed Ravana, as written in epic 'Ramayana',” says the Facebook page of Indian Society of Western Australia.  This is not acceptable to Tamils living in Western Australia.

-

“இராவணன் என்ற அரக்கனின் உருவத்தை எரிக்கும் ஒரு சடங்கு, இது தீமைக்கு எதிரான நல்ல வெற்றியைக் குறிக்கிறது. 'இராமாயணம்' என்ற காவியத்தில் எழுதப்பட்டபடி, இராமர் இராவணனைக் கொன்ற நாளை நினைவுகூர்கிறது” என்று மேற்கு ஆஸ்திரேலியாவின் இந்திய அமைப்பான ISWAவின் ஃபேஸ்புக் பக்கம் கூறுகிறது. இது மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களுக்கு இது ஏற்கத்தக்கதல்ல.

How to prevent drowning? - நீங்கள் அடிக்கடி கடற்கரைக்குச் செல்பவரா?

Oct 21, 2019 0:04:17

Description:

With another scorching summer approaching, authorities are pleading with swimmers to use caution as the number of people drowning has jumped by ten per cent since last year. Feature by Wolfgang Mueller.

-

நீர்நிலைகளில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது  தொடர்பில் Wolfgang Mueller ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.  

Focus: Tamil Nadu - விலைக்கு வாங்கப்படுகிறதா இடை தேர்தல் ஓட்டுகள்?

Oct 20, 2019 0:05:04

Description:

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. 

-

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிகளில் நாளை (திங்கள்) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு தொகுதிகளின் தேர்தல் வெற்றி அதிமுகவுக்கும், திமுகவுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த இரு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு அதிக அளவு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். 

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

Oct 20, 2019 0:08:43

Description:

The news bulletin was broadcasted on 20 October 2019 at 8pm.

-

நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (20 அக்டோபர் 2019)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Changes will see more skilled migrants moving to South Australia - தெற்கு ஆஸ்திரேலியாவில் குடியேற விசா கிடைப்பது எளிதாகிறது!

Oct 20, 2019 0:05:24

Description:

More skilled migrants will be coming to South Australia under changes to the regional migration program coming into effect next month.

Jarni Blakkarly for SBS News explains. RaySel for SBS Tamil.

-

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி, மெல்பன் போன்ற பெரும் நகரங்களில் புதிதாக குடியேறுவோரை அனுமதிப்பதை கடுமையாக்குகிறது அரசு. அதேவேளையில், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து போன்ற மாநிலங்களில் புதிதாக குடியேறுவோருக்கு அரசு விசா வழங்குவதை அடுத்த மாதம் முதல் எளிதாக்குகிறது.   

SBS News இன் Jarni Blakkarly எழுதிய விவரணம் விளக்குகிறது. தமிழில்: றைசெல்.

Our Australia: Joseph Lyons - பதவியில் இருக்கும்போது காலமான ஒரே பிரதமர்!

Oct 20, 2019 0:07:19

Description:

Joe Lyons was the Premier of Tasmania before entering federal parliament. He was one of Australia’s longest serving Prime Ministers and co-founded the United Australia Party, which held government from 1931 through to 1941. Lyons died while still in office in 1939. Mr.Siva Kailasam of 4EB Tamil Oli explains the contributions of Joseph Lyons in “Namma Australia”. Produced by RaySel.

-

ஆஸ்திரேலிய அரசியலில் யாருக்கும் கிடைக்காத ஒன்று Joseph Lyons அவர்களுக்கு கிடைத்தது.  பிரதமர் பதவியில் இருக்கும்போது அவர் காலமானார். இப்படி பல  தகவல்களோடு Joseph Lyons அவர்களின் பணிகள், வாழ்வு, சாதனைகள் பொதிந்த “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைக்கிறார் 4 EB தமிழ் ஒலியின் சிவா கைலாசம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.    

OK to pressure children to achieve in HSC / VC etc. exams? - பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற பெற்றோர் அழுத்தம் தருவது சரியா?

Oct 20, 2019 0:14:17

Description:

Parents in Tamil community in Australia tend to pressure their children to score high in examinations. Is it right? Is it helping children?

Participants of the panel discussion: Babu in Sydney, Padma Laxman of Brisbane’s 4EB Tamil Oli, Beema Yusuf in Sydney and Educationist  Dr.Ganesh in Melbourne.  Produced by RaySel.   

-

நாட்டில் துவங்கியிருக்கும் HSC, VC போன்ற உயர்நிலை பள்ளிக்கூட தேர்வுகளில் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்று பெற்றோர் அழுத்தம் தருவது நம் சமூகத்தில் அதிகமாக நடந்துவருகிறது. இது சரிதானா?

பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துரையாடுகின்றனர் மாணவர்களுக்கான பயிற்சி நிலையத்தில் பணியாற்றும் பாபு, பிரிஸ்பேன் நகரில் இயங்கும் 4EB தமிழ் ஒலியின் பத்மா லட்சுமணன், சிட்னி நகரில் வாழும் பீமா யூசுப் மற்றும் மெல்பன் நகரில் வாழும் முனைவர் கணேஷ் ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.  

Tamils and Tamizhakam in Chinese eyes - சீனர்களின் பார்வையில் தமிழரும் தமிழகமும்

Oct 18, 2019 0:14:47

Description:

The Chinese and Tamil communities have celebrated thousands of years of friendship. And this rich bilateral exchange has been recorded by several monks and traders.

-

சீன மற்றும் தமிழ் சமூகங்கள், இரண்டாயிரம் வருடங்களாக நட்பைக் கொண்டாடியுள்ளன என்றும், இருதரப்பினரிடையே நிகழ்ந்த பரிமாற்றம் குறித்து பல துறவிகள் மற்றும் வர்த்தகர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று, பெய்ஜிங் வெளியுறவு பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையைச் சேர்ந்த ஜோ சின் ஆராய்ந்து அறிந்துள்ளார்.  அது குறித்து குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொள்கிறார்.

 

"There is no point supporting either of the two main candidates,Gotabaya or Sajith" - "உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே இலங்கை அதிபர் தேர்தலில் ப

Oct 18, 2019 0:23:38

Description:

Former MP of the Tamil National Alliance (TNA) M. K. Sivajilingam has submitted deposits for the upcoming presidential election as an independent candidate. Mr.Sivajilingam talks to Renuka about his candidacy.

-

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்ற செய்தி நாமறிந்த ஒன்று. இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர்மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பிலும் அவர் ஏன் போட்டியிடுகின்றார் என்பது தொடர்பிலும்  சிவாஜிலிங்கம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா.

Many newcomers to Australia exploited by their employers - ஆஸ்திரேலியாவிற்குப் புதிதாகக் குடிவந்தவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்

Oct 18, 2019 0:03:21

Description:

Every year, thousands of newcomers to Australia are exploited by their employers.

-

புதிதாக ஆஸ்திரேலியா வந்தவர்கள் பலர், அவர்களுடைய முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள்.  பரவலாக நடக்கும் இந்த சுரண்டல் மூலம் பில்லியன் கணக்கான டொலர்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் போகிறது என்று தொழில்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

Oct 18, 2019 0:06:13

Description:

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.    

-

இலங்கையில், யாழ். சர்வதேச விமான நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது, மற்றும் எதிர்வரும் அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பத